பலரும் பூஜைகள் இறைவனுக்காக செய்யப்படுபவையாக நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல, உலகைப் படைத்தவன் தனக்கு லஞ்சம் கேட்பானா, அல்லது அற்ப உணவினை தனக்கு தந்தாய் என்றால் தான் உனக்கு உதவி செய்வேன் என்று நிபந்தனை போடுவானா?
பூஜைகள் மனப் பண்பினை உண்டாக்கும் ஒருவித பயிற்சி! சரியான விளக்கம் அறிந்து பூஜை செய்வதால் மனப் பண்பு உயர்ந்து அகவாழ்வு மேம்படும்.
உயர்ந்த சக்தியைப் பெற வேண்டுமானால் அதற்கு தகுந்த உயர்ந்த பண்பு அவசியம்! அந்தப் பண்புகளை பெறும் ஒரு பயிற்சியே பூஜை.
ஆவாகனம், ஸ்தாபனம், சந்தன, குங்குமம், அக்ஷைதை, தாம்பூலம், தூப தீபங்கள் எல்லாம் ஒருவன் தனது அகப் பயணத்தை ஆரம்பிக்க தேவையான மனப் பக்குவத்தை பெறுவதற்குரிய சடங்குகள்.
இன்று யோகம் கற்கிறோம் என்று உடம்பை வளைத்து வித்தை காட்டும் அளவிற்கு அகப் பக்குவம் பெறும் முயற்சி இல்லை. பூஜை, ஜெபம் என்பவை ஏதோ தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுக்கான சடங்குகள் என்றும் தாம் அதை விட உயர்ந்த யோக இரகசியங்களை கற்பதாக மனப்பால் குடிக்கிறார்கள்.
பக்குவம் பெறாதவன் அறியும் யோக நுணுக்கங்களால் எந்தப் பயனும் பெற்றுவிட முடியாது.
பூஜைகளை ஆடம்பரச் சடங்காக்கி, மனப்பக்குவம் பெறும் வழியாக்காமல் தமது ஆடரம்பரத்தை, பணபலத்தைக் காட்டச் செய்யும் நிகழ்வாக்கி விட்டதால் ஏற்பட்ட நிலையே இன்றைய பூஜைகள் மக்களது அகவாழ்விற்கு பலன் தரும் நிலையை இல்லாமல் ஆக்கிவிட்டது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.