ஸ்ரீ வித்யா நவாவரண பூஜை தொடங்கும்போது முதலாவது படி மந்திர ப்ரவேசம,
இதில் மூன்று தேவதைகள் வணங்கப்படும்.
1) பத்ரகாலி
2) பைரவர்
3) லம்போதரர்
இவர்கள் மூவரும் த்வார தேவதைகள் என்பப்படுவர்.
இதன் தத்துவார்த்தம் ஒருவனுக்கு மங்களமான காலமும், குருவின் அருளும் இருந்தால்தான் அவன் உயர் ஞானத்தைப் பெற துவாரமாகிய மூலாதாரத்தினுள் புக முடியும்.
சிலருக்கும் காலம் வாய்க்கும், ஞானம் பெறவேண்டும் என்ற தாகத்தில் அலைவார்கள் குரு கிடைக்க மாட்டார்.
சிலருக்கு குரு பக்கத்தில் இருந்து சொல்லிக்கொடுக்க வாய்ப்பு எல்லாம் இருக்கும், அவர்கள் ஏதாவது காரணம் சொல்லி விலகிச் சென்று கொண்டே இருப்பார்கள்.
ஆக குருவும் காலமும் ஒன்றாக வாய்த்தால் மட்டுமே ஒருவன் உயர் ஞானத்திற்குள் புகமுடியும் என்பதே மந்திர ப்ரவேசம் என்பதன் அர்த்தம்.
இதை ஆழ்மனத்திற்கு உணர்த்த, அதற்குரிய பிரபஞ்ச மகாசக்தியை எம்மில் விழிப்பிக்க த்வார பூஜை செய்யப்படுகிறது.
ஞானம் மூலாதாரத்தில் லம் என்ற பிருத்வி ரூபத்தில் மறைந்திருக்கிறது. அங்கு தொடங்கி ஒன்பது திரைகளையும் ( நவ ஆவரணங்களையும்) விலக்கினால் தேவியின் பூரண ஸ்வரூபம் விளங்கும் என்பது நவாவரண பூஜையின் விளக்கம்.
முதல் நிபந்தனை காலமும் குருவும் ஒன்றாக அமையவேண்டும் என்பது.
பின்னர் மூலத்தில் வீற்றிருக்கும் கணபதியின் அருள்,
லம் மூலாதாரத்தின் பீஜம், போதம் அறிவு, மூலாதாரத்திலிருந்து அறிவினை விழிப்படையச்செய்து அம்பிகையை அடைவிப்பவன் லம்போதரன், ஆக ஞானமாகிய த்வாரத்தில் நுழைய காலம், குரு, மூலாதாரத்து கணபதி ஆகிய மூவரும் அவசியம்.
த்வார பூஜை சொல்லும் இரகசியம் காலத்தையும், குருவையும், மூலத்தையும் (மூலாதாரத்து வீற்றிருக்கும் கணபதியையும்) சரியாக ஒருபுள்ளியில் பெறுபவர் அம்பிகையின் ஞானமாகிய நவாவரணத்தில் புக முடியும் என்பது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.