ரசவாதி என்று உலகப்புகழ் பெற்ற ஒரு தத்துவ நாவல், தமிழில் கிடைக்கிறது!
இதில் ஒரு ஞானிக்கும், ஞானம் பெறவந்த இளைஞனுக்குமான உரையாடல் வாழ்வை எப்படி சம நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்துக் கொள்ள அனைவருக்கும் தேவையானது.
ஞானம், மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்று சென்ற இளைஞன் ஒருவர் ஒரு பெரிய மாளிகையில் வசிக்கும் ஞானியை சந்திக்கிறார். அவர் அவனைச் சந்திக்க நேரமாகும் என்று அந்தப் பெரிய மாளிகையை சுற்றி வரும்படி கூறி ஒரு கரண்டியில் இரண்டு துளி எண்ணெயை கொடுத்து அதை சிதறாமல் கொண்டு வரவேண்டும் என்று நிபந்தனை கொடுத்து வரப் பணிக்கிறார். அவனும் அதன் படி செய்து எண்ணெயை சிதறாமல் கொண்டு வருகிறான். பின்னர் ஞானி கேட்கிறார் அழகிய திரைச் சீலைகளைப் பார்த்தாயா? பூந்தோட்டத்தைப் பார்த்தாயா? நூலகத்தைப் பார்த்தாயா? என்று அதற்கு இளைஞன் எதையும் பார்க்கவில்லை எண்ணெய்த் துளி சிதறி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால் எதையும் பார்க்கவில்லை என்றான்.
அதற்கு ஞானி சரி இன்னொரு தடவை சென்று அதே எண்ணெய் கரண்டியுடன் சென்று எல்லாவற்றையும் பார்த்து வா என்று சொல்ல இளைஞனும் சுற்றி பார்த்து வந்தான். வந்த உடனே தான் பார்த்த எல்லாவற்றையும் அப்படியே சரியாக ஒப்புவித்தான். எல்லாவற்றையும் கேட்ட ஞானி சரி எண்ணெய்த்துளி எங்கே என, கொட்டி விட்டது என்றான்.
சிரித்துக் கொண்ட ஞானி எப்போது எண்ணெய்த்துளியை சிந்தாமல், உலகின் அழகையும் இரசிக்கப் பழகுகிறாயோ அப்போது உனக்கு மகிழ்ச்சிக்கான வழி கிடைக்கும் என்று கூறினார்.
இதுப் போலவே நாம் எமது தினசரி வாழ்வில் சம நிலை இன்மையால் தொழில், படிப்பு, குடும்பம் என்று ஒன்றை மட்டும் கவனித்துக் கொண்டு அழகிய உலகின் இன்பங்களை அனுபவிக்கத் தவறி விடுகிறோம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.