கிருஷ்ணன் மனித குலத்தில் முதல் சூழலியல் விவசாய விஞ்ஞானி!
கிருஷ்ணன் மனித குலத்தின் உணர்வை உயர்த்தியவன். கிருஷ்ணனிற்கு முன்னர் மனித குலம் தெய்வமனமாகிய இந்திரனுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்துக் கொண்டிருந்தது. இதன் அர்த்தம் இயற்கையை வெல்ல முடியாமல் இயற்கைக்கு அடிமைப்பட்டிருந்தது. மழை வெள்ளம், வரட்சி இவற்றை சமாளிக்கும் அறிவாற்றல் இல்லாத மனித சமூகம். கிருஷ்ணனே மனிதன் தெய்வ மனத்தையும் ஆளமுடியும் என்று மனிதனுக்கு புகட்டியவன்.
கிருஷ்ணன் இயற்கை விவசாயத்தின் முன்னோடி! கோபாலன், கோ என்பது பசு! பசுவும் மண்ணும் நுண்ணுயிரும் ஒன்றை ஒன்று போசிக்கும் ஒன்றிய வாழிகள்!
மண்ணில் வாழும் மண்ணை வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் பசு புல்லை உண்ணும் போது வயிற்றினுள் சென்று அதன் போலி இரைப்பையில் வளர்ந்து சாணத்துடன் வெளிவருகிறது. பசுவின் சாணமும், கோமியமும் மண்ணில் உள்ள நுண்ணங்கிகளை வளர்க்கும் நல்ல ஊடகம். இரண்டுடன் காட்டில் விழும் பழங்களின் அழுகல் மண்புழுவிற்கு நல்ல விருந்து. மண்புழு மண்ணை உழ, நுண்ணுயிரி மண்ணில் உள்ள கனிமத்தை தாவரம் உறிஞ்சத்தக்கதாக உடைக்க, மண் வளமாக, காடு வளர, விவசாயம் செழிக்கும்.
மண்ணின் உயிர் என்பது தற்போதைய விவசாயக் கல்லூரிகள் சொல்லித் தரும் நைதரசன், பொசுபரஸ், பொட்டாஸியத்தின் (NKP) அளவு அல்ல. எவ்வளவு மண்புழுவும் நுண்ணுயிரிகளும் மண்ணில் இருக்கிறது என்பதே மண்ணின் உயிர்த் தன்மை!
இப்படி மனித குலம் பசுவை ஆதரித்தால் விவசாயம் ஓங்கும். ஆகவே பசுவை ஆதரிக்க வேண்டும் என பசுவையே தனக்குப் பிரியமாக்கிச் செய்தி சொன்னவன் கிருஷ்ணன்.
இயற்கையின் நியதி மண்ணில் வித்து ஊன்றி, வேர் படர வைத்து, நீர் ஈர்த்து, மரமாகி ஆகாயத்தில் பழமாக நிலைக் கொண்டு கனிந்த கனி வித்தாகி மீண்டும் மண்ணிற்கு வருகிறது.
இதைத் தான் இன்று Sustainability என்று எல்லா நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கில் பணங்கறந்து பாடம் எடுக்கிறார்கள்.
ஒவ்வொருவனும் தான் வளர்ந்த மண்ணிற்கு உரமாக வேண்டும். இப்படிச் செய்தால் உலகம் வளம் பெறும்! வளங்கள் பெருகும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.