பூமியில் நீங்கள் எங்கு வாழுகிறீர்கள் என்பது உங்கள் சிந்தனையிலும் வாழ்க்கை முறையிலும் செல்வாக்குச் செலுத்தும்.
புவியில் மத்திய கோட்டிற்கு அண்மையில் வாழும் மனித சமுதாயங்கள் இயற்கையுடன் இயைந்து வாழும் கலாச்சாரம் உள்ளவை, இந்த எல்லைக்குள் சூரிய ஒளியும், நீர்வளமும் நிரம்பி மனித இனம் வாழும் வசதிகளை இயற்கை ஏற்படுத்தியுள்ளது. இன்றும் உலகின் உற்பத்தி இந்தப் பிரதேசத்தில் இருந்து தான் மேற்கத்தைய நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
இதற்கு மேற்பட்ட இடங்கள் அதீத குளிரும், வெப்பமும் உள்ள இடங்களில் மனிதன் இயற்கையுடன் சண்டையிட்டு தன்னைக் காத்துக் கொள்ள வேண்டிய சிந்தனை வளர்ச்சி வேண்டியிருக்கிறது.
இப்படி இயற்கையுடன் சண்டையிட்டு தமக்கு தேவையான வளத்தை இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த சமூகத்தை சுரண்ட ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரமும், அரசியலும் உள்ள சமூகத்திலேயே நாம் இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படி இயற்கையால் தனது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டிய மனிதன் தனது சிந்தனை முறையை மாற்றுவதில் ஏற்படும் குழப்பங்களில் ஒன்று தான் இன்று நாம் பரவலாக காண்பது!
நாம் கீழைத் தேசத்தில் இயற்கையுடன் ஒன்றி அமைதியாக வாழ்ந்த வாழ்க்கை மேலைத் தேசம் சென்று கடுங் குளிரால் தலைவிறைக்கும் போது நாமும் இயற்கைக்கு எதிராக சிந்திக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறோம். சட்டையைக் கழற்றி விட்டு ஊரில் தென்றல் இன்பத்தை அனுபவித்த அதே காற்று, கொடுங்குளிராக கொன்றுவிடுவதை பார்த்து பயந்து, மீண்டும் ஊருக்கவந்தால் காற்றுப்பட்டால் உயிர் போய் விடும் என்று கோட்டு சூட்டு போட்டு வாழுகிறோம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிய முடியாமல் மனம் தடுமாறுகிறது.
இதைப் போன்ற நிலை தான் இன்று பலரும் கீழைத்தேய தத்துவ மரபுகளை மேலைத்தேய ஆபிரகாமிய மதங்களுடன் ஒப்பிட்டுக் கேலிபேசும் அறியாமை!
ஆழ்ந்து அகன்ற நுண்ணிய அறிவால் ஆராயாமல் கருத்துக் கூறுவது வெட்டிப் பேச்சு!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.