மன்னா காலகேயர்கள் நாட்டைத் துவம்சம் செய்து விட்டார்கள்!
ஐயையோ, அப்படியா! சென்ற வாரம் வெற்றிலை கொடுக்கும் போது பாதுகாப்பு பிரதானி ஏதோ சொன்னானே, அதுவா இது?
நாம் நினைத்ததை விட பயங்கரமான பாதிப்பு!
மனதிற்குள்ளே "அப்பாடா, நாம தப்பித்தோம், இது தெரிந்து தானே நாம் நாட்டை விட்டு ஓடி வேங்கட நாட்டிற்கு வந்தோம்"
சரி, எல்லாம் நல்லது தான், பிரதம மந்திரியின் தலையை உருட்ட நல்ல சந்தர்ப்பம்!
மன்னா அப்படிச் செய்ய முடியாது, நீங்கள் தானே நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பு!
மங்குனி அமைச்சரே இப்படிச் சொல்லி எனது கோவத்தைக் கிழறாதீர், நான் எப்படிப் பொறுப்பாக முடியும்! அதற்கு தான் ஒரு செயலாளர் இருக்கிறார், காவல் பிரதானி இருக்கிறார்! அவர்கள் தானே பொறுப்பாக முடியும்! அவர்களைப் பதவி விலகச் சொல்ல வேண்டும். நான் சொல்வதைச் செய்யும்!
முதலாவது என்னைப் பற்றி எவரும் மீம்ஸ் போட்டுவிடக் கூடாது, அத்துடன் காலகேயர்களை பிடிக்க முடியாது! ஆகவே மார்க் சுக்கபனின் அரசின் படைகள் இரண்டை தற்காலிகமாக சிறைப்பிடிக்க உத்தரவிடுகிறேன்!
மன்னா, மார்க் சுக்கப்பனின் அரசின் உதவியுடன் பாதிப்பு நடந்த இடங்களுக்கு பொருள் உதவியும், இரத்த உதவியும் நடக்கிறது, அது தடைப்பட்டுவிடும்! மேலும் எமது புலனாய்விற்கும் உதவியாக இருக்கும், காலகேயர்களுக்கு உதவுபவர்கள் தமது எண்ணத்தை வெளிக் காட்டுவார்கள்! இலகுவாக பிடித்து விடலாம்!
மங்குனி அமைச்சரே, நீர் வர வர பிரதம மந்திரியார் போல் பேசுகிறீர், வெகுவிரைவில் உமக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்! நான் சொல்லுவதை மட்டும் செய்யும்!
சரி மன்னா, உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடு செய்யவா?
மங்குனி அமைச்சரே, உமக்கு எனது திட்டமே புரியவில்லை! நான் ஏன் இங்கு வந்தேன் என்றும் புரியவில்லை! இந்த வெங்கட தேசத்திலும் காலகேயர்கள் இருக்கலாம், அதனால் உடனடியாக இங்கிருந்து கிளம்ப வேண்டும் தான், அல்லது என்னைக் குறிவைத்துவிட்டால் அதற்காக எமது நாட்டிற்கு உடனடியகத் திரும்பக் கூடாது! இப்போது சென்றால் என்னால் சமாளிக்க முடியாது என்று உமக்குத் தெரியாதா! ஆகவே உலகின் பாதுகாப்பான நாடான சிங்கபுரிக்கு செல்வோம்!
மந்திரியார் மனதிற்குள்,
மன்னா உங்களைப் போன்ற ஒருவரிற்கு காலகேயர்கள் கட்டாயம் குறிவைக்க மாட்டார்கள், உங்களைப் போன்ற ஒருவர் இருந்தால் தானே அவர்கள் இப்படியான காரியங்களை இலகுவாக செய்ய முடியும்! ஆகவே பயம் வேண்டாம்
புலிகேசியார், என்ன மந்திரியாரே மனதிற்குள் என்ன கேலிப்பேச்சு!
மந்திரியார்,
இல்லை மன்னா, மார்க் சுக்கப்பனை பிடிப்பதற்கான ஏற்பாடுகள் என்னவென்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்!
நல்லது அத்துடன் சேர்த்து வைபனை பிடித்து வையும்! அவனும் தேவையற்ற தகவல்களை பரப்பிக் கொண்டிருப்பான்!
ஆகட்டும் மன்னா!!!
~ 23ம் புலிகேசி இரண்டாம் பாக நாவலில் இருந்து ஒரு காட்சி ~
~ யாவும் கற்பனை ~
Disclaimer:
இது எனது கற்பனையில் உதித்த கதையின் ஒரு பாகம், இந்தக் கதையின் சம்பவங்களைத் தொடர்புபடுத்தி யாராவது செய்யும் சுயவியாக்கியானங்களுக்கு ஆசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பாகமாட்டார்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.