விவசாயம் என்பது மனிதனின் தேவைக்கானது என்ற நோக்கில் விவசாயத்தைப் பார்க்க உற்பத்தியைக் கூட்டுகிறோம்.
இயற்கை விவசாயம் என்பது உற்பத்தியைப் பெருக்கி அதிக இலாபம் காணும் தொழில் அல்ல, உற்பத்தியை ஆயிரமாண்டு காலம் நிலைத்து நிற்கச் செய்து மனிதகுலம் ஆரோக்கியமாக வைத்திருக்கும் வாழ்வியல் முறை!
உற்பத்தியைக் கூட்டுதல் என்பது இயற்கையில் இல்லை. இன்னொன்றிற்கு சேர வேண்டியதை நமக்கு கையடக்கப்படுத்திக் கொள்வது தான் அதிக விளைச்சல்.
பசுமைப்புரட்சி தந்த Hybrid இனங்கள் என்ற அதிக உற்பத்தியைத் தரும் தாவரங்களின் சூட்சுமம் இது தான்.
ஒரு தாவரம் உற்பத்தில் செய்யும் தனக்கான உணவில் 1/3 பங்கு தனது தினசரி உடலியற் தேவைகளுக்கும் 1/3 பங்கு தனது உடல் வளர்ச்சிக்கும் 1/3 உணவுச் சேமிப்பாகவும் சேர்த்துவைப்பதே இயற்கையின் உற்பத்தி விகிதம். இதில் நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்தது தாவரத்தை வளர விடாமல் உணவுச் சேமிப்பை அதிகரித்து தனக்காக திருடிக் கொள்ளும் தொழில் நுட்பத்தை. இதுவே பசுமைப் புரட்சி! இதனால் தான் Hybrid இனங்கள் குட்டையாகவும் அதிக விளைச்சல் தருபவையாகவும் இருக்கும். எப்படி Broiler கோழியோ அப்படித் தான் இந்த Hybrid இனங்களும்.
இப்படித் திருடிக் கொள்வதற்கு இயற்கை ஒத்துக் கொள்ளாது. ஆகவே செயற்கை உரம் தேவை, இப்படி வியாபாரப் பொருளாதாரத்தை உருவாக்கும் முறைக்கு நவீன விவசாயத்தை இட்டுச் சென்றது.
இப்படியான செயற்கை உர இடுபொருள்.
விவசாயத்தால் உற்பத்தி பெருக, இயற்கையின் சம நிலை குலைய, பத்து பதினைந்து ஆண்டுகளில் இந்த விவசாய நிலம் உவர் நிலமாகி மாறி தரிசு நிலமாகும்.
இந்த அறிவு விதையை தமிழர்களுக்கு விதைத்தவர் நம்மாழ்வார் ஐயா! அவரது பிறந்த நாள் இன்று!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.