சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதலுக்கு நோர்தன் பவர் நிறுவனத்திற்கு தண்டப் பணம் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்காடிய வழக்கறிஞர்களின் திறமையால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 02 கோடி அபராதம் என்பது அந்த நிறுவனத்திற்கு மிகச் சிறிய தொகை, just 87,752 GBP, இந்த தொகை அந்த நிறுவன முதலாளியின் ஒரு நாள் செலவாக இருக்கும். அபராதத் தொகை என்பதை விட சூழல் மாசடையச் செய்துவிட்டு சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பதை நீதித்துறை நிலை நாட்டியுள்ளது சிறப்பானது!
சூழல் மாசடையச் செய்ததற்கான தண்டனை பணம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று! ஏனெனில் நீரில் விஷத்தைக் கலந்து விட்டு விஷம் கலந்துவிட்டது மன்னித்துக் கொள்ளுங்கள், அதற்கு நஷ்ட ஈடு இவ்வளவு என்பதை எப்படி மதிப்பிடுவது என்பது சிக்கலான விஷயம்.
சூழலியல் ரீதியாக தற்போதைய நிலையில் இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட முடியாததும், நினைப்பதைவிட பாரதூரமானதும் என்பதே உண்மை.
முழு யாழ் குடா நாட்டின் நிலத்தடி அமைப்பும் Miocene limestone எனப்படும் சுண்ணக்கல் பாறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இந்தப் பாறைகள் இடையிடையே karsts எனப்படும் துவாரங்கள் கொண்டவை. இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. இதனால் தான் நிலாவரை கிணறு வற்றாமல் நீர்கிடைப்பது, நிலாவரை கிணற்றில் எலுமிச்சை போட்டால் கீரிமலை கேணியில் கிடைக்கும் என்ற ஊர்வழக்கு கதைகளில் உள்ள உண்மை இது தான்.
இப்படியான நிலவமைப்பில் நிலத்தில் போடும் கழிவுகள் எல்லாம் நிலத்தடி நீரில் கலந்து நீரை மாசுபடுத்தும். ஆக யாழ்குடா நாடு சரியாக மாசுக் கட்டுப்பாடு முன்னெடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய சூழல் மாசடைதல் பிரச்சனைகளை எதிர் கொள்ளப் போகிறது என்பது தான் உண்மை.
மேற்குறித்த நிலத்தடி நீர் மாசடைதலுக்குரிய சரியான தீர்வு முழுமையான நிலத்திடி நீர்படுக்கை சுத்திகரிப்பு (Restoration of contaminated aquifer), இதை முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் பற்றி உரையாடப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குரிய விடயமே!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.