குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 30, 2011

ஞானகுரு 10: பிரணவ மந்திரத்தின் பயன்

ஸ்லோகம் - 02

வாக்கியம் 07: பிரம்மனின் ஒரேழுத்தைப்பற்றி விசாரித்தறியுங்கள்
எல்லாவற்றுடனும் எல்லாமாயிருப்பது இறைசக்தி, இதனை எப்படி அறிவது? உணர்வது? அதற்கு பெயர் வேண்டும், அந்தப்பெயர்தான் பிரணவ மந்திரமாகிய "ஓம்" என்பது. இந்த ஒரு எழுத்தில் அனைத்து மந்திரங்களும் தத்துவங்களும் அடங்கியிருப்பதாக வேத உப நிஷதங்கள் கூறுகின்றன. எந்த மந்திரமும் பிரணவம் இல்லாது உயிர்பெறாது. உலகத்திற்கு விதையாக இருப்பதே இந்த பிரணவ மந்திரம் தான். இந்த மந்திரத்தினை தனியே உச்சரித்தே முக்தி பெறலாம். இதை உணர்ந்த பெரியவர்களிடம் பெறுவதால் எமக்கும் சித்தியாகும், எப்போதும் அதனது உட்பொருளையும், அதனது பயனையும் அறிந்து செய்யும் சாதனையே பலன் தரும். அதன் பொருளை உணர்ந்து அனுபவித்தவர்களே அதனை உணர்த்த முடியும். எனவே முதல் வாக்கியத்தில் கூறிய அனுபவ வித்துவாங்களிடன் இந்த ஒரெழுத்து மந்திரத்தினைக் கேட்டறிந்து சாதனை செய்யுங்கள்.

Monday, August 29, 2011

ஞானகுரு 09: ஏன் பெரியவர்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும்?

ஸ்லோகம் - 02


வாக்கியம் 06: அவர்களின் பாதங்களை சேவியுங்கள்
ஒவ்வொரு மனிதனதும் பாதம் வழியாகவும், கண்கள் வழியாகவும் அவர்களது ஜீவகாந்த சக்தி வெளிப்படுகிறது என்று முன்பு கண்டோம். உண்மையினை அனுபவித்துக்கொண்டிருக்கும் வித்துவாங்களது கால்கள் வழியாக எப்போதும் இறை காந்த சக்தி வெளிப்பட்டுக்கொண்டிருக்கும். அவர்களை காணும்போதும், அவர்களது பாதங்களை சேவிக்கும்போதும் அப்புனித கிரகணங்கள் நம் காந்தசக்தியுடன் கலப்படைந்து நம் மனம், உடல், சித்தம் என்பவற்றில் புகுந்து எம்மில் அப்பக்குவத்தினை உண்டாக்குகிரது. குருவின் இந்த இறைகாந்த சக்தியினை தம்மில் ஏற்பதையே தீட்சை என்று கூறுகிறோம். தீட்சை என்பதன் உண்மையான பொருளும் இதுதான். இந்த ஒரு விதியினை சிந்திதறிவதன் மூலம் எமது கோயில் வழிபாட்டு முறையிலிருந்து, ஆண் பெண் உறவு, திருமணம், மந்திரசாதனை என்ற அனைத்தினது அடிப்படையினையும் விளங்கிக்கொள்ளலாம். அதனால் உண்மையினை அனுபவித்த பெரியார்களின் காந்தத்தினை பெறுவதன் மூலம் தம்மை பலப்படுத்திக்கொள்ளலாம். இந்த தெய்வகாந்த சக்தியினை பெறுவதற்காகவே கோயில்கள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய கோயில்களில் இந்த தன்மை இல்லை என்பது வேதனைகுரிய விடயம். இது பற்றி தனித்தொடரில் அறிவோம்.

Saturday, August 27, 2011

ஞானகுரு 08: இறை உண்மைகளை அறிய யாரை அணுகவேண்டும்?


ஸ்லோகம் - 02

வாக்கியம் 05: உண்மையை அறிந்த வித்துவான் அணுகுங்கள்
வித்துவான் என்பதற்கு படித்தவன் என்று பொருள், ஆயினும் படித்தவர்கள் எல்லோரும் உண்மையினை அறிந்தவர்களாக, உணர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. எழுத்தறிவே இல்லாத பலர் இறைவனருளை பெற்றிருக்கிறார்கள். படித்து தெரிந்துகொள்வது வேறு, அனுபவித்து தெரிந்து கொள்வது  வேறு. பெரும்பாலும் கல்வியறிவு என்பது உலக அறிவினைபெறுவதற்கான சாதனமே அன்றி உண்மைத் தத்துவத்தினை அனுபவிப்பதற்கான சாதனம் அன்று. இறைமானவர்கள் வெறும் பட்டதாரிகளிடம் பெறவேண்டியது எதுவுமில்லை. உண்மையினை அனுபவபூர்வமாக அறிந்தவர்கள்தான் அவர்களுக்கு உதவ முடியும். இந்த வாக்கியத்தின் பொருள் உண்மையினை அனுபவித்து அறிந்த வித்துவாங்களினையே இறைமானவர்கள் உபதேசத்திற்காகவும், ஐயம் தெளிவதற்காகவும் அணுகவேண்டும் என்பதாகும்


Friday, August 26, 2011

ஆன்மீகத்தில் முன்னேற, இறை சாதனையில் சித்திபெற விரும்புபவர்கள் படிக்கவேண்டிய பதிவுத்தொடர்


வாசிப்பவர்களது வசதிக்காக இந்தப்பக்கத்தில் ஞானகுரு பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. 

இந்தப்பதிவுகளில் ஏன் பலர் ஆன்மீகம் என்று சொல்லிக்கொண்டு எதுவித முன்னேற்றமும் அடைவதில்லை, சோம்பறிகளாக உலகவாழ்க்கையினையும் அனுபவிக்காமல், இறைவனையும் அடையாமல் தனது வாழ்க்கையினையும் குழப்பி, எதுவித பலனும் இல்லாமல் வாழ்ந்து மடிகிறார்கள். வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்ன? எப்படி இறை சாதனையினை தொடங்கவேண்டும்? இல்லறத்திலிருந்துகொண்டு ஆன்மீகத்திலும் உயர்ந்த நிலையினை அடைவது எப்படி? என்ற பல விளக்கங்க்கள் பதியப்படுகின்றன. படித்து இன்புறுக!

  1. காயத்ரி சித்தர் அருளிய ஞானகுரு
  2. ஞானகுரு - 01: இறை சாதனையில் சித்திபெற விரும்புபவர்கள் நாள்தோறும் செய்யவேண்டியவை
  3. ஞான குரு - 02: ஆன்மீகத்தில் முன்னேற எவற்றை கடைப்பிடிக்க வேண்டும்?
  4. ஞானகுரு - 03: ஆன்மீகப் பாதையில் முன்னேற இல்லறத்திலிருந்து ஓடவேண்டுமா?
  5. ஞானகுரு - 04: இறைவன் அருளை பெறவிரும்புபவர்கள் செய்யவேண்டியது?
  6. ஞானகுரு - 05: நல்லவர்களது நட்பு எப்படி எம்மை உயர்த்தும்?
  7. ஞானகுரு - 06: இறவனை அடையவும் மனம் வசப்படவும் இருக்கவேண்டிய பண்புகள்
  8. ஞானகுரு - 07: கர்மங்களை உறுதிகொண்டு விலக்குவதால் ஏற்படும் பலன் என்ன?
  9. சித்த சாதனையில் சித்தியடைய சாதகன் கொண்டிருக்க வேண்டிய‌ பக்குவங்கள் - 01

ஞானகுரு - 07: கர்மங்களை உறுதிகொண்டு விலக்குவதால் ஏற்படும் பலன் என்ன?


ஸ்லோகம் - 02

வாக்கியம் 04: கர்மங்களை உறுதிகொண்டு விலக்குங்கள்

பலர் தமக்கு தேவையில்லாத காரியங்கள் பலவற்றை எப்போதும் செய்தவண்ணம் இருப்பர். இதனை ஏன் செய்யவேண்டும்? இதன் விளைவுகள் என்ன? என்பதனை சிந்திக்காமல் காரியங்களை செய்வதன் மூலம் கர்மங்கள் அதிகரிக்கின்றது. காரியங்கள் அனைத்தும் பலன் தரக்கூடியவை, அதாவது எண்ணும் ஒரு எண்ணம் கூட மனதளவிலாவது பலனைத்தரும். அதை செய்யலாம் இதை செய்யலாம் என்ற எண்ணம் எழும்போது அதனது தேவை, விளைவு அறிந்து உறுதியுடன் ஆராய்ந்து அதனை செய்யலாமா இல்லையா என்பதனை முடிவெடுக்க வேண்டும். கர்மங்களை விலக்கவேண்டும் என்றவுடன் எதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று பொருள் அல்ல. எனெனில் கர்மத்தின் அமைப்பினை விளங்கியவர்களுக்கு தெரியும் கர்மம் என்பது செய்யப்பட்டது, செய்யப்படுவது, செய்யப்போவது என்று முன்று வகைப்படும். இதனையே சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாமியம் என்பர். மனிதனாக பிறந்தவர்கள் கர்மங்களை செய்யாமல் இருக்கமுடியாது, இருக்கவும் கூடாது.  கர்மங்களை செய்தே ஆகவேண்டும். இறைவழியில் சென்று பிறவாபேரின்பம் பெற விரும்புபவர்கள் புதிதாக கர்மம் சேராமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். இப்படி காரியங்களை உறுதியுடன் விலக்கினால் சித்தத்தில் புதிய கர்மங்கள் சேராது.

இதனை ஒரு உதாரணத்துடன் விளங்க முற்படுவோம். ஒரு கம்பனியில் ப்ராஜெக்ட் மானேஜர் (Project Manager) ஆக ஒருவர் இருக்கிறார், பல ஆண்டுகளாக வேலை செய்துவிட்டார், அடுத்து பதவி உயர்வையோ, அல்லது ஓய்வையோ விரும்புகிறார் என்றால் என்ன செய்யவேண்டும். அவர் தனக்கு தரப்பட்ட தற்போதைய வேலையினை விதிக்கப்பட்ட இலக்குகளுக்கு (Objectives) ஏற்ப சரியாக முடித்தல் வேண்டும். பின்பு புதிய ப்ராஜெக்டுகளை மேலதிகமாக ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல் வேண்டும். அதுபோல் நவீன மொழியில் ஆன்மீகத்தினை விளக்குவதானால் ஒவ்வொருமனிதனும் வாழ்க்கை என்பது ஒரு ப்ராஜெக்ட் (Project), அந்த ப்ரொஜெக்டினை நடாத்த வந்திருக்கும் மானேஜர் தான் மனிதன். ப்ராஜெக்டில் இலக்குகள், காலக்கெடு இருப்பதைப்போல் மனிதவாழ்க்கையிலும் சரியான இலக்குகள் இருக்கின்றன. அவற்றை அறிந்து எமது ஆயுள்காலத்திற்குள் அடைவோமானால் சித்தர்கள், முனிவர்கள் பெற்ற பதவிஉயர்வினையும் (Promotion) பெறலாம், அல்லது பிறவாப்பேரின்பம் எனும் ஓய்வினையும் (Retirement) பெறலாம்.

இந்த வாக்கியத்தில் சொல்லப்பட்ட அறிவுரை நீங்கள் திறமையான ப்ராஜெக்ட் மனேஜராக இருப்பதற்கு தங்கள் இலக்கில் மட்டும் கவனம் வையுங்கள் என்பதும் எப்போதும் எந்த விடயத்தினை செய்வதற்குமுன்னும் அதனுடைய விளைவுகள் பலன்களை தீர ஆராய்ந்து செய்யுங்கள் என்பதாகும்.  இந்த உபதேசத்தினை ஆன்மீக முன்னேற்றத்திற்கும் பின்பற்றலாம், உலகியல் முன்னேற்றத்திற்கும் பின்பற்றலாம்.

Thursday, August 25, 2011

ஞானகுரு - 06: இறைவனை அடையவும் மனம் வசப்படவும் இருக்கவேண்டிய பண்புகள்


ஸ்லோகம் - 02


வாக்கியம் 02: இறைவனிடத்தில் உறுதியான பக்தி கொண்டிருங்கள்
சித்தவித்தையின் படி பக்தி என்பதன் இலக்கணம் சிவவாக்கியர் கூறியபடி இருத்தல் வேண்டும், "நட்டகல்லைத் தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே சுத்தி வந்து மோன மோனென்று சொல்லும் மந்திரம் ஏதடா? நட்ட கல்லு பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்", பக்தியென்ற பெயரில் வீணாக செலவுசெய்தல், ஆடம்பர விழாக்கள் எடுத்தல் என்பன எதுவும் உண்மைபக்தியாகாது. எமது உள்ளத்திலிருக்கும் இறைவனை அறிந்து உணர்ந்து, செய்யும் செயல்கள் யாவற்றையும் அவன் ஆணைக்கு ஏற்ப செய்துவருதலே உண்மை பக்தி, அதாவது தம்மில் இறைவனைக்கண்டு பின்பு இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் இறைவனைக்காணலே உண்மையான பக்தி. இப்படியான பக்தியினை உறுதியாக கொள்ளுங்கள் என்கிறார்.

வாக்கியம் 03: அமைதி முதலான நற்பண்புகளை உலகில் சம்பாதியுங்கள்
அமைதி முதலான நற்பண்புகள் எவை? சமம், தமம், விடல், சகித்தல், சமாதானம், சிரத்தை ஆகிய ஆறு பண்புகளே இறை மாணவர்கள் கைக்கொள்ள வேண்டிய பண்புகள்.
  • சமம்: மனதில் கலக்கமும் சஞ்சலமும் உண்டாகாமல் எதிலும் அமைதியாக இருத்தல் சமம் எனப்படும்.
  • தமம்: மனம் போனபோக்கில் செல்லவிடாமல் வெளியின்பங்களில் பற்றுதல் உண்டாகாதவண்ணம் மனதை அடக்கிப் பழகல்.
  • விடல்: கிட்டாதாயின் வெட்டென மறத்தல் வேண்டும், வீண் ஜம்பத்திற்காக எதையும் பற்றிக்கொள்ளக் கூடாது.
  • சகித்தல்: நன்மை தீமை, உயர்வு, தாழ்வு, மானம், அவமானம் போன்ற இருமைகளைபொறுத்துக்கொண்டு பொறுமை காக்கும் பண்பு.
  • சமாதானம்: கருத்து வேற்றுமைகளை அதிகரித்து, வீண்வாக்குவாதங்களில் ஈடுபட்டு ஒருங்கிசைவைக் குலைக்காமல் சமாதானமாக இருக்கப்பழகல்
  • சிரத்தை: எக்காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் சிரத்தையுடன் ஈடுபடல் வேண்டும், அவ்வாறல்லாத காரியம் வெற்றி பெறாது.
இந்த ஆறு பண்புகளையும் மேற்கொண்டு வருபவர்களுக்குதான் மனம் குவியும், தியானம் வசப்படும். இப்பண்புகள் இல்லாதவர்களுக்கு மனம் ஒரு நாளும் கட்டுக்கடங்காது, அதனால் இறைவழிபாடும் பயன்படாது. மனதைக்கட்டுப்படுத்தும் சாதனங்கள் இவை.  










Wednesday, August 24, 2011

ஞானகுரு - 05: நல்லவர்களது நட்பு எப்படி எம்மை உயர்த்தும்?


ஸ்லோகம் - 02

நல்லறிவால் நிற்க விரும்புபவர்களே,
  1. எப்போதும் நல்லோர்களின் கூட்டுறவையே கொள்ளுங்கள்
  2. இறைவனிடத்தில உறுதியான பக்தி கொண்டிருங்கள்
  3. அமைதி முதலான நற்பண்புகளை உலகில் சம்பாதியுங்கள்
  4. கர்மங்களை உறுதிகொண்டு விலக்குங்கள்
  5. உண்மையை அனுபவமாக உணர்ந்த வித்துவான்களை அணுகி,
  6. அவர்களின் பாதங்களை சேவித்து, அவர்களிடம்
  7. பிரம்மனின் ஒரேழுத்தைப்பற்றி விசாரித்தறிந்து
  8. வேதங்கள் கூறும் மகா வாக்கியங்களைக் கேட்டறியுங்கள்


வாக்கியம் 01: எப்போதும் நல்லோர்களின் கூட்டுறவையே கொள்ளுங்கள்
பிரபஞ்சத்தில் அனைத்துப் பொருட்களும் ஒருவித காந்த கிரகணங்களை தம்மை சூழ வெளிவிடுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் Aura என்பார்கள். இந்த ஜீவகாந்தமண்டலங்கள் ஒவ்வொரு பொருட்களுக்கும் தனித்துவமானது, மனிதனது காந்த மண்டலம் அவனது மனம், சித்தத்திலுள்ள எண்ணங்களுக்கு ஏற்ப அந்த எண்ணக்கலப்புடன் காணப்படும். ஜடப்பொருட்கள் இக்காந்த அலைகளை ஏற்று பின்னர் வெளிப்படுத்தியவண்ணம் இருக்கும். இந்த காந்த மண்டலங்கள் சாதாரண பௌதீகவியல் விதிகளுக்கமையவே செயற்படுகின்றன. எப்படியெனின் வலிமையான அடர்த்தி கூடிய காந்தமண்டலத்திலிருந்து வலிமை குறைந்த அடர்த்தியற்ற காந்தமண்டலத்திற்கு இந்த ஜீவகாந்த அலைகள் பாயும் தன்மையுடையவை. இதை உணர்ந்த ஔவையார் "நல்லாரைக் காண்பதுவும் நன்று என்றும் தீயாரை காண்பது தீது" என்றும் கூறியதன் உட்பொருள் இதுதான். நல்ல ஒருவரை நாம் காணும்போது அவரது நல்ல ஜீவகாந்த அலைகளை நாம் ஈர்த்துக்கொள்கிறோம், அதுபோல் தீயவரைக்காணும் போது தீய ஜீவகாந்தத்தினை ஈர்க்கிறோம். இந்த ஜீவகாந்தம் எம்மில் பதியும் அளவிற்கு அது எமது எண்ணம், செயல், வாழ்க்கை என்பவற்றில் செல்வாக்கு செலுத்தும். நாம் நல்லவராக இருப்பினும் வலிமையான தீயவருடன் சேரும்போது மெதுவாக அவரது தீய ஜீவகாந்த அலைகளால் ஆட்கொள்ளப்பட்டு நாளடைவில் தீயவராகி விடுவோம், அதுபோல் நல்லவருடன் சேரும் தீயவனும் நாளடைவில் நல்லவராகி விடுவர். ஆகையால் இறைவழியில் நின்று முன்னேற விரும்புபவர்கள் தாம் நல்ல ஜீவகாந்த சக்தியினை பெற்று வலிமையுறும் வரை தம்மில் தீயபிரபாவம் புகுந்துவிடாதவண்ணம் நல்லோரது கூட்டுறவினை கொண்டிருத்தல் அவசியம்.கொண்டிருத்தல் அவசியம்.

Tuesday, August 23, 2011

சித்த சாதனையில் சித்தியடைய சாதகன் கொண்டிருக்க வேண்டிய‌ பக்குவங்கள் - 01


  
நல்லறிவால் நிற்க விரும்புபவர்களே
1.     நாள் தோறும் வேதங்களை படியுங்கள்,  
2.     அதைக் கொண்டு இறைவனை வழிபடுங்கள்
3.     அதில் சொல்லியபடி கர்மங்ககளை செய்யுங்கள்
4.     பலனை நாடி கர்மங்களை செய்வதை விலக்குங்கள்
5.     பாவங்களை அகற்றுங்கள்
6.     உலக இன்பங்களை அனுபவிப்பதில் குற்றம் நேராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்
7.     எப்போதும் தன்னையறியும் முயற்சியை செய்யுங்கள்
8.     இல்லற பந்தத்திலிருந்து விரைவில் வெளியில் வாருங்கள்

வாக்கியம் 01:
நாள் தோறும் வேதங்களை படியுங்கள்
இது எந்த நூலையும் குறிப்பதல்ல. சித்த வித்தையின் படி அறிவு என்று பொருள் படும். மனிதப்படைப்பின் முதன் முதலில் பிரபஞ்ச இரகசியங்களையும், உயிரினங்க்களின் வாழ்க்கை முறையினையும் படைத்த இறைவனே சொல்லி இருக்கிறார் என்ற கருத்தை எல்லா மதங்களும் கூறியிருக்கின்றன. இப்படி பிரபஞ்ச உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். இதனை பின்னர் மக்களின் பரிணாம நிலைக்குத்தக்க உபநிடதம், வேதாந்த சித்தாந்த நூல்களாக தொகுத்தளித்தனர். ஆக வேதம் எனப்படுவது பிரஞ்ச உண்மைகளை கூறும் நூற்களின் தொகுப்பு எனக்கொள்ளவேண்டும். இந்த நூற்களை அதில் சொல்லப்பட்ட விடயங்களை இறையருளைப் பெறவிரும்பும் யாரும் தினமும் படிக்க வேண்டும். நாள் தோறும் மனதில் அதன் கருத்துக்கள் புகுத்தப்பட்டால் மனம் தானாகவே அதே கருத்தில் இயங்க்கத்தொடங்கும். சில நாட்கள் படித்து மற்றைய நாட்களில் வேறு நூற்களையும் படித்து வந்தால் மனம் இறையெண்ணத்தில் இயங்காது போகும். இதன் அடிப்படியிலேயே ஒரு மண்டலம் சாதனை செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. இறையருள் பெற மனவடக்கம் முதன்மையாதலால் அதற்கு நாள் தோறும் தவறாமல் பிரபஞ்ச உண்மைகளை கூறும் வேத நூற்களை படிக்கும் பழக்கத்தை மேற்க்கொள்ள வேண்டும்.  

வாக்கியம் 02:
அதைக் கொண்டு இறைவனை வழிபடுங்கள்
கடவுளை வழிபட்டுய்ய வேண்டும் என்று விரும்பும் பலர் தவறான நூல்களைப் படித்து அதன் படி செய்ய முயற்சிகின்றனர். இத்தகையோர் பல்லாண்டு காலம் வழிபாடுகளை செய்தும் இறையுதவி பெற இயலாமல் "இறையே பொய்" என்ற முடிவுக்கு வந்து வீழ்ச்சியுறுகிறார்கள். இந்த முறையே தவறு, எந்தவொரு கலையினையும் கற்று தேர்ச்சி பெற விரும்புபவர்கள் தானே சில நூற்களை படித்து மனம் போன போக்கில் அதைச்செய்யக் கூடாது. அதில் முன்பே தேர்ச்சிபெற்ற அனுபவமுடைய ஒரு ஆசிரியரை அணுகி அவர் சொல்லும் அனுபவ செயன் முறை விளக்கங்களை கற்று அதனை தன் அனுபவத்திற்கேற்ப வகுத்து கொண்டால் தான் அக்கலையாலாகும் நன்மையினைப் பெற்றுக்கொள்ளமுடியும். ஆக இந்த வாக்கியத்தின் மறை பொருளை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும்

வாக்கியம் 03:
அதில் சொல்லியபடி கர்மங்ககளை செய்யுங்கள் 
உடல், வாக்கு, மனங்களில்  கர்மங்கள் செய்யப்படுமகின்றன. இக்கர்மங்களின் பலனாகவே நன்மை தீமைகளை அனுபவிக்கப் பிறப்புகள் பல உண்டாகின்றன. நல்ல காரியங்களை செய்தால் எடுக்கும் பிறப்பு நன்மைகளையும் தீய கர்மங்க்களை செய்தால் எடுக்கும் பிறப்பு தீய பலனை அனுபவிக்கவும் செய்யும். மனிதன் எந்தக்காரியத்தையும் செய்யாமல் இருக்க முடியாது. மனதால் எண்ணுவதும் கர்மம்தான் இப்படி எந்தக்கர்மத்தை செய்தாலும் பிறவி தப்பாது. அப்படியானால் எப்படி பிறவாப்பேரின்பம் பெறுவது? இதற்கு ஒரு வழி இருக்கிறது, எந்தக் காரியத்தை செய்தாலும் பலனை எதிர்பாரமல் செய்தால் அதனால் பிறவி வராது. பிரபஞ்ச விதிக்கமைவாக உள்ள காரியங்கள்.

வாக்கியம் 04: காம்ய கர்மங்களை விலக்குங்கள்

பலனை எதிர்பார்க்காமல் எப்படி காரியங்களை செய்யமுடியும்? என்ன காரியங்களை செய்வது? வேதமாகிய அறிவின் படி காரியங்களை செய்தால் பலனை எதிர் பார்க்கத்தேவையில்லை. நமக்கு வாழ்க்கை விதிக்கப்பட்டிருக்கும் காரியங்க்களை செய்தால் போதுமானது. இதயே கீதை வேறுவிதமாக சொல்கிறது "யோகந்த குரு கர்மாணி சங்க்கம் த்யக்த்வா"  யோக நிலையிலிருந்து கொண்டு தொடர்பில்லாத நிலையில் கர்மத்தினை செய்துவா, அக்கர்மங்களின் பயனாக உனக்கு பிறவி வராது. பிறவிப்பிணி அகலும். பிறவிக்கு காரணங்கள் கர்மங்களே, அக்காரணமான கர்மங்களை விலக்க வேண்டும். தொடர்ச்சியான இறைவழிபாட்டால் சித்தத்தில் கர்மத்தினால் ஏற்பட்ட பதிவுகள் நீங்கி பிறவிப்பிணி விலகும்.  ஆகவே காம்ய கர்மங்களை விலக்க தொடர்ச்சியான இறைவழிபாட்டை அதனைக்கற்று அறிந்த பெரியவர்கள் மூலம் தெரிந்து கொண்டு மேற்கொள்ளுங்கள்.

வாக்கியம் 05: பாபக்கூட்டங்களை அழியுங்கள்
ஒருவிதையிலிருந்து பல விதைகள் உண்டாவது போல் ஒரு பாபம் பல பாபங்களை உருவாக்கும். ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டும், பாபம் என்பதை தனியாக செய்ய முடியாது, அவை கூட்டமாகத்தான் செய்யமுடியும். அதனால்தான் பாபங்களை விலக்குங்கள் என்று கூறாமல் பாப கூட்டங்களை விலக்குங்கள் எனக்கூறப்பட்டுள்ளது

வாக்கியம் 06: உலக இன்பங்களில் குற்றங்களை விலக்குங்கள்

நீங்கள் அனுபவிக்கும் சுகங்களில் குற்றம் நேராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். நியாய நிலையில் பெரும் பணக்காரனாக முடியாது என அனுபவமாக கூறுகின்றனர். சிறிய இன்பத்தில் திருப்தி அடையாமல் தேவைக்கு அதிகமான அளவு இன்பம் தேவையென அதனை நாடும் பொழுது அதனை பெறுவதற்காக செய்யும் செயல்களால் அனியாயம், குற்றம் நேர்ந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு குற்றவுணர்ச்சி பெறும் மனத்தால் இறைவனை நாட முடியாது. இறையருளைப் பெற வேண்டுமானால் குற்றம் செய்ய வேண்டிய அளவுக்கு போகாமல் நியாயமான உழைப்பினால் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டு இன்பமடைந்து வாழ வேண்டும். அப்போதுதான் மனம் கலங்காமல் இறை தியானத்தில் நிலைபெறும்


வாக்கியம் 07: ஆன்மாவை அறிய முயற்சி செய்யுங்கள்

மனிதர்கள் தமது உடலைப்பற்றியும், பிரபஞ்சத்தைப்பற்றியும் பல விடயங்களை தெரிந்து கொள்ள ஆர்வமுடைய மனிதன் "நான் யார்? எத்தகையவன்? என்பது பற்றி மட்டும் தெரிய விளைவதில்லை. விட்டுப்போகும் உடலைப்பற்றி பெற்ற அறிவு உடலைவிட்டு உயிர் பிரியும் போது போகத்தானே போகிறது. உடல் போகும், உற்றார் போய் விடுவர், உலகமே போய்விடும், ஆனால் "நாம்" மட்டும் இருப்போம், நித்தியமாய்! ஆதலால் தன்னைப்பற்றி கொள்ள இச்சிக்க வேண்டும். "தன்னை அறிந்தவனே தலைவனை அறிவான" ஆதலால் இறையருளைப் பெற விரும்புபவர்கள் ஆத்ம விசாரணையில் தன்னை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கேள்வி, விசாரணை, சாதனை இவைகளால் இவ்வறிவு தோன்றும்.


வாக்கியம் 08: இல்லற பந்தத்திலிருந்து விரைவில் வெளியில் வாருங்கள்

இதற்கு யாரும் இறையருளைப் பெறவேண்டுமானால் வீட்டைத்துறந்து காட்டிற்கு போகவேண்டும், துறவறம் பேண வேண்டும் என எண்ணிவிடக் கூடாது.  பிரம்ம ஞானத்தில் மேம்பட்ட ரிஷிகள் அனைவரும் தமது குடும்பத்துடன் வீடுகளில் மனைவி மக்களுடன் வசித்தவர்கள் தான். வசிஷ்ட மகரிஷி 101 புதல்வர்களுடன் அருந்ததியாம் மனைவியுடன் பர்ணசாலையில் வசித்தவர்தான். சீதையின் வளர்ப்பு தந்தையான ஜனகமஹாராஜா ராஜயோகியாக அரச மளிகையில் வசித்தவண்ணமே சாதனை புரிந்து பிரம்ம ஞானம் பெற்றிருந்தார். இல்லற பந்தத்திலிருந்து வெளியில் வாருங்கள் என்றால் மனைவி, மக்கள், சொத்துக்களை விட்டு விலகி ஓடி விடுங்கள் என்பது அல்ல, இவைகளில் பற்று கொள்ளாமல் இருங்கள் என்பதுதான் பொருள். இப்படித்தான் ஞானிகள் அனைவரும் வாழ்ந்திருந்தார்கள். எனேனில் இந்தப் பிறப்பில் நடைபெறும் செயல்கள் நாம் முன்பு சேர்த்த வினையின் படி (பிராப்த கர்மத்தின்படி) நடைபெறுகிறது. அதனை தடுத்தால் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிவரும். ஆனால் இந்தப் பிறப்பில் அடுத்த பிறப்பு எடுக்க வேண்டிய அளவிற்கு கர்மத்தினை சேர்த்து விடக்கூடாது. ஆதலால் அனைத்திலும் இருக்கும் ஆசைகளை விட்டு வெளியேறுங்கள் என்பதே இதற்கு பொருள்.


முதலாவது ஸ்லோகத்தின் உட்பொருள்:

இறைவனின பேரருளைப் பெற்று அஞ்ஞான மாயை கர்ம பந்தங்களிலிருந்து விடுபட்டு இறையின்பம் பெற விரும்புபவர்கள் நாள்தோறும் வேதம் முதலிய இறை நூற்களைப் படித்து அவைகளில் கூறியுள்ளபடி பற்றற்று கடமைகளையும், இறை வழிபாட்டினை அனுபூதி பெற்ற பெரியார்கள் மூலம் அறிந்து முறையாக சாதனை செய்தபடி இறைவனது தியானத்தால் சித்தத்தில் பதிவுற்றிருக்கும் பாபங்களை அகற்றி புதிய பாபங்கள் சேராமல் இருப்தற்கு உலகவாழ்வில் தமது வாழ்க்கைக்கு தேவையான அளவு செல்வம் திரட்டி, வாழ்வதில் திருப்தி அடைந்தபடியும், எப்போதும் தன்னை யாரென்று தெரிந்துகொள்ளும் விசாரணையில் ஈடுபடுத்தி, இல்லற பந்தத்தில் மனதினை இழந்துவிடாமல் மனதைகட்டுப்படுத்தி வாழ்ந்து வருதல் வேண்டும்.

பிரம்மவித்யா விளக்கம்:

இறையருளை பெற்றுய்ய வேண்டும் என்பவன் இறைவன் கூறிய வழிகளை கடைப்பிடித்து வரும் பெரியோர்களாகிய குருவினை அணுகி அவர்களிடம் உபதேசம் பெற்று அவ்வழியில் சாதனை புரிந்து வருதல் வேண்டும். உண்மையான ஆச்சார்யனை காண எங்கும் தேடி அலையத்தேவையில்லை. இறை சாதனையினை அறியவேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டால் அத்தொடர்பு தானாகவே கிட்டும்

உபதேசவிளக்கம்:
இறையருள் பெற்றுய்ய விரும்புபவர்கள் குருவினை அண்டி தகுந்த சாதனா முறைகளின் விளக்கங்கள், செயல் முறையினைக்கற்று அதன்படி கடைப்பிடித்தல் வேண்டும். இதற்காக தம் கடமைகளை, வீடு, மனைவி, பிள்ளைகள், தொழிலை விட்டு ஊர் ஊராக சுற்றத்தேவையில்லை, அப்படி செய்யவும் கூடாது.இல்லறத்தில் இருந்த வண்ணம் முறையாக அறங்களை கடைப்பிடித்தல் வேண்டும்



பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...