குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, January 15, 2024

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

  




15-ஜனவரி-2024

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்:

சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வரூபே அவஸ்தானாம்

பொருள்: சித்த விருத்திகளை நிரோதம் செய்த யோகி அந்த நிலையில் தனது சொந்த மாற்றமற்ற நிலையில் இருக்கிறான்.

 

சூத்திரம் – 04: விருத்தி ஸாரூப்யம் இதரதர ||

பொருள்: சித்த விருத்திகளை அடக்காத போது அவன் தன்னை சித்த விருத்திகளுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறான்.

 

சூத்திரம் – 05: வ்ருத்தய பஞ்சதய்ய: க்லிஷ்டா அக்லிஷ்டா

பொருள்: சித்த விருத்திகள் ஐந்து வகைப்படும்; அவற்றை நல்லவை, தீயவை என்று பிரிக்க முடியும்

 

சூத்திரம் – 06:  ப்ரமாண விபர்ய  விகல்ப நித்ரா ஸ்ம்ருத்யா

பொருள் – இந்த ஐந்துவகை விருத்திகளும் ப்ரமாணம், விபர்யம், விகல்பம், நித்திரை, ஸ்ம்ருதி என்று ஐந்து வகைப்படும்.

 

சித்தத்தினுடைய நிலைகள் ஐந்து : க்ஷிப்தம், மூடம், விக்ஷிப்தம், ஏகாக்ரம், நிருத்தம்

 

  1. இன்றைய வகுப்பு பதஞ்சலி யோக சூத்திரத்ஹ்டின் மூன்றாவது சூத்திரம் முதல் ஆறாவது சூத்திரம் வரை நாம் உரையாடியிருக்கிறோம். 
  2. மூன்றாவது சூத்திரம் இரண்டாவது சூத்திரத்தில் யோகம் என்றால் சித்தத்தில் ஏற்படும் விருத்திகளை, கட்டுப்பாடு அற்று எழும் எண்ண அலைகளை நிரோதம் செய்வது என்பதைச் சாதித்த யோகி எதை அனுபவிப்பான் என்பதைக் கூறுகிறது.
  3. சித்த விருத்திகளை நிரோதம் செய்தால் அவன் தன்னுடைய உண்மையான இயல்புகளைக் காண்பான். இதை நாம் கடலலையை உதாரணமாகக் கொண்டால் அலைகள் நின்றவுடன் கடலின் அடித்தளம் தெளிவாகத் தெரிவதுபோல் எமது சித்த விருத்தி அலைகள் நின்றால் எமது உண்மையான ஆன்ம இயல்பு எமக்குத் தெரிய ஆரம்பிக்கும் என்று மூன்றாவது சூத்திரம் விளக்குகிறது.
  4. இப்படி சித்த விருத்தியை அடக்காதவனுடைய நிலை என்ன என்பதை நான் காவது சூத்திரம் விளக்குகிறது.
  5. சித்த விருத்திகளை அடக்காதவன் தன்னை சித்த விருத்திகளுடன் அடையாளப்படுத்திக்கொண்டு அந்த அலையில் சிக்குப்பட்டு துன்பமுறுகிறான்.
  6. இந்த இரண்டு சூத்திரங்களும் (03 & 04) சித்த விருத்தியை அடக்கினால் ஏற்படும் நிலையையும், அடக்காமல் விட்டால் ஏற்படும் நிலையை விளக்குக்கிறது. இதனால் சாதகன் பதஞ்சலி கூறும் யோகத்தினுடைய அனுபவம் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்கிறான்.
  7. சித்தத்தினுடைய நிலைகள் ஐந்து பற்றி பதஞ்சலி குறிப்பிடவில்லை; ஆனால் பதஞ்சலி யோக சூத்திரத்திற்கு உரையெழுதிய வியாசகர் இதை விளக்கியிருக்கிறார்.
  8. சித்தத்தினுடைய நிலை – 01: க்ஷிப்தம் – இது ஒன்றுக் கொன்று தொடர்பில்லாமல் எண்ணங்களை ஒழுங்குபடுத்த முடியாத நிலை.
  9. சித்தத்தினுடைய நிலை – 02: மூடம்: இது எண்ணங்கள் எதுவும் தோன்றாத நிலையில் இருப்பது, எளிதில் மறப்பது, எண்ணங்கள் மாறிக்கொண்டு இருக்கும் நிலை.
  10. சித்தத்தினுடைய நிலை – 03: விக்ஷிப்தம் – எண்ணங்கள் தோன்றிக்கொண்டிருக்கும் நிலை. ஆனால் எது சரி எது பிழை என்று முடிவெடுக்க முடியாத நிலை.
  11. சித்தத்தினுடைய நிலை – 04: ஏகாக்கரம் – மனம் தான் கவனம் செலுத்தும் பொருளில்  நிலைப்பட்டுவிட்ட நிலை; பயிற்சியால் வருவது.
  12. சித்தத்தினுடைய நிலை – 05: நிருத்தம் இது வைராக்கியத்தால் மனம் தேர்ந்தெடுத்த இலக்கின் மீது மாத்திரம் தனது கவனத்தை எண்ணத்தைச் செலுத்தி வேறு எண்ணங்கள் இன்றி ஒடுங்கிவிட்ட நிலை. விருத்திகள் அனைத்தும் அடங்கிய நிலை.
  13. க்ஷிப்தம் என்பது நாம் குழந்தைகளாக இருக்கும் போது ஏற்படும் சித்தத்தின் இயக்கம்.
  14. மூடம் என்பது பொதுவாக வளர்ந்து வரும் சிறுவர்களிடம் காணப்படும் சித்தத்தின் இயக்க்ம்.
  15. விக்ஷிப்தம் என்பது இளைஞர்களது மன இயக்கம்.
  16. ஏகாக்ரம் என்பது கற்றலில், வேலையில் மனம் ஒருமுகப்பட்ட பயிற்சியால் ஏற்படும் நிலை.
  17. நிருத்தம் என்பது யோகிகள் தமது அப்பியாச வைராக்கியத்தால் பெறும் நிலை.
  18. இப்படி சித்தத்தின் வளர்ச்சி நிலைகள் ஐந்தினையும் ஒரு யோக சாதகன் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சிலர் வயது சென்றாலும் அவர்களது சித்தம் க்ஷிப்தம், மூடம், விக்ஷிப்த  நிலைகளிலேயே இருக்கும். இவர்கள் தம்மை பயிற்சிக்கூடாக ஏகாக்ர நிலைக்கு கொண்டுவந்தால் மாத்திரமே யோக சாதனையில் முன்னேற முடியும்.
  19. சித்தத்தின் ஐந்து நிலைகளையும் புரிந்துகொண்ட சாதகன் சித்தத்தில் எழும் விருத்திகளின் வகைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.
  20. எமது சித்தத்தில் 05 வகை விருத்திகள் இருக்கின்றன; இவை நல்லவை தீயவை எண்று பகுக்க முடியும்.
  21. இந்த ஐந்து வகை விருத்திகளும்
    1. பிரமாணம் – உண்மையறிவு
    2. விபர்யம் – பொய்யறிவு
    3. விகல்பம் – கற்பனை
    4. நித்திரை – ஆழந்த உறக்கம்
    5. ஸ்ம்ருதி – ஞாபகம்
  22. இந்த ஐந்தும் எமது சித்தத்தில் விருத்திகளை எழுப்பி எம்மை உயர் உணர்வு நிலைக்குச் செல்லவிடாமல் தடுப்பவை என்பதை ஒவ்வொரு சாதகனும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
  23. இவை பற்றிய பூரண விளக்கம் அடுத்த வகுப்பில் உரையாடப்படும்.

Friday, January 12, 2024

என்னால் தொடர்ச்சியாக யோக வகுப்பில் பங்குபற்ற முடியாமல் உள்ளது, இதற்குரிய காரணம் என்ன குருவே?

 

எம்முடைய சித்தத்தில் எத்தகைய சம்ஸ்காரங்கள் பதிவுகள் உள்ளதோ அதன் படி நாம் இயங்க்குகிறோம். வலிமையான சம்ஸ்காரம் எம்மை நிச்சயமாக அந்த விடயத்தில் இயக்கும்; வலிமை குறைந்த சம்ஸ்காரங்கள் ஆசைகளாக வந்து வந்து போகும்!

யோகம், சாதனை இவற்றைக் கற்க வேண்டும் என்ற ஆசை உங்களில் ஏற்படுமாக இருந்தால் நிச்சயமாக உங்களில் யோகத்திற்குரிய சித்தப் பதிவுகள் இருக்கிறது என்று அர்த்தம்!

அப்படியானால் என்னால் ஏன் தொடர்ச்சியாக சாதனை, வகுப்பு பயில முடியவில்லை?

யோகம் பயில வேண்டும் என்ற சம்ஸ்கரத்தை விட உங்கள் சித்தம் மற்றைய உலக வாழ்க்கை பணம் தேடுதல், உலகவாழ்க்கையில் பெருமைகளை அடைவதையே முதன்மையாக நினைத்தல் போன்ற சம்ஸ்காரங்கள் உங்களுடைய வாழ்க்கையின் முதன்மை விடயங்களாக சித்தம் ஏற்றுக்கொண்டுள்ளதால் உங்களுக்கு இருமனப் போராட்டம் ஏற்பட்டு உங்களது வலிமையான சம்ஸ்காரம் வெல்கிறது.

இதை வெல்லுவதற்கு வழி உள்ளதா?

ஆம், ஆரம்பத்தில் யோக சாதனை கற்கையில் அதி ஆவல் காட்டி சித்தத்திற்கு அழுத்தம் கொடுத்து உங்களுடைய தீய சம்ஸ்காரங்களை வெல்ல வைக்காமல் சிறிதளவாக முயற்சிக்க வேண்டும்.

உதாரணமாக குரு மந்திரமும் காயத்ரி மந்திரமும் தினசரி 27 தடவை எப்பாடு பட்டாவது 45 விடாமல் சொல்லிவருவது!

வாரத்தில் ஒரு நாள் கற்கையைத் தேர்ந்தெடுத்து அதில் மாத்திரம் ஒரு நாள் விடாமல் பங்குபெற்றி பூர்த்தி செய்வது.

இப்படி ஒரு வட்டம் பூத்தி செய்துவிட்டீர்கள் என்றால் சித்தத்தில் வலிமையாக யோக சம்ஸ்காரம் பதிந்து விடும்; இப்படி ஒரு வருடம் தொட்ர் ச்சியாகச் செய்தால் நீங்கள் உங்கள் பழைய சம்ஸ்காரங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றுவிடுவீர்கள்!

முயற்சியுங்கள்!

உங்களுக்கு நான் துணையிருப்பேன்!

அன்புடன்

அகஸ்திய குலபதி

ஸ்ரீ ஸக்தி சுமனன்

யோக மாணவர்களுக்கு ஓர் அறிவுரை

 

அன்பின் மாணவர்களே,

ஒரு சில மாணவர்களின் மனக்கவலை வகுப்புகளை சில நேரங்களில் தவறவிடுகிறோம்; அதற்கு recording தாருங்கள் என்று விண்ணப்பிக்கிறார்கள். இதற்கு ஒரு தெளிவான புரிதலைத் தரவேண்டும் என்பது எனது விருப்பம்!

இந்த வகுப்புகளின் அமைப்பில் இருக்கும் தத்துவங்களைப் புரிந்து கொண்டால் இந்தக் கலக்கம் வரமாட்டாது.

இந்த வகுப்பு ஆசிரியருடன் நேரில் பயிலும் வாய்ப்பு; கற்றல் என்பது கேட்டல், சிந்திந்தல், சிந்திப்பதால் எழும் கேள்விகளை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிதல் என்பதை நோக்கமாகக் கொண்டது. ஆகவே நிகர் நிலை வகுப்பில் பங்குபற்றினால்தான் இந்த அனுபவம் வாய்க்கும்!

நாம் கற்றலைத் தொடங்கும் போது குரு மண்டல வணக்கம், புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியை ஆவாகனம் செய்து எமது மனதை ஒருமைப் படுத்தும் நிலைக்கு கொண்டு வந்து கற்றலைச் செய்கிறோம். இதுவே இந்த வித்தை பயில்வதற்கான சரியான முறை. இங்கு குரு தன்னுடைய பல்லாண்டுகால சாதனையில் பெற்ற ஆற்றல், திறனுக்கூடாக உங்கள் மனதை ஒருமைப்படுத்த உதவுகிறார். ஆகவே நிகர்  நிலை வகுப்பின் பலன் குருவின் உதவியுடன் நாம் எம்மை உயர்த்திக் கொள்கிறோம் என்பது.

இந்த வகுப்புகள் அதிகாலையில் வைத்திருப்பதன் நோக்கம் – உங்கள் மன, உடல், ஆற்றல்களை ஒழுங்குக்கு கொண்டுவந்து உங்களை ஆற்றல், ஆரோக்கியமுள்ள பழக்க வழக்கத்தை உங்களில் உருவாக்குவதற்கு!

எமது குருபாரம்பரியத்தின் மிக முக்கியமான கோட்பாடு – வாழ்வே யோகம்; தனது குடும்ப, வேலைகளைக் காரணம் சொல்லி யோக சாதனையை செய்யாமல் இருக்கக் கூடாது என்பதாகும்; இதனுடைய அர்த்தம் என்னவென்றால் நீங்கள் யோகவித்தையை சிரத்தையாக நாம் இங்கு சொல்லித்தருவது போல் சிலகாலம் கற்றால் உங்கள் வாழ்க்கையில் எடுத்த காரியங்களைச் செம்மையாகச் செய்யும் ஆற்றல் பேறுவீர்கள் என்பதாகும்.

உங்களுக்கு தரப்பட்டிருக்கு ஒரு கர்ம யோக சாதனை – உங்கள் நாளாந்த வாழ்க்கைப் பணிகள், குடும்பப் பொறுப்புகளைச் செவ்வனே தவறாமல் செய்து கொண்டு இந்த வகுப்புகளையும் பின்பற்றி, சாதனையையும் செய்ய வேண்டும் என்பதே!

ஆகவே இந்த வகுப்பின் அடிப்படைக் கோட்பாடு அர்ப்பணிப்புடனும் சிரத்தையுடனும் குருவின் முன்னிருந்து எமது சித்த விருத்திகளை அடக்கி குரு சொல்வதைக் கிரகிப்பது.

இப்படி இல்லாமல் ஆடியோ, கேட்கிறேன், வீடியோ கேட்கிறேன் என்பது எமக்கு வசதியான நேரத்தில், எமது சித்தம் பல்வேறு விடயங்களில் விருத்திகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் போது வெறும் தகவல்களைப் புரிந்துகொள்வோமே அன்றி எந்த முன்னேற்றத்தையும் பெறமாட்டோம்!

மாணவரே, நீங்கள் வகுப்பில் பங்குபெற்றாததால் தகவலை இழக்கவில்லை! உங்கள் மனப்பண்பினை, குருவுடன் சேர்ந்து சாதனை செய்து பெறும் அனுபவத்தினை இழக்கிறீர்கள்!

ஆகவே உங்கள் வாழ்க்கையை ஒரு ஒழுங்கு முறைக்குள் கொண்டுவந்து, திட்டமிட்டு வகுப்பில் பங்குபற்றுவது என்ற உறுதியுடன் பங்குபெற் முயற்சி செய்யுங்கள்!

நீங்கள் அதீத வேலைப்பளு, உலகக் கடமை உள்ளவராக இருந்தால் ஓரிரு வாரம் எல்லா வகுப்புகளிலும் பங்குபற்றி பின்னர் ஒன்று அல்லது இரண்டு வகுப்புகளை பங்குபற்றுவத்ற்கு ஏற்ற வகையில் உங்கள் வாழ்க்கை நிகழ்ச்சி நிரல்களை ஒழுங்குபடுத்தி அர்ப்பணிப்புடனும் சிரத்தையுடனும் தொடர்ச்சியாக கற்று முடியுங்கள்!

இங்கு அனேக வகுப்புகள் நடப்பதன் காரணம் அவரவர் நிலைக்கு ஏற்ப விடயங்களைக் கிரகித்துக்கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்துவது!

ஆகவே மனக்கலக்கம் இல்லாமல் மேலுள்ள உபதேசத்தை செயற்படுத்த முனையுங்கள்.

கட்டாயம் நீங்கள் இந்தப் பாதையில் செல்லுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறேன்!

என்றும் அன்புடன்

உங்கள் ஆசான்

அகஸ்திய குலபதி

ஸ்ரீ ஸக்தி சுமனன்

Tuesday, January 09, 2024

2024 சிருஷ்டி வகுப்புத் தொடர் 02 : ஹடயோகத்திறவுகோல் 01

 சிருஷ்டி 2024 – வகுப்பு 02

ஹடயோக பிரதீபிகை வகுப்பு – 01

செவ்வாய்க்கிழமை 09-ஜனவரி-2024

 

அன்பின் மாணவர்களே இன்று நீங்கள் கற்றுக்கொண்டவை:

  1. ஹட என்ற சொல்லிற்கு இரண்டு வகையில் பொருள் சொல்ல முடியும்; பொதுவிளக்கம் பலம் என்பதாகும்; எழுத்துக்களை வைத்து யோக வழியில் பொருள் கண்டால் ஹ என்பது சூரியனையும், ட என்பது சந்திரனையும் குறிக்கும்.
  2. ஹடயோகம் என்றால் பலத்தை தரும் யோகம் அல்லது உடலில் உள்ள சூரிய சந்திர ஆற்றலை இணைக்கும் முறை என்று பொருள்.
  3. பிரதீபிகை என்றால் ஒளி விளக்கு என்று அர்த்தம்; ஹடயோகம் பயில விரும்பும் மாணவருக்கு தெளிவான வழிகாட்டும் ஒளி விளக்கு ஹடயோக பிரதீபிகை.
  4. இந்த நூல் நாத சம்பிரதாய யோக நூல்; நாத சம்பிரதாயம் என்பது சிவபெருமான் பார்வதிக்கு இந்த யோக வித்தையை உபதேசிக்கும் போது அதைக் கேட்டுக்கொண்டிருந்த மீன் பரிணாம உயர்வு பெற்று அடுத்த பிறவியில் மச்சேந்திர நாதர் என்ற சித்தராக மனிதப் பிறவி எடுத்து யோகத்தில் தேர்ச்சிபெற்று யோகியானார். அவரிடன் தீட்சை பெற்று கோரக்க நாதர் இந்த யோகத்தில் தேர்ச்சி பெற்றார். ஆகவே இந்த யோக முறை ஆதி நாதரிடமிருந்து மச்சேந்திர நாதரும், மச்சேந்திர நாதரிடமிருந்து கோரக்க நாதரும் அவர்கள் குருபரம்பரையாகப் பயிற்சி செய்த யோகப் பயிற்சிகளை முறையாகத் தொகுத்து இந்த ஹடயோகப் பிரதீபிகை நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
  5.  இந்த நூலைத் தொகுத்த யோகியின் பெயர் ஸ்வாத்மாராம யோகி.
  6.  இந்த நூலில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன; இவற்றை உபதேசங்கள் என்று நூலாசிரியர் சொல்லுகிறார்.
  7.  முதலாவது உபதேசம் 67 சுலோகங்களைக் கொண்டது; இது நூலின் குருபரம்பரை வரலாறு, நூலின் நோக்கம், ஹடயோகம் பழகும் சாதகனுக்கு இருக்க வேண்டிய ஒழுக்கம், பயிற்சிசெய்யும் இடத்திற்கு இருக்க வேண்டிய நிபந்தனைகள், உணவு முறைகள் மற்றும் தேர்ந்தெடுத்த ஹடயோக சித்தி தரும் பதினைந்து ஆசனங்கள் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்தூல உடலின் சுத்தி பலம் ஆகியவற்றை விளக்குகிறது.
  8.  இரண்டாவது உபதேசம் 76 சுலோகங்கள் கொண்ட அறுவகைச் உடல் சுத்தி முறைகள், அஷ்ட கும்பகங்களின் பயிற்சிமுறையும் விளக்கப்பட்டுள்ளது. இது பிராண பலம் பேறுவதற்கான முறையைக் கூறுகிறது.
  9.  மூன்றாவது உபதேசம் 130 சுலோகங்கள் கொண்ட பந்த முத்திரைகள் பற்றிய விளக்கங்கள்; ஸ்தூல உடல் பலமும், பிராண பலத்தையும் வளர்த்துக்கொண்ட யோகி எப்படி தன்னுடைய நாடிகளைத் தூய்மைப்படுத்தி மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியை விழிப்பிப்பது என்ற முறையைச் சொல்லும் அத்தியாயம்.
  10.  நான் காவது உபதேசம் 114 சுலோகங்கள் கொண்ட ஸமாதி நிலையை எட்டுவதற்கான பயிற்சிகளைக் கூறும் பகுதி. இது நாதானுசந்தானம் என்ற ஸமாதி அனுபவத்தை எப்படி அடைவது என்பதை விளக்குகிறது.
  11.  இந்த நூல் கற்கை வெறுமனே கோட்பாட்டறிவிற்கு மாத்திரம் என்பதையும் பயிற்சிகள் அனைத்தும் முறையான ஆச்சாரியரிடம் குருமுகமாகப் பயில வேண்டும் என்பதையும் மாணவர்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.  எக்காரணம் கொண்டும் தன்னிச்சையாக பயிற்சிகளைச் செய்யக்கூடாது.
  12.  முதல் உபதேசத்தின் முதல் சுலோகம்:
    • மிக உயர்ந்த இராஜயோகத்தில் ஏறிச் செல்வதற்கு ஏணிப்படிபோன்று விளங்கும் இந்த ஹடயோக வித்யாவை எமக்கு உபதேசித்த ஆதி நாதருக்கு நமஸ்காரம்
  13. முதல் உபதேசத்தின் இரண்டாவது சுலோகம்:
    • இராஜ யோகத்தில் வெற்றி பெறுவதாற்காக மாத்திரமே தனது குரு நாதரை வணங்கி ஸ்வாத்மாராம யோகியினால் இந்த ஹடயோக வித்யா உபதேசிக்கப்படுகிறது.
  14. முதல் உபதேசத்தின் மூன்றாவது சுலோகம்:
    • ராஜயோகத்தை பயிற்சிக்க முயற்சிக்கும் சாதகர்கள் பல்வேறு கருத்துக்கள் இருப்பதால் குழம்பி இருட்டில் நிற்பதுபோல் சாதனையில் தடைபட்டிருப்பவர்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள ஹடம் என்ற இந்த ஒளிவிளக்கை ஸ்வாத்மாராமர் கருணையுடன் ஏந்தி நிற்கிறார்.
  15. முதல் உபதேசத்தின் நான்காவது சுலோகம்:
    • ஹடயோக வித்தை மத்ஸ்யேந்திர நாதர், கோரக்க்ஷ நாதர் பயிற்சித்து சித்தி பெற்ற வித்தை; அவர்களின் அருளாசியால் ஸ்வாத்மாராமர் அறிந்துகொண்டார்.
  16.  முதல் உபதேசத்தின் ஐந்து தொடக்கம் ஒன்பதாவது சுலோகம்:
    • இந்த ஹடயோக வித்தையை கீழ்வரும் 33 ஹடயோக சித்தர்கள் பயிற்சி செய்து சித்தியடைந்து இந்த யோகத்தின் மகிமையால் காலத்தினை வென்று இந்த பிரம்மாண்டத்தில் சாசுவதமாக இருந்து உலாவி வருகிறார்கள்: அவர்கள் நாமங்கள்
      1. ஸ்ரீ ஆதி நாதர்
      2. மத்ஸேந்திரர்
      3. சாபரர்
      4. ஆனந்தர்
      5. பைரவர்
      6. சௌராங்கி
      7. மீனர்
      8. கோரக்ஷர்
      9. விருபாக்ஷர்
      10. பிலேசயர்
      11. மந்தாநர்
      12. யோகபைரவர்
      13. சித்தி
      14. புத்தர்
      15. கந்தடி
      16. கோரகண்டகர்
      17. ஸுரானந்தர்
      18. சித்தபாதர்
      19. சர்படி
      20. கானேரீ
      21. பூஜபதர்
      22. நித்ய நாதர்
      23. நிரஞ்ஜனர்
      24. கபாலீ
      25. பிந்து நாதர்
      26. காகசண்டீச்வரர்
      27. அல்லாமர்
      28. பிரபுதேவர்
      29. கோடாசோலீ
      30. டிண்டிணி
      31. பானுகீ
      32. நாரதேவர்
      33. கண்டகாபாலிகர்

Monday, January 08, 2024

2024 சிருஷ்டி வகுப்புத் தொடர் 01 : பதஞ்சலி யோக சூத்திரம் விளக்கம் 01

 08-ஜனவரி-2024


பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 01

இன்று நீங்கள் கற்றுக்கொண்டவை:

  • சூத்திரம் – 01: அத யோக அனுசாசஸனம் || இனி யோகம் விளக்கப்படும்
  • சூத்திரம் -02: யோக: சித்த வ்ருத்தி நிரோத: || சித்தத்தின் விருத்திகளை ஒடுக்குதலே யோகம்

பதஞ்சலி யோக சூத்திரத்தின் முதல் இரண்டு சூத்திரங்களைப் புரிந்து வைத்திருக்க நீங்கள் புரிந்து வைத்திருக்க வேண்டிய அருஞ்சொற்கள்:

  1. பதஞ்சலி மகரிஷி – சித்த சுத்தி, வாக்கு சுத்தி, உடல் சுத்தி ஆகிய மூன்று சுத்திக்கும் உரிய அறிவியலைத் தந்த மகரிஷி!
  2. யோகம் – மனிதன் ஆக்கப்பட்டிருக்கும் தத்துவங்களின் இணைவு
  3. 24 தத்துவங்கள் – உயிரைச் சூழ இருந்து இயக்கத்தை நடத்தும் கருவிகள்
  4. அந்தக்கரணம் – மனம் புத்தி சித்தம் ஆங்காரம்
  5. மனம் – எண்ணம், புலன் களில் இருந்து தகவலை வாங்கும் பகுதி
  6. புத்தி – கேள்வி கேட்டு ஆராயும் பகுதி
  7. சித்தம் – தகவலை சம்ஸ்காரமாக பதிந்து வைக்கும் பகுதி
  8. ஆங்காரம் – ஒரு செயலைச் செய்வதற்கு மையமாக இருக்கும் பகுதி
  9. சம்ஸ்காரம் – நாம் புலன் களால் பெற்ற அனுபவத்தின் பதிவு
  10. பஞ்சபூதம் – ப்ருதிவி, அப்பு, அக்னி, வாயு, ஆகாயம்
  11. பஞ்ச புலன் அனுபவம் – கேட்டல், பார்த்தல், சுவைத்தல், முகர்தல், தொடு உணர்ச்சி
  12. பஞ்ச ஞானேந்திரியம் – செவி, கண், நாக்கு, நாசி, தோல்
  13. பஞ்ச கர்மேந்திரியம் – கை, கால், வாய், குறி, குதம்
  14. விருத்தி – ஏற்கனவே பதியப்பட்ட பதிவுகள் கட்டுப்பாடு இல்லாமல் அலைகளாக எழுந்து செயற்படும் நிலை
  15. பதஞ்சலி யோகம் – 24 தத்துவங்களில் சித்தம் என்ற பகுதியி எழும் கட்டுப்படாத விருத்திகளை கட்டுப்படுத்துதலே பதஞ்சலியைப் பொறுத்த வரையில் யோகம். இந்த விருத்திகளைக் கட்டுப்படுத்தினால் மற்றைய தத்துவங்கள் அனைத்தும் சிறப்பாக ஒன்றிணைந்து அதியுயர் உணர்வு நிலையான ஸமாதி நிலை வாய்க்கும். மனிதன் அதியுயர் சக்தியுடையவன் ஆவான்.
  16. பதஞ்சலி யோகசூத்திரம் 195/196 சூத்திரங்கள் உடையது
  17. பதஞ்சலி யோக சூத்திரம் ஸமாதி/சாதனா/விபூதி/கைவல்ய என்ற நான்கு பகுதிகளை உடையது
  18. ஸமாதி – மனிதன் அடையக்கூடிய உயர் உணர்வு நிலைகள் (super consciousness state) எவை?
  19. சாதனா – உயர் உணர்வு நிலைய அடைவதற்குரிய பயிற்சி முறைகள் (practice) எவை?
  20. விபூதி – உயர் உணர்வு நிலையை அடைவதால் பெறப்படும் சித்திகள் ஆற்றல்கள் (super powers) எவை?
  21. கைவல்யம் - சித்திகள், ஆற்றல்களை விட உயர்ந்த நிலை ஒன்று உள்ளது!
  22. முற்பிறப்பில் யோகம் பயின்று தகுந்த சம்ஸ்காரம் உடையவர்களுக்கு அப்பியாஸ வைராக்கியம் மாத்திரம் போதுமானது
  23. முற்பிறப்பில் யோகம் பயின்று தகுந்த சம்ஸ்காரத்தைப் பெறாமல் சாதனை குழம்பியவர்களுக்கு கிரியாயோகம் சொல்லப்படுகிறது.
  24. முற்பிறப்பில் யோக சம்ஸ்காரம் இல்லாமல் தற்போது தொடங்குபவர்களுக்கு அஷ்டாங்க யோக முறை சொல்லப்படுகிறது.
  25. குரு அவரவர் சம்ஸ்காரத்திற்கு ஏற்ப யோக முறைகளைக் கற்பிப்பார்.

Monday, January 01, 2024

காலபைரவ தியானம் – 31


இந்தப் பாடலில் பைரவரின் இரண்டு ரூபங்கள் குறிக்கப்படுகிறது. வடுக பைரவர், கங்காளர் என்ற இரண்டு ரூபங்கள். வடுகர் என்பது பிரம்மச்சாரியான வடிவம். கங்காளம் என்பது எலும்பு என்று பொருள். வாமனர் மகாபலியைக் கொன்றதால் ஏற்பட்ட ஆணவத்தை அடக்கிப் பொடிப்பொடியாக்கிய வடிவம் கங்காள வடிவம். இந்த இருவடிவங்களும் பாடலில் தியானிக்கப்படுகிறது. பைரவர் என்றாலே தெய்வங்கள் முதற்கொண்டு ஆணவ மல நீக்கம் தான்

இலையென்றோருவர்க் கிதஞ்சொல்லி

யென்று மிரங்கி நல்லா

நிலையென்று நீயளித்தாண்டருள்

வாய் நித்தனே புகலி

மலையொன்றிய் வடுகேச

கங்காள வயிரவனே

தலையொன் றியகைனே காழி யாபத்துத் தாரணனே

உம்மை நாடிவருபவர்களுக்கு இல்லை என்று சொல்லிவிடாமல் மனமிரங்கி நல்ல நிலையை அளித்து ஆண்டருள்பவரே, நித்தியமானவரே!

புகலி எனும் சீர்காழித் தலத்தில் எழுந்திருளிய

வடுக பைரவரே

கங்காளா ரூபம் தரித்த வைரவரே

பிரம்மாவின் ஆணவத்தினை நீக்க தலை கொய்தவரே

சீர்காழிப்பதி ஆபத்துத் தாரணனே

உம்மை நான் தியானிக்கிறேன்.

{ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் அருளிச் செய்த ஆபதுத்தாரண மாலை பாடல் 18}

இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!


 

 


 

  

இனிய புதிய 2024ம் ஆண்டு

 


இதைக் காணும் அனைவருக்கும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுள் ஆரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி பெற தேவியே அருள்வாயம்மா என பிரார்த்தித்து இனிய வாழ்த்துக்கள்!

அனைவரையும் நவீன மனதிற்கான புராதன ஞானம் திட்டத்தில் Sri Shakti Sumanan Institute - Srishti உடன் இணைந்துகொள்ள அழைக்கிறேன்!

இந்த வருடம் சிருஷ்டி பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க திட சங்கல்பம் பூண்டுள்ளது!  


 


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...