குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, August 01, 2025

முக்குணங்கள் - திரிகுணங்கள் ஒரு புரிதல்.

 

__

_________________________
ஈழத்துச் சைவர்கள் என்று ஒரு வாட்ஸப் குழு இருக்கிறது. அங்கே ஆக மொத்தம் 500+ உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலரே கருத்துப் பதிவர். அப்படி திரிகுணங்களைப் பற்றி பதியப்பட்ட ஒரு பதிவிற்கு மேலதிக புரிதலாக விளக்க இந்தப் பதிவுத் தொடர்.
திரிகுணம் என்பது - சத்வம் (சமநிலை, தெளிவு), ரஜஸ் (செயல்பாடு, ஆர்வம்), மற்றும் தமஸ் (மந்தநிலை, இருள்)
இது பல இந்திய தத்துவ அமைப்புகளில் - தரிசனங்களின் - அடித்தளமாக உள்ளது. குணங்கள் வெறும் மனோதத்துவக் கொள்கைகள் மட்டுமல்ல, அண்ட செயல்முறைகள், உளவியல் மனநிலைகள் மற்றும் நெறிமுறை நடத்தை ஆகியவற்றின் நடைமுறை தீர்மானிப்பவை.
சொற்பிறப்பியல்: குணம் (गुण) என்பது "இழை "strand"" அல்லது "தரம்" என்று பொருள்படும். அதாவது இயற்கையாகிய பிரகிருதியின் எதனால் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதே குணங்கள். இது திரி "மூன்று" குணங்களால் இழைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பிரபஞ்சத்தின் இயற்கை சத்துவம், ரஜோ, தமோ என்ற மூன்று குணங்களினால் இழைக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தத்துவத்தின் முறையான விளக்கம் ஈஸ்வரக்ருஷ்ணர் எழுதிய (சுமார் 4 ஆம் நூற்றாண்டு CE) சாங்கிய காரிகாவிலிருந்து வருகிறது.
சாங்கிய தத்துவத்தின் படி பிரகிருதி என்பது பிரபஞ்சத்தின் முதன்மையான, மயக்கமற்ற, பொருள் காரணமாகும், இது சமநிலையில் உள்ள மூன்று குணங்களால் உருவாக்கப்பட்டது: பிரபஞ்சத்தில் நீங்கள் காணும் எல்லாப் பொருட்களும் இந்த முக்குணங்களின் கலப்பே!
ஸத்த்வம்ʼ லகு⁴ ப்ரகாஶகம்ʼ ஶிதம்ʼ ஶுக்லம்ʼ ச,
ரஜோ ரூக்ஷம்ʼ திக்ஷ்ணம்ʼ ச ஶ்ருʼதம்ʼ ரக்தம்ʼ ச,
தம꞉ கு³ரு வரணகம்ʼ மந்த³ம்ʼ க்ருʼஷ்ணம்ʼ ச
சாங்கிய காரிகை - 12
இந்த மூன்று குணங்களை எப்படி விளங்கிக்கொள்வது என்பதை இந்த ஸ்லோகம் விளக்குகிறது.
"சத்வம் என்பது இலகுவானது,ஒளியானது, குளிர்ச்சியானது மற்றும் வெண்மையானது;
ரஜஸ் என்பது நகரும் தன்மை கொண்டது, தூண்டுகிறது, வெப்பமானது மற்றும் சிவப்பு நிறமானது;
தமஸ் என்பது கனமானது, தடையாக இருப்பது, மந்தமானது மற்றும் இருண்டது."
இந்த முக்குணங்களை எப்படி நடைமுறையில் பயன்படுத்துவது?
குணங்கள் மன நிலைகளை பாதிக்கின்றன — சத்வம் தெளிவைத் தருகிறது, ரஜஸ் கிளர்ச்சிக்கு வழிவகுத்து செயலைத் தூண்டுகிறது, தமஸ் மந்தநிலையை ஏற்படுத்தி ஓய்வினைத் தருக்கிறது.
ஆன்மீக பயிற்சி: அப்பியாசம் (பயிற்சி), வைராக்யம் (பற்றின்மை) மற்றும் புத்தி-பரிசுத்தி (புத்தியின் சுத்திகரிப்பு) மூலம் கைவல்யத்திற்கு விவேக-ஞானம் பெற சத்துவ குணத்தைப் பெறவேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...