இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால்மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்
Wednesday, August 20, 2025
கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 10
*************************
மரண பயம் நீங்க
***************************
இந்தப்பாடலிற்கு சித்தர் பிரான் ஏட்டுப்பிரதியில் இட்ட தலைப்பு "நமனைவிலக்க : யமதண்டனைவிலக்க" என்பதாகும்.
மனிதனின் ஐந்து அடிப்படைக் கிலேசங்களில் மரணபயம் என்பது ஞானம் பெற்றவர்களுக்கும் உண்டு என்று பதஞ்சலி முதலிய யோகியர் கூறியுள்ளார்கள். மரணபயம் அனைத்து பயங்களுக்கு ஆதாரம். எம்முடைய பயன் என்று சொல்லப்படும் அனைத்தும் இறுதியாக மரணமடைந்துவிடுவோம் என்ற பயத்தின் வெவ்வேறு வடிவமே. மேலும் பயம் என்பது பலம் இன்மையால் வருவது. மரணபயம் என்பது பிராண பலம் இல்லாமையால் வருவது. இந்தப்பாடல் பிராண பலம் பெறும் இரகசியத்தையும் அதனால் மரணபயத்தை வெல்லும் தியானத்தையும் கூறுகிறது.
உயிர்கள் அதனதன் பரிணாமங்களுக்குத் தக்க இறக்கும் போது வெவ்வேறு தெய்வங்களால் கையாளப்படுகிறது. ஒருவன் குருமுகமாக ஏதாவது தெய்வ தீக்ஷை பெற்று தனது வாழ் நாளில் உபாசனையை முறையாகச் செய்து வருவானேயானால் அவனை யமனும் தூதர்களும் மரண இறுதியில் எடுத்துச் செல்வதில்லை! சிவ உபாசனை என்றால் சிவ கணங்களும், தேவி உபாசனை என்றால் யோகினிகளும் அந்த உயிரை அதன் உபாசனை பலத்திற்கு ஏற்ற வகையில் தகுந்த நிலையை அருளுவர்.
தீக்ஷையற்ற ஆன்மாக்களைக் கவனிக்கவே யமனும் அவரது தூதர்களும்; அத்தகைய ஆன்மாக்கள் யம தூதர்களால் எடுத்துச் செல்லப்பட்டு அவர்கள் செய்த பாப புண்ணியங்களால் ஆராயப்பட்டு தகுந்த நிலைக்குச் செலுத்தப்படுவர்,
இந்தப்பாடலில் ஒரு முருக உபாசகன் மரணகாலத்தில் முருகனைத் தியானிக்க வேண்டும் என்றும், மரணபயம் அற்று இருக்க அவன் பயிற்சிக்க வேண்டிய யோக இரகசியமும் அருணகிரி நாதர் உபதேசிக்கிறார்.
பாடலைப் படித்த பின் மந்திரப் பிரயோகத்தினை ஆராய்வோம்.
கார் மா மிசை காலன் வரில், கலபத் தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய் தார் மார்ப, வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடுவே லவனே.
மாலையணிந்த மார்பினை உடையவனே, வலாரி என்ற அசுரனை அழித்த இந்திரன் சூரனிடம் அடிமைப்பட்ட போது அந்த மாமரமாக நின்ற சூரனை தொடுவேலால் அழித்த வேலவனே, கரிய எருமை மீது காலன் வரும் போது நீ அழகிய மயிலின் மீது வந்து எனக்கு எதிரே நிற்கவேண்டும்.
இந்தப்பாடலில் மரணபயம் நீக்கும் யோக இரகசியங்களும் உண்டு! இந்திரன் என்பது intuitiveness உடைய தெய்வ மனம், அந்த தெய்வ மனம் வலன் எனும் அரசனை வென்ற போதும் சூரபத்மனிடன் அடிமைப்பட்டுக்கொண்டது. சூரபத்மனை வென்று காக்கும் வல்லமை வேலனுடையது. வேல் என்பது சக்தியாயுதம். பரிபூரண ஶிவ ஶக்தி அமிசம் வேலவன். மிகப்பெரிய அசுர சக்தியை வெல்ல வேண்டும் என்றால் பரிபூரண ஶிவ ஶக்தி அமிசம் வேண்டும் என்பதை தார் மார்ப, வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடுவே லவனே என்ற வரிகளால் சூட்சுமமாக காட்டுகிறார். வேலவனை உபாசிப்பதால் எல்லா அசுரகுணங்களையும் வெல்லும் பரிபூரண ஶிவ ஶக்தி ஆற்றல் எமக்குக் கிடைக்கும்.
அடுத்து கரிய எருமை வாகனன் யமன் வரும் போது அழகிய மயிலில் வருவாய் என்று பாடுகிறார். இரண்டாவது பாடலில் ஆடும் பரி என்று மயிலைக் கூறுவதைக் கவனிக்க வேண்டு. சிவ யோகத்தில் பரி என்பது சீர்பட்ட தீர்க்க சுவாசத்தையும் சுவாசம் ஒழுங்குபடுத்தும் பிராண ஓட்டத்தையும் குறிக்கும். முருகன் சூரபத்மனினை தனது சக்தியாயுதத்தால் பிளந்து சுத்தி செய்து சக்தி வாய்ந்த பிராணனை தனது வாகனமாக்கிக் கொண்டார். சூரபத்மன் தனது அசுர தபஸால் அசுர பிராண பலம் பெற்று, பின்னர் ஶக்தியாயுதத்தால் சுத்தியுற்று முருகனுக்கு வாகனமாகி முருக பக்தர்களுக்கு பிராணபலம் பெற உதவுகிறார். மயில் என்பது முருகனின் பரிபூரண ஆற்றலால் கட்டுப்படுத்தப்பட்ட பிராணன்.
இங்கு யமன் வரும் போது மயில் வாகனத்தில் வந்து எழுந்தருளி என் முன்னே நிற்பாய் என்று அருணகிரி நாதர் வேண்டுவதன் சூக்ஷமம் என்ன? யமன் பிராணனைப் பறிக்க வருபவன். அப்படி யமனின் பாசக்கயிற்றில் சிக்காமல் முருகன் திருவடியில் சென்று அமர ஸாதகனுக்கு அதீத பலம் வேண்டும். யமனிடமிருந்து தப்பி முருகன் திருவடி சேர்வதற்கான அசுர பிராணபலத்தைத் தரக்கூடியது மயூரவாகனம்.
கந்தரலங்காரப் பாடல் ஒன்றில் ""மரணப் ரவாகம் நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணக் கலாபியும் வேலுமுண்டே" என்று வேலையும் மயிலையும் துணைகொண்டவர்களுக்கு மரணப்ரவாகம் இல்லை என் கிறார். வேல் பரிபூரண ஞான ஶக்தி, மயூரம் அசுரபல ப்ராண ஶக்தி. இரண்டும் இருந்தால் மரணபயம் ஏற்படாது.
இந்தப் பாடலையும், மூல மந்திரத்தையும், யந்திரத்தையும் பிரயோகம் செய்வதால் பிராண பலம் பெற்று மரண பயம் நீங்கப்பெறலாம் என்பது இதன் பிரயோகமாகும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.