இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால்மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்
Tuesday, August 19, 2025
கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 08
***************************
அதிகாரத்திலுள்ளவர்களை வசப்படுத்த
**********************
எட்டாவது பாடலிற்கு சித்தர் பிரான் ஏட்டுச் சுவடியில் தந்த தலைப்பு "குடிகனத்தவன் வசமாக" என்பதாகும். இதன் அர்த்தம் அக்காலவழக்கில் பல்வேறு குடிகளை தமது ஆளுகைக்குள் வைத்திருக்கும் நிலப்பிரபுக்களைக் குறிக்கும். இக்காலத்தைய வழக்கில் செல்வாக்கானவர்கள், உயர் அரச அதிகாரிகள் என்போரைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்தப்பாடலையும் அதற்குரிய மூல மந்திரம், யந்திரம் ஆகியவற்றைப் பிரயோகம் செய்து இந்தப் பாடலை மனனம் செய்துகொண்டு உயர் பதவிகளில் உள்ளவரகளைச் சந்திக்கச் செல்லும் போதும் அவர்கள் எமக்கு வசமாகி காரிய சித்தியாகும் என்பது இந்தப் பாடலின் மந்திரப் பிரயோகமாகும்.
இனி இந்தப்பாடலில் பொருளை உணர்ந்து அது எப்படி இந்த வசப்படுத்தும் ஆற்றலைத் தருகிறது என்பதை ஆராய்வோம்.
அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப் பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பெரு தானவ நாசகனே.
குமரன், மலைராசனின் மகளின் மகன், சமர் புரிய வந்த சூரனை அழித்தவனை, எனது மனதில் இருத்த,
நான் எனும் பிரமை கெடும்,
மெய்ப்பொருள் காணலாம் என்பது இந்தப் பாடலின் பொருளாம்.
இந்தப் பாடலின் பொருளைப் புரிந்தால் வசீகரணம் அல்லது வசிய ஆற்றல் என்பது என்ன என்பது புரிந்துகொள்ளலாம். நான் என்று தன்னைப் பற்றிப் பெரிதாக எண்ணிக்கொண்டும், மற்றவரகளிடம் அகங்காரம் காட்டுபவனை எவருக்கும் பிடிக்காது. மற்றவர்களை வசப்படுத்த வேண்டும் என்றால் முதலில் நான் என்ற எண்ணத்தைக் குறைக்க வேண்டும். தன்னை பற்றி முதன்மையாக எண்ணாமல் மற்றவர்களை மதித்து அவர்கள் பேச்சைக் கேட்பவரையே அனைவருக்கும் பிடிக்கும்.
குறிப்பாக அதிகாரத்திலுள்ளவர்கள், பணக்காரர்களை வசப்படுத்த வேண்டும் என்றால் தம்மை முன்னிலைப்படுத்தாமல் அவரகளுடைய எண்ணத்தை அறிந்து செயற்படும் பண்பு உள்ளவர்களையே அவர்களுக்குப் பிடிக்கும். அதிகாரத்திலுள்ளவர்கள், பணக்காரர்களிடம் சென்று உங்கள் அகங்காரத்தைக் காட்டினால் அவர்கள் உங்களுக்கு வசப்படமாட்டார்கள். நான் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பவர்களே மற்றவர்களை, குறிப்பாக சமூகத்தில் பெரிய அதிகார நிலையில் இருப்பவர்களை வசப்படுத்த முடியும்.
இப்படி சாதாரண மானுடர்களில் அதிகாரம் படைத்தவர்களை வசப்படுத்தவே நான் என்ற அகங்கார பிரமை இருக்கக்கூடாது என்றால் குமரன், இந்த பிரபஞ்சத்தை இயக்கும் பராசக்தியின் மைந்தன், சூரபத்மன் முதலிய ஆற்றலுள்ள அசுரர்களை எல்லாம் அழித்தவனை எம் மனதுள் ஏற்று மெய்ப்பொருள் காணவேண்டும் என்றால் நிச்சயமாக நான் என்ற அகங்காரம் அழியவேண்டுமல்லவா?
இந்தப் பாடல் அருணகிரி நாதரால் முருகப்பெருமானை வசப்படுத்தி, எம்முள் இருத்தி மெய்ப்பொருள் காண்பதற்கான வழியாக அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அகங்காரம் அழிந்த நிலை சர்வவசீகர சக்தியைக் கொடுக்கும் என்பதால் இந்தப்பாடலிற்குரிய பிரயோகமாக குடிகனத்தவன் வசமாக என்று சித்தர் பிரான் பிரயோகம் சொல்லியிருக்கிறார்.
இந்தப் பாடலின் பொருள் அறிந்து மூல மந்திரத்தையும், யந்திரத்தையும் பிரயோகிக்க செல்வாக்கானவர்களை வசப்படுத்தலாம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.