பாத தரிசனஞ் செய்ய - திருவடி தீக்ஷை பெற
*****************************************
இந்தப்பாடலின் பிரயோகமாக சித்தர் பிரான் இட்ட தலைப்பு "பாத தரிசனஞ் செய்ய" என்பதாகும். எமது மரபில் இறைவனதும், குருவினதும் பாதங்களை வழிபடுவது, தியானிப்பது மிக உயர்ந்த யோக சாதனையாகும். இதற்கு ஒரு அரிய யோக விளக்கம் இருக்கிறது.
தலையுச்சியில் பிரம்மரந்திரம் எனும் துவாரம் வழியாக உள் நுழையும் பிராணன் உடலில் உள்ள நாடிகளில் நிரம்பி மீண்டும் வெளியேறுவது பாதங்களின் வழியாக. ஒவ்வொரு மனிதனும் தான் மனதில் எண்ணும் எண்ணத்திற்கு ஏற்பவும், சித்தத்தின் அதிர்வுகளுக்கு ஏற்பவும், நல்ல தீய உணர்ச்சிகளின் தன்மைக்கு ஏற்பவும் அவனுக்குள் செல்லும் பிராணன் மேற்குறித்த தன்மையுடன் கலந்து வெளிப்படும், பரவும்.
ஞானம் பெற்ற, மந்திர சித்தி பெற்ற குருவின் உடலிற்குள் செல்லும் பிராணன் அவருடைய ஞானக் கதிர்களையும், மந்திர சித்தியையும் காவிக்கொண்டு அவர் பாதம் வழியே வெளிப்படுவதால் அந்தப் பிராண சக்தியைக் கிரகித்துக்கொள்ள குருவின் பாதங்களை கைகளாலோ, அல்லது பிராணன் உட்செல்லும் வழியான தலையையோ வைத்து வணங்கச் சொல்கிறது சாஸ்திரம்.
அதுபோல் பிராணப்பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரங்களின் பாதங்களில், உடல் முழுவதும் அந்தப் பிராண சைதன்யம் இருப்பதால் அதைக் கிரகிக்க அபிஷேகம், பூக்களால் அலங்காரம் செய்வித்து அதை பாதங்களில் வைத்து பின்னர் அதைப் ப்ரஸாதமாக எடுத்துக்கொள்கிறோம். விஷ்ணு கோயிலில் திருவடியைத் தலையில் வைப்பதன் தத்துவமும் இதுதான்.
இந்தப்பாடலில் அருணகிரிநாதர் பரம்பொருளான, சகல ஞானமும், ஆற்றலும் உடைய முருகப்பெருமானின் திருவடியைப் பற்றும் வழியும் அதனால் கிடைக்கும் பலனைப் பற்றிக்கூறுகிறார். பாடலைப் பார்த்த பின்னர் பொருள் விளங்கி அதன் பிரயோகம்.
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.