குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, August 14, 2025

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 02 :

 கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 02 :

**************************************************
எம்மை மதிக்காதவர்களை மதிக்கச் செய்ய
****************************************************
உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களைச் சரியாக மதிப்பதில்லையா? உங்கள் வேலைத்தளத்தில் எவரும் உங்களைச் சரியான மரியாதை செய்து உங்களிடம் அன்பு பாராட்டுவதில்லையா?
அப்படியென்றாம் நீங்கள் அந்த அழகன் முருகனை முறையாகத் தியானிப்பதில்லை என்று கூறுகிறார் அருணகிரி நாதர் தனது இரண்டாவது பாடலில்;
உல்லாச நிராகுல யோகவிதச்
சல்லாப விநோதனும் நீயலையோ
எல்லா மறவென்னை யிழந்தநலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.
முருகன் உல்லாச நிராகுல யோகவிதன் - இதன் பொருள் மிகச்சிறப்பானது!
முருகன் எப்போதும் உல்லாசமானவன், மகிழ்ச்சியுடையவன், பேரின்பம் உடையவன்.
முருகன் எப்போதும் நிராகுலன் - கலக்கம் இல்லாத, மனக்குழப்பம் அற்றவன்
இவை இரண்டும் எப்படிச் சாத்தியன் என்றால் அவன் தன்னையறியும் யோகவித்தையை அறிந்தவன், யோக ஞானத்தில் நிபுணன்.
உல்லாசமானவன் என்றவுடன் சினிமா பார்த்து, நாட்டியம் ஆடும் உல்லாசத்தை இங்கு குறிக்கவில்லை! தன்னை அறிந்த சுய ஸ்வரூபத்தை அறிந்ததால் வரும் பேரின்பத்தில் திளைக்கும் யோகி!
சல்லாப வினோதன் - சல்லாபம் செய்தல் என்றால் இனிய உரையாடல், பாச உரை; பொதுவாக மனைவியுடம் காதலியிடம் பாசமாக உரையாடுவதை சல்லாபம் என்போம்!
வினோதன் என்றால் வேடிக்கை காட்டி மகிழ்ச்சியைத் தருபவன்!
சுரபூபதி என்றால் எல்லாத் தெய்வகுணங்களினதும், தெய்வ மனங்களினதும் தலைவன், இந்திரன் என்பது வருவதை முன்னரே அறியத் தரும் தெய்வ குணம் கொண்ட தெய்வமனம் - Intuitiveness. இதன் மருகன், தலைவன் முருகன்.
முருகன்
1. எப்போதும் மகிழ்ச்சியுடைய உல்லாசன்
2. கலக்கம், குழப்பமற்ற நிராகுலன்
3. மனதை முழுமையாக அடக்கிய சுய ஸ்வரூபத்தை அடைந்த யோகவிதன்
4. இனிய பாசமாக கதைக்கக்கூடிய சல்லாபன்
5. வேடிக்கை காட்டி மகிழ்ச்சி தரக்கூடிய வினோதன்
6. எல்லாத் தெய்வகுணங்களினதும், வருவதை முன் அறிவிக்கும் தெய்வ மனதின் அதிபதி
இந்த ஆறு குணங்களதும் கதிர்ப்பே ஆறுமுகங்கள், முருகனை வழிபடும் போது இந்தக்குணங்கள் எமக்கு வாய்க்கும்! அப்படி வாய்த்தால் அவர்களை எவருக்கும் பிடிக்காமல் போகுமோ!
எப்போதும் உல்லாச மனமுடையவனை அனைவரும் விரும்புவர்
கலக்கம், குழப்பமற்ற மனது உடையவன் அனைவருக்கும் ஒரு பலமாக, ஆலோசனை கேட்டு, தலைவனாக ஏற்கக்கூடியவனாவான்!
யோகத்தால் மனதைக் கட்டியவன் சிற்றின்ப, புலன் இன்பங்களுக்கு ஆளாகமாட்டான்.
பாசமாகக் கதைக்கத் தெரிவனிடம் மயங்காதவர் எவரோ?
வேடிக்கை காட்டி மகிழ்ச்சி உருவாக்கக் கூடியவனை எல்லோரும் விரும்புவர்!
தன்னை எதிர்த்த சூரபதுமனையே சேவலும், மயிலுமாக்கி சாயுச்சிய பதவி வளங்கி தன்னுடன் வைத்துக்கொண்டவன், எதிரிகளை வதம் செய்யாமல் தன்னுடைய இந்த அறுகுணத்தால் வசம் செய்பவன் முருகன்!
இந்தப்பாடலை தான் "Harry Dickman என்றவொரு ஜெர்மானிய மாணவனுக்கு பிரயோகம்ச செய்யச் சொல்லிக்கொடுத்து அவர் அதன் படி செய்து அவரை சூழ வேலை செய்பவர்கள் அவருடன் உள்ள எதிர்ப்பு மாறி அவருக்கு ஆதரவு தருபவர்களாக மாறிவிட்டார் என்று தியாகராஜ முதலியார் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.
உங்களைச் சூழ உள்ளவர்களை உங்களுக்குச் சாதகமானவர்களாக மாற்ற இந்தக் கந்தரனுபூதிப் பாடலின் பொருளை உணர்ந்து அந்தப்பண்புகள் {உல்லாச நிராகுல யோகவிதன் சல்லாப வினோதன் சுரபூபதி} உங்களிலும் முருகன் அருளால் உண்டாவதாக பாவிக்கவும்! அற்புத மாற்றத்தைக் காண்பீர்கள்.
இதற்கு ஒரு யந்திரமும், மூல மந்திரமும் பிரயோகம் இருக்கிறது. அதை குருமுகமாக அணுகி கற்றுக்கொள்ளவும் 077 627 1292

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...