கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 11
*************************************************
மெய்ப்பொருள் காண - பாபக்கர்மங்களை வென்று குண்டலினி விழிக்க
****************************************************
இந்தப் பாடலுக்கு சித்தர் பிரான் பிரயோகமாக இட்ட தலைப்பு "குளிகை மோகனம் பலிக்க (தளிகை சேர்க்க) என்பதாகும்.
குளிகை என்ற சொல்லின் அர்த்தம் உருண்டை, மாத்திரை என்று பொருள் பட சித்த மருத்துவத்தில் பாவிக்கப்படுகிறது. இந்தப் பொருளை எடுத்துக்கொண்டே ஒரே வரியில் இதன் பயன்பாட்டினை விளக்காமல் தியாகராஜ முதலியார் முதலானோர் பொருள் செய்துள்ளனர்.
ஆனால் இந்தப்பாடலிற்கும் இந்தச் சொல்லிற்கும் மிகுந்த நெருக்கமான தொடர்பு உண்டு. இங்கு சித்தர் பிரான் இட்ட தலைப்பு குளிகை மோகனம் என்பதாகும். அதாவது குளிகையை மோகிக்கச் செய்வதற்கு என்று இதன்பொருள்.
குளிகை என்பது குளிகன் காலம் எனப்படும் நேரமாகும். சனியின் உபகிரகமான குளிகை காலம் சாதாரண வேலைகளுக்கு உகந்த நேரமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஜபம், தியானம், தானம், பித்ரு கர்மா போன்றவற்றிற்கு ஏற்ற நேரமாகக் கருதப்படுகிறது. சனியின் நேரம் காரியத்தடைதரும் என்றாலும் பாவ நிவர்த்திக்குரிய காலமும் ஆகும். இந்த நேரத்தில் மரணம் நிகழ்வது கர்மக் காரகனான சனியின் ஆதிக்கத்தில் பாவங்கள் நீங்கி உயிர் நன் நிலை அடைவதாகச் சொல்லப்படுகிறது. இந்த குளிகனையே மாந்தி என்றும் சொல்லப்படுகிறது.
குளிகன் பற்றி பராசர ஹோரா இப்படிச் சொல்கிறது:
ஶனீயம்ʼ சாபரம்ʼ ஜ்ஞேயம்ʼ மாண்டி³ நாம க்³ரஹம்ʼ ஶுப⁴ம் .
ஸதா³ து பாபகர்மாணம்ʼ காரகோ மரணஸ்ய ச ..
சனியோடு அறியப்படவேண்டிய மற்றொரு கிரகம், மாந்தி என்று பெயர் கொண்ட இந்தக் கிரககம் சுபமானது என்றாலும் பாபக் கர்மத்தையும், மரணத்தையும் குறிகாட்டுகிறது.
இந்தப் பதினொராவது பாடலில் அருணகிரி நாதர் இந்த மாந்தியின் காரகத்துவமான மரணம், பாபக் கர்மம் இரண்டையும் வெல்லும் வழியினைப் பற்றிக் கூறுகிறார்.
கூகா என என் கிளை கூடி அழப்போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.