இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால்மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்
Sunday, August 17, 2025
கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 05:
கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 05:
***************************** மகா மாயை சகமாயை அகன்று ஆன்ம விழிப்புப் பெற **********************
நான்காவது பாடலில் ஒருவன் மனைவி, மக்கள் மீது பற்றுக் கொண்டு ஆன்ம விசாரம் கெட்டுவிடக்கூடாது என்பதை விளக்கியவர் இந்த பாடலில் எமக்கு ஏற்படக்கூடிய இரண்டுவகை மாயைகள் பற்றிக் கூறுகிறார்.
ஒன்று மகமாயை அல்லது மகா மாயை, இது உலகத்துடன் எமக்கு இருக்கும் பற்று பந்தத்தால் உருவாகுவது. பெரியது! சூரபத்மனுக்கு ஏற்பட்ட அண்டசராசரங்களை ஆளவேண்டும், தேவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் போன்ற ஆசைகள்.
மற்றது சக மாயை - கூட்ட மாயை; உயிர்களைத் திசை திருப்பும் குழப்பம். வீடு, செல்வம், மனைவி, மக்கள், பிள்ளைகள் என்று மனதைக் குழப்பும் மாயை!
மகமாயையில் மாட்டிக்கொண்டவர் குழப்பம் எதுவும் இல்லாமல் தான் உலகிற்கு ஏதோ நன்மை செய்கிறேன் என்ற உறுதியான எண்ணத்துடன் ஆனால் தனது புகழ், செல்வாக்கு என்பவற்றில் கருத்துடன் செயலாற்றுவார்.
சகமாயையில் மாட்டிக்கொண்டவர், தனது வீடு, செல்வம், பெண்களைப் பற்றி பலவிதமான இன்பக்கற்பனைகளை உருவாக்கி தன்னை பந்தப்படுத்திக்கொள்வார்.
ஒருவனுக்கு உண்மை ஆன்ம முன்னேற்றம் வேண்டும் என்றால் மகமாயையும் நீங்க வேண்டும், சகமாயையும் நீங்க வேண்டும் அதற்கு என்ன வழி?
சூரபத்மனுக்கு இருந்தது மகாமாயை அண்ட சராரசரங்கள் அனைத்தையும் ஆளவேண்டும், தானே இறைவனுக்கு நிகரானவன் என்ற மாயை! இந்த மாயையுடன் அவன் அதியாற்றல் உள்ளவனாகவும் இருந்தான். இந்த மகாமயையிநை நீக்கி அவனது ஆற்றலை சேவலும், மயிலுமாக மாற்றிக்கொண்ட பிரான் - கந்த பிரான்.
பிரான் என்றால் உயிரை விட்டுப் பிரியாத பிராண ரூபமானவர் என்று அர்த்தம்! முருகப்பெருமான் உயிரை விட்டுப்பிரியாத பிராண ரூபமானவன் என்பதால்தான் சூரபத்மனின் பிராணனை மாயையை நீக்கி மயிலாக்கி தனது வாகனமாக்கி தன் அடிவர்களுக்கு அருளும் ஆற்றல் ஆக்கினார்; சூரபத்மனின் கொக்கரிக்கும் சேவல் மனதை கொடியாக்கி அணியாக்கி, பக்தர்களை ஈர்க்கும் சின்னமாக்கினார்.
மூருகப்பெருமானின் ஆறுமுகங்களும் பக்தனுக்கு மாயை நீக்கும் ஆறு தீக்ஷைகளைத் தரக்கூடியது! சுப்ரமணிய திரிஸதி சிவபெருமானின் ஐந்து முகங்களுடன் - சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் - ஆறாவது அதோமுகமும் வெளிப்பட்ட சிவரூபம் என்று சொல்கிறது. ஆறாவது முகம் எவருக்கும் தெரியாத, மறைமுக ஞானம். ஆகவே திரிஸதி ஸுப்ரமணிய ஶிவம் என்று முருகனைச் சொல்கிறது. இந்த ஆறு முகங்களிலும் இருந்து வெளிப்பட்ட மந்திர தீக்ஷையால் - சக்தி நிபாதத்தினால் - ஒருவருக்கு மகாமாயை அழியும்.
இப்படி ஆறு முகங்களிலுமிருந்து சக்தி நிபாதத்தினால் தீக்ஷையை தான் பெற்றேன் என்று "முகமாறும் மொழிந்தும்" என்ற வரியால் அருணகிரி நாதர் கூறுகிறார்.
ஒருவன் இவ்வளவு சக்திவாய்ந்த தீக்ஷையால் ஆற்றலைப் பெற்றாலும் அகம், மாடு, மடந்தை - வீடு, செல்வம், மனைவி என்ற சகமாயை வரும் போது மனம் அயர்ந்து குழம்பும் தன்மை எனக்குள் இருக்கிறது என்று தனது சாதனையில் ஏற்படும் தொய்யல் நிலையை வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார்.
இந்தப்பாடலில் மிக உன்னதமான உபதேசத்தைத் தருகிறார். இறைவனுக்கு எல்லாவித மாயைகளையும் அகற்றும் ஆற்றல் இருந்தாலும், எம்முடன் எம்மை விட்டு எப்பொதும் பிரியாத பிரானாக இருந்தாலும், நாம் சகமாயையால் உருவாகும் அயர்ச்சி, குழப்பத்தினால் இறைவன் - குரு தரும் தீக்ஷையைக் கொண்டு ஆன்ம முன்னேற்றம் பெறுவதில்லை! ஆகவே சாதகன் தனது சகமாயைக் குழப்பத்திலிருந்து வெளிவந்தால்தான் இறைவனது சக்தி நிபாதம் ஆன்ம முன்னேற்றத்திற்கான பலனைத் தரும்.
நீங்கள் எவ்வளவு வழிபாடு செய்தாலும், தீக்ஷைகள் பெற்றிருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் வீடு, செல்வம், மனைவி என்ற சகமாயைக் குழப்பம் தீராமல் இறைவனின் ஆறுமுகங்களிலிருந்து தீக்ஷை பெற்றாலும் முன்னேற்றம் பெற முடியாது.
சூரபத்மனுக்கு சகமாயைக் குழப்பம் இல்லை. அவனது பிரச்சனை மகாமாயை. இந்த மகாமாயையின் மூலம் அவன் முருகப்பெருமானுடன் போர் புரிந்தே சாயுச்சிய பதவியைப் பெற்றான்.
ஆகவே உண்மை ஆன்ம முன்னேற்றம் பெற ஒருவன் வீடு, செல்வம், பெண் பற்று ஆகிய மூன்று சகமாயையிலிருந்தும் வெளிவந்தால் தான் ஆறுமுகங்களிலிருந்தும் வரும் சக்தி நிபாதத்தினால் மகாமாயை நீங்கி உண்மை முன்னேற்றம் பெறமுடியும்.
அருணகிரி நாதரின் பாடலில் வரும் பெண் என்பதை நாம் மனைவி என்று பொருள் கொள்ளக்கூடாது. மனைவி என்பவள் ஒரு ஆணை தர்மத்தின் படி இயங்கச் செய்யும் ஞான சக்தி. மனையாளின் துணையால்தான் ஒருவனுக்கு உண்மை ஞானம் வாய்க்கிறது. எந்தப் பெண் ஒருவனுக்கு மோகத்தையும், குழப்பத்தையும் கொடுத்து பற்றினை உருவாக்குகிறாளோ அவள் மாயா சக்தி! எந்தப் பெண் ஒருவனுக்கு பொறுப்பினை, ஒழுங்கினை, அன்பினையும் கொடுத்து மனதைத் தெளிவாக்குகிறாளோ அவள் ஞான சக்தி. அருணகிரி நாதர் மாய சக்தியாக இயங்கும் பெண் மீதுஇருக்கும் பற்றினையே கடிகிறார்.
சரி எப்படி இந்த சகமாயையிலிருந்து வெளிவந்து முருகனின் ஆறுமுகங்களிலுமிருந்து வரும் ஆற்றலை ஏற்று ஞானம் பெறுவது?
மனதைனை மந்திர சாதனையில் இருத்த வேண்டும். மனம் தெளிய வேண்டும்.
இந்தப் பாடலிற்கு ஒரு மூல மந்திரமும், யந்திரமும் உண்டு. அதை முறைப்படி சாதனை செய்ய சக மாயை அழிந்து, மகமாயை நீக்கும் முருகனின் ஆறுமுகங்களிலுமிருந்து தீக்ஷை கிடைக்கும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.