சித்தர்களின் ஸ்ரீ வித்தையும் ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமமும்


சித்தர்களின் நூற்களை படிப்பவர்கள் வாலை, திரிபுவனை, நாற்பத்தி முக்கோண சக்கரம் என்றெல்லாம் இருக்க காண்பர். இவையெல்லாம் சித்தர்களின் ஸ்ரீ வித்தை பரிபாஷைகள். அகத்தியர் முதற்கொண்டு அனைத்து சித்தர்களுமே ஸ்ரீ சக்கரத்தினை உபாசித்த ஸ்ரீ வித்தைக்காரர்கள்தான். திருமூலரின் திருமந்திரத்தில் ஸ்ரீ வித்தை மூல மந்திரங்களினை பரிபாஷையில் விளக்கி இருக்க காணலாம்.  சித்தர் நூற்களில் காணப்படும் ஸ்ரீ வித்தை தொடர்பான  விடயங்களை திரட்டி தனிப்பதிவாக இன்னொரு சமயம் பதிவிடுவோம்.   இப்படிப்பட்ட ஸ்ரீ வித்தைக்கு திறவு கோலாக இருப்பது  ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம், இது சமஸ்க்ருதத்தில் இருப்பதால் தமிழ் மட்டும் தெரிந்த அன்பர்கள் படிப்பதற்கு கஷ்டமாக இருந்து வந்துள்ளது எனினும் இன்று அவை ஒலிவடிவில் கிடைப்பதால்  அவற்றை கேட்க முடியுமான நிலையில் உள்ளது. 

இந்த லலிதா சஹஸ்ர நாமத்திற்கு தற்காலத்தில் பலரும் உரை எழுதியுள்ளார்கள். அத்தகைய உரைகளில் மிக எளிமையான அதே நேரம் கருத்துச் செறிவான உரை ஒன்றினை எமது நண்பர் அருட்திரு . ரவி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருந்தார். நாமும் அவற்றை ஆவலுடன் படித்திருக்கிறோம். நேற்றைய தினம் எமது நித்திய பூஜையின் ஸ்ரீ சக்கரத்தின் ஏழாவது  ஆவரணத்தினை துதிக்கும் போது மனதில் ஸ்ரீ வித்தை பற்றி எழுதலாமே என்று எண்ணம் தோன்றியது, பல காலத்திற்க்கு முன்னரே எமது குரு  அனுமதி அளித்திருந்தாலும் எழுதும் எண்ணம் வரவில்லை. எதைப்பற்றி எழுதலாம் என்று எண்ணும் போது ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம் பற்றி எழுது என தேவி மனதில் தோற்றுவித்தாள். லலிதா சகஸ்ரநாமம் பற்றி என்ன எழுதுவது என்று எண்ணிக்கொண்டிருக்க நண்பர் ரவி அவர்கள் ஆங்கிலத்தில் அருமையான உரையினை எழுதியிருக்கிறாரே அதனை மொழிபெயர்த்தால் என்ன என்று எண்ணிக்கொண்டு அவருக்கு எனது எண்ணத்தினை மின்னஞ்சலில் அனுப்பினேன். அடுத்த சில நிமிடங்களில் அவரது அனுமதியும் பதிலும் வந்தது, ஆக அவரது அனுமதியுடன் ஆங்கிலத்தில் அவர் எழுதிய ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம் விளக்க உரையினை தழுவி தமிழில் இனி தொடராக எமது பதிவுகளில் வர உள்ளது. 

சமஸ்க்ருதம் தெரியவில்லை, பாராயணம் செய்ய முடியாது என்று கருதுபவர்கள் கூட இவற்றை மனது ஊன்றி படிப்பார்களே ஆனால் அவர்களது சித்தத்தில் இந்த தெய்வ சம்ஸ்காரங்கள் பதிந்து உயர் ஞானத்திற்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயம் இல்லை. 

பொதுவாக ஸ்ரீ வித்தை பற்றி கேட்க உபாசிக்க ஒருவருடைய கடைசி பிறவியில் முக்தி நெருங்கும் போது கிட்டும் பாக்கியம் என்பது ஐதீகம், அந்தப்பாக்கியம் எமது வாசகர்கள் அனைவருக்கும் கிட்ட பெருங்கருணை உள்ள பேரரசி ஸ்ரீ லலிதையை பணிந்து இந்த தெய்வீக சமுத்திரத்தினுள் புகுவோம். 

சித்திரை அமாவாசை நாளான 10ம்  திகதி தொடங்கி பதிவுகள் வரும். 

ஸ்ரீ மாத்ரே நமஹ 

ஸ்ரீ குரவே நமஹ 
 

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு