குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Tuesday, April 16, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 06: பஞ்சதசி மந்திரம் தொடர்ச்சி .....

இரண்டாவது கூடமான காமராஜ கூடம் அல்லது மத்திய கூடம் லலிதாம்பிகையின் கழுத்து தொடக்கம் நாபி வரையிலான பகுதியினை தியானிக்க வேண்டும். இந்தக்கூடமே அதிகளவு பீஜங்களை உடையது, மொத்தம் ஆறு பீஜங்கள். அவை ஹ - ஸ - க - ஹ - ல -  ஹ்ரீம்.  இவற்றில் க, ல, ஹ்ரீம் ஆகிய மூன்றும் ஏற்கனவே விபரிக்கப்பட்டுவிட்டது. புதிதாக இரண்டு பீஜங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஹ இரண்டு தடவை வருகிறது. முதலாவது ஹ சிவனையும், இரண்டாவது ஹ ஆகாய தத்துவத்தினையும் (சௌந்தர்ய லஹரி 32 ஸ்லோகம் இந்த இரணடாவது ஹ சூரியனை குறிக்கின்றது எனக்கூறும்) இடையில் உள்ள ஸ  விஷ்ணுவினையும் குறிக்கும். பஞ்ச பூதங்களில் ஸ  என்பது வாயு பூதத்தினை குறிக்கும். ஹ என்ற பீஜம் அலி பீஜம் எனவும் குறிப்பிடப்படும். இதனாலேயே ஹ்ரீம் பீஜம் சிவ சக்தி ஐக்கியம் எனக்கூறப்படுகிறது. முதலாவது கூடத்தில் பிரம்மா குறிப்பிடப்பட்டது, ஆதலால் அது படைத்தலுடன் தொடர்புடையது. இந்த கூடத்தில் விஷ்ணு குறிப்பிடப்படுவதுடன் இந்தக்கூடம்  காத்தலுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்தக்கூடம் 11.50 மாத்திரை அளவில் உச்சரிக்கப்பட வேண்டியது. இதனை உச்சசிக்கும் போது அனாகதத்திலிருந்து ஆஞ்சா வரையில் கோடி சூரிய பிரகாச ஒளி பயணிப்பதாக தியானிக்க வேண்டும். இந்த கூடம் சூரிய கண்டம் எனவும் குறிப்பிடப்படுகிறது. பிரம்மத்தினுடைய இரண்டாவது தொழிலான காத்தல் தொழிலிற்கான சக்தியினை வழங்குவது. இது காத்தலுடன் தொடர்புடையதால் இச்சை இணைந்தே இருக்கும்.
மூன்றாவதும் கடைசியுமான கூடம் சக்தி கூடம் எனப்படும். இதில் நான்கு பீஜங்கள் உள்ளன. இது லலிதாம்பிகையின் நாபி தொடக்கம் பாதம் வரையிலான பகுதியாக தியானிக்க வேண்டும். இதிலுள்ள பீஜங்கள் ஸ - க - ல - ஹ்ரீம் ஆகும். முதலாவது கூடம் ஐந்து  பீஜங்கள், இரண்டாவது ஆறு பீஜங்கள், முன்றாவது நான்கு பீஜங்கள் உடையது. இதன் மூலம் காத்தலுக்குரிய சக்தியில் அதிக பீஜங்களும் அழித்தலுக்குரிய கூடத்தில் குறைந்தளவு பீஜங்களும் காணப்படுவதன் மூலம் காத்தலுக்கு அதிக சக்தியும் அழித்தலுக்கு குறைந்த சக்தியும் தேவை என்பதை உணரலாம். வாக்ப கூடம் சூஷ்ம புத்தியினை குறிக்கும். காமராஜ கூடம் உயர்ந்த வீரத்தினையும், செல்வம், புகழ் ஆகியவற்றை தரும், மூன்றாவது சக்தி கூடம், முதலிரண்டு கூடங்களில் உள்ளவற்றை விரித்து ஆற்றலை கொடுக்கும். மத்திய கூடத்தில் உள்ள இரண்டு "ஹ" பீஜம் நீக்கப்பட்டு  மூன்றாவது சக்தி கூடம் உருவாகின்றது. இந்த மூன்றவது கூடம் எட்டு அரை மாத்திரை அளவில் உச்சரிக்க வேண்டியது. முழு பஞ்சதசி மந்திரமும் முப்பத்தியொரு மாத்திரை அளவில் உச்சரிக்க வேண்டியது. தொடர்ச்சியான ஜெபத்தில் ஒவ்வொரு  கூடத்திற்கும் இடையில் நேர இடைவெளி இன்றி இருபத்தியொன்பது மாத்திரை அளவில் ஜெபிக்க வேண்டும். இந்த மாத்திரை அளவுகள் மானசீக ஜெபத்திற்கு கணக்கில் கொள்ளத்தேவை இல்லை. இந்தக்கூடத்தினை அனாகதத்தில் இருந்து நெற்றி வரை கோடி சந்திர பிரகாசமாக தியானிக்க வேண்டும். அனாகதத்தில் இருந்து நெற்றியினை அடைவதற்கு ஒன்பது நிலைகள் உள்ளன. இந்த ஒன்பது நிலைகளும் முன்னர் விளக்கிய ஹ்ரீம் பீஜத்தில் உள்ள  நாதத்தின் பகுதிகள். இந்தக்கூடம் சந்திர கண்டம் எனப்படும், இது பிரம்மத்தின் மூன்றாவது செய்கையான அழித்தலை குறிக்கும். அழித்தல் "ல" என்ற பீஜத்தால் குறிப்பிடப்படும். பொதுவாக "ல" ஆயுதங்களான சக்கரம், வஜ்ரம், திரிசூலம் ஆகியவற்றை குறிக்கும். பஞ்சதசியில் உள்ள மூன்று ஹ்ரீம் பீஜங்களும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் குறிக்கும்.
ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லஹரியின் 32 ஸ்லோகத்தில் பஞ்ச்சதசியின் பீஜங்கள் பற்றி மறைவாக பேசுகிறார். இரண்டாவது கூடத்தில் உள்ள இரண்டாவது "ஹ" பீஜம் ஆகாய பூதம் இன்றி  சூரியனை குறிப்பதாக  கூறுகிறார். ஒவ்வொரு பீஜத்திற்குமான விளக்கங்கள் ஒவ்வொரு அறிஞருக்கு ஏற்ப வேறுபடும். ஒரு மாலை (108) பஞ்சதசி ஜெபம் செய்வது முன்று மாலை பூர்ண காயத்ரி ஜெபிப்பதற்கு சமம் எனக் கூறப்பட்டுள்ளது. பூர்ண காயத்ரி என்பது காயத்ரி மந்திரத்தின் இறுதியில் " பரோ ராஜஸே ஸாவதோம்" என்ற வரியினை சேர்த்து ஜெபிப்பதாகும்.

{இங்கு கூறப்பட்ட பஞ்சதசி மந்திரமும் சரி இந்தப்பதிவுகளின் பின்னர் கூறப்படும் எந்த மந்திரமும் சரி முறையான குரு  தீட்சையின் பின்னரே ஜெபிக்க வேண்டிய மந்திரமாகும் என்பதினை கவனத்தில் கொள்ளவும். இந்த பதிவுகளின் நோக்கம் விடயங்களை மறைப்பில்லாமல் தெளிவாக அனைவருக்கும் கொடுக்கவேண்டும் என்பதே, அதேவேளை அதனை முறைப்படி குருவிடம் பெற்று சாதனை செய்வதே உண்மையான சித்தியினை தரும் என்பதை மறக்க வேண்டாம், இதைப்படிப்பது உங்கள் சித்தத்தில் பதிந்து இந்த வழியில் எப்போதாவது ஒரு நாள் பயணிக்கச் செய்யும்}.

அடுத்த பதிவில் சோடஷி மந்திரம் பற்றி பார்ப்போம் 


*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...