ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 11: முதலாவது தியான ஸ்லோகம்


லலிதைக்கு நான்கு தியான ஸ்லோகங்கள் உள்ளது என்பது பற்றி முன்னர் பார்த்தோம், இனி அவற்றின் விவரணம் பற்றி பர்ப்போம். இந்த பதிவில் முதலாவது தியான ஸ்லோகத்தின் விளக்கம் தரப்படுகிறது. ஸ்லோகம் வருமாறு;

ஸிந்தூராருணவிக்ரஹாம் 
  த்ரிநயனாம்   மாணிக்யமௌலிஸ்புரத்
தாராநாயக  ஷேகராம்  
  ஸ்மிதமுகீமாபீனவக்ஷோருஹாம் |
பாணிப்யா மலிபூர்ணரத்னசஷகம் 
  ரக்தோத்பலம் பிப்ரதீம் 
ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்தசரணாம்
  த்யாயேத் பராமம்பிகாம் ||

இதன் பத அர்த்தம்: வருமாறு;
ஸிந்தூராருணவிக்ரஹாம் - ஸிந்தூரம் என்றால் பெண்களின் நெற்றியில் வைக்கும் குங்குமம் என்று அர்த்தம். அதன் நிறம் சிவப்பு. அருணாம் என்றால் சூரியன் உதிக்கும் போது உள்ள நிறம். அதுவும் சிவப்பே. இது லலிதா தேவியின் நிறத்தினை குறிக்கிறது. அவளுடைய நிறம்  குங்குமம் பொன்ற சிவப்பு எனவும் உதிக்கின்ற சூரியனின் சிவப்பு எனவும்  இருதடவை வலியுறுத்தி உள்ளதன் காரணம் என்ன? வாக்தேவிகள் தேவியின் நிறம் சிவப்பு என்பதனை இரண்டு உதாரணம் கூறி மிக்க வலியுறுத்திய கூறவே. விக்ரஹாம் என்றால் உருவம் என்று பொருள். த்ரிநயனாம் என்றால் மூன்று கண்ணுடையவள் இது பௌதீகமான மூன்று கண்கள் உடையவள் என்று பொருள் இல்லை. பௌதீக கண்களையும் தாண்டி ஞானத்தின் ஊடாக பார்க்க கூடியவள் என்று பொருள். சாதகனுக்கும் ஞானத்தினை பெற்றபின்னரே மூன்றாவது கண் திறக்கப்படுகிறது. இதனாலேயே ஞானத்தை தரும் தேவிக்கும் மூன்று கண்கள் இருப்பதாக உருவகிக்க படுகிறது. இந்த மூன்று கண்களும் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றினையின் குறிக்கும். ஆக்ஞ்சா சக்கரத்தின் நிலையினையும் குறிக்கும்.

மாணிக்யமௌலிஸ்புரத் - அவளது கிரீடம் மாணிக்கத்தினையும், சந்திரனையும் கொண்டுள்ளது.

தாராநாயக  ஷேகராம்  - தாரா என்றால் நட்ச்சத்திரங்களை குறிக்கும், நாயக என்றால் தலைவன் என்று பொருள், நட்ச்சத்திரங்களின் தலைவன் சந்திரன், அவனது ஒளியினால் கிரீடத்தில் உள்ள மாணிக்கங்கள் ஒளிருகின்றன.

ஸ்மிதமுகீ - ஸ்மித என்றால் புன்னகை என்று பொருள், முகிம் - முகம், எப்போதும் சிரித்த முகம் உடையவள் லலிதை, பொதுவாக எல்லா தேவ தேவியரும் புன்னகைத்த முகமாய்தான் இருப்பார், அப்படியாயின் லலிதையின் சிறப்பு என்ன? அதன் பதில் 48 வது நாமம் ஆனா மஹா லாவண்யா சேவிதா. அவள் பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த அழகு வடிவானவள். வேறு எதனுடனும் ஒப்பிட முடியாதவள். பல நாமங்களில் அவள் பிரம்மமாக உருவகப்படுத்தப் படுகிறாள். பிரம்மம் என்பது எல்லையற்ற ஆனந்த வடிவானது. லலிதாம்பிகை அழகினதும் ஆனந்ததினதும் இணைந்த வடிவம்.  அழகு என்பது பௌதிக உடலுடனும், ஆனந்தம் என்பது மனதுடனும் தொடர்புடையது. அவளுடைய ஆனந்தமான மனது அழகான உடலிற்கு மேலும்  பொலிவு சேர்க்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள். ஒருவனுடைய பண்பும் குணமும் அவகுடைய முகத்தில் தெரியும். உபாசனை செய்பவரது முகத்தில் தேஜஸாக அவரது உபாசனையின் ஆற்றல் வெளிப்படும். (உபாசனை ஐந்து வகைப்படும் - அபிகமான - அணுகுதல், உபதானம் - நைவேத்தியம் முதலியவை செய்தல், இஜ்யா - சமர்ப்பணம், சுவாத்தியம்- ஜெபம், யோகம்- இணைவு அல்லது பக்தி) ஒருவனுடைய முகத்தில் அத்தகைய தேஜஸ் ஒளிரத்தொடங்கும் போது அவன் சரியான பாதையில் செல்கிறான் என்று அர்த்தம்.

ஆபீனவக்ஷோருஹாம் - முழுமையாக விருத்தியடைந்த முலைகளை உடையவள், பெண்ணின் மார்பு தாயாகி பாலூட்டும் போதே முழுமையடைகிறது. உலகத்தினை போசிக்கும் தாயினுடைய மார்புகள்.

பாணிப்யாம் - மடித்த கைகள்

அலிபூர்ண - தேன் நிறைந்த

ரத்னசஷகம் - தேனிகள் சூழந்த மாணிக்கத்தினால் செய்த கிண்ணத்தினை தனது கைகளில் கொண்டவள்.

ரக்தோத்பலம் பிப்ரதீம் -  மறுகையில் சிவப்பு மலர்களை கொண்டவள்.

{இந்த தியான ஸ்லோகத்தில் இரண்டு கைகள் உடையவளாகவே தேவி உருவகிக்கப்படுகிறாள், ஆனால் மற்றைய ஸ்லோகத்தில் நான்கு கரங்களுடனும், சோடஷி ரூபத்தில் பதினாறு கைகள் உடையவளாகவும் வர்ணிக்கப்படுகிறாள்.}

ஸௌம்யாம் - அழகு

ரத்னகடஸ்த - மாணிக்கம் நிறைந்த குடம்

ரக்தசரணாம் - சிவந்த கால்களை பதிக்கின்றாள். மாணிக்கம் நிறைந்த குடத்தில் தனது கால்களை பதிப்பிக்கின்றாள்.

த்யாயேத் - தியானிக்கிறேன்

பராமம்பிகாம் - உயர்ந்த  அம்பிகையினை, பரா (நாமம் 366) என்பது தேவியின் மிக உயர்ந்த வடிவம்.

இந்த தியான ஸ்லோகத்தின் படி தேவியின் வடிவம் வருமாறு; அவளது நீறம் சிவப்பு, அவளுடன் தொடர்புடைய அனைத்துமே சிவப்பாக இருக்கிறது. அவள் எல்லையற்ற அழகானவள். ஒருகையில் மாணிக்கத்தால் செய்த கிண்ணத்தில் தேனினை கொண்டிருக்கிறாள். மறுகையில் சிவந்த மலர்களை கொண்டிருக்கிறாள். அவளது சிவந்த பாதங்களை மாணிக்கங்கள் கொண்ட பாத்திரத்தில் பதிக்கிறாள். ஏன் பாதங்கள் சிவப்பாக இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை. பாத்திரத்தில் இருந்து வரும் மாணிக்கத்தின் நிறக்கற்றைகளால் ஆக இருக்கலாம். இந்த ஸ்லோகத்தின் படி அவளுடன் தொடர்புடைய அனைத்துமே சிவந்த நிறமுடையது என அறியலாம்.*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு