ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 12: இரண்டாவது தியான ஸ்லோகம்


இனி இரண்டாவது தியான ஸ்லோகம்

அருணாம்  கருணாதரங்கிதாக்ஷீம் 
  த்ருதபாஷாங்குஷ புஷ்பபாணசாபாம் |
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை:
  அஹமித்யேவ விபாவயே பவாநீம் ||

இதன் பத அர்த்தம்: வருமாறு;

அருணாம்: உதிக்கின்ற சூரியன்

கருணா: கருணை

தரங்கிதாக்ஷீம் - கண்களில் இருந்து வெளிப்படும் அலைகள்,   கருணை அலைகளை அள்ளி வீசும் கண்களையுடையவள் தேவி.

த்ருத -  ஆதரவு

பாஷா - பாசக்கயிறு

அங்குஷ - அங்குசம்

புஷ்ப - மலர்

பாண - அம்புகளை (மலர்களை அம்புகளாக கொண்டவள்)

சாபாம் - வில்

அணிமாதிபி ராவ்ருதாம் - அணிமா, மகிமா, கரிமா, லஹிமா, ப்ராப்தி, ப்ராகாம்யா, ஈசத்வ, வசித்வ சித்திகளை சூழ உள்ளவள்.

 மயூகை - ஒளிக்கற்றை

அஹ -  நான்

மித்யேவ - விரும்பும்

விபாவயே - பேரின்பம்

பவாநீம் - பவானி, லலிதா சஹஸ்ர நாமத்தில் 112 வது நாமம்.

இந்த ஸ்லோகத்தின் பொருள் வருமாறு: நான் பவானியை தியானிக்கிறேன், உயர்ந்த பேரின்பவடிவானவள், உதிக்கின்ற சூரியனின் நிறத்தை ஒத்த, இது முன்னைய ஸ்லோகத்தில் அவளது சிவப்பு நிறத்தினை உறுதி செய்கிறது.  அவளது கருணை அலைகளை வீசுகிறது. இந்த தியான ஸ்லோகத்தில் நான்கு கைகளை உடையவளாக கருதப்படுகிறது. பின்னிரு கைகளிலும் பாசமும் அங்குசத்தினை  கொண்டிருக்கிறாள். முன்னிரு கைகளிலும்   கரும்பு வில்லும் மலர் அம்புகளையும் கொண்டிருக்கிறாள். இந்த  இந்த ஆயுதங்கள் பற்றிய விபரமான புரிதல்கள் சஹஸ்ர நாம உரையில் தரப்பட்டுள்ளன. இவை நான்கும் தேவியினுடைய நான்கு பிரதான உதவியாளர்களை குறிப்பன. அஷ்டமா சித்திகள் அவளைச் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த ஒவ்வொரு சித்தியும் ஸ்ரீ சக்கரத்தில் குறிப்பிடப்படுகின்றன. நான் உயர்ந்த ஆனந்தமும் ஒளிக்கற்றை போன்ற உருவமும் உடைய பவானி என்ற ரூபத்தினை தியானிக்கிறேன்.*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு