குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Saturday, April 13, 2013

காம ரகசியம் 09: சாதாரண உடலுறவிற்கும் தாந்திரீக பயிற்சியின் ஊடான உடலுறவிற்கும் என்ன வித்தியாசம்?சாதாரண உடலுறவிற்கும் தாந்திரீக பயிற்சியின் ஊடான உடலுறவிற்கும் என்ன வித்தியாசம்?

இந்தக்கேள்விக்கு இருபதாம் நூற்றாண்டின் மிகப்பிரபலமான தாந்திரீக குருவான ஒஷோவின் பதிலினையே இந்தப்பதிவில் பார்க்கப்போகிறோம். 

சாதாரண உடலுறவும் தாந்திரீக உடலுறவும் அடிப்படையில் வேறானவை. சாதாரண உடலுறவு இரு விடுபடலுக்காக நடைபெறுவது, மூக்கில் சளிபிடித்தால் அதை வெளியேற்றினால்தான் நிம்மதியாக இருக்கும். அதுபோல் உடலில் உருவான காமசக்தியினை வெளியேற்றும் போது ஒருவித விடுபடல் நிகழ்கிறது. இதுவே ஆனந்தமாக கருதப்படுகிறது, ஆனால் இது ஒரு அழிவுச் செய்முறை, ஆக்கபூர்வமானதல்ல. இது ஒரு வித சிகிச்சை போன்றது. உடலுக்கு சிறிய நிம்மதியினை அளிக்கும், அதைவிட வேறு எதுவிதபலனும் பெரிதாக கிடைக்காது. 

தாந்திரீக உடலுறவு அடிப்படையில் இதற்கு நேர்மாறானது. அது சக்தியினை வெளிவிடுவதில்லை. விந்தினை உடனடியாக வெளியிட்டு சக்தி இழப்பினை ஏற்படுத்தும் செய்கை அல்ல, சக்தியினை மெதுமெதுவாக ஒன்றச் செய்யும் செயன்முறை. அது ஒரு தொடர்ச்சியான செயன்முறை, முடிந்துவிடும் ஒரு நிகழ்வு அல்ல. 

இது மனிதனின் தரத்தின் தன்மையினை மாற்றிவிடும் செய்கையாகும். இரண்டு விடயங்களை அடிப்படையில் புரிந்து கொள்ளுங்கள்; ஒன்று உடலுறவில் இரண்டு வகையான உச்சகட்டங்கள் காணப்படுகின்றன. முதலாவது வகை இது உங்கள் மன எழுச்சி உச்சிக்கு சென்று அதற்கு மேல் செல்ல முடியாத நிலையில் ஏற்படுவது. இந்த மன எழுச்சி உச்சத்தினை அடைந்த பின்னர் அது தன்னிச்சை அற்றதாகின்றது. சக்தி உடனடியாக நீக்கம் நிகழ்ந்து வெளியேறி விடுகிறது. இந்த வெளியேற்றம் நிகழ்ந்த உடன் உங்களுக்கு உடல் ஒருவித களைப்பினை அடைந்து ஆறுதல் அடைகிறது. உள்ளே சேமிப்பாக இருந்த பாரம் வெளியே வீசப்பட்ட உடன் ஆறுதல் அடைகிறது. இது ஒருவித நிசப்த நிலையினை உடலில் ஏற்படுத்தும், இயற்கையான உடலை ஆறுதல் படுத்தக்கூடிய செய்முறை. இந்த செய்கையின் பின்னர் ஆழ்ந்த நித்திரை உண்டாகும். மதங்களாலும், ஒழுக்ககளாலும் மனம் அசுத்தப்படாமல் இருந்தால் சாதாரண உடலுறவில் ஒருவித மன அமைதியினை அடையலாம். அல்லாமல் அதை ஒரு பாவமான விடயமாக மனதில் எண்ணிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டீர்கள் ஆனால் அதன் பின் ஒழுங்கான நித்திரை வராது, இது தொடரும் போது மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். இதன் காரணமாக நீங்கள் மனதளவில் பெரும் போராட்டத்திற்கு உள்ளாவதுடன் கனவிலும் இந்த உணர்வுகள் வந்து துன்புறுத்தும். நீங்கள் ஒரு இயல்பான மனிதராகவும் வீணான மதப்போதனைகளால் மனதில் காமம்,உடலுறவு போன்ற விடயங்கள் பாபங்கள் என வெட்கம் கொள்ளாத மனிதராக இருந்தால் சாதாரண உடலுறவு ஒரு அருமருந்து. இப்படியான நிலையினால் அடையும் உச்சகட்ட இன்பம் ஒரு வகை. 

மற்றைய வகை உச்சகட்ட இன்பத்திற்கு தாந்திரா ஒரு மையமாகும். முதலாவது வகை உச்சகட்டத்தினை "அதி உச்சகட்டம்" என நாம் குறிப்பிட்டால் இந்த வகை "அதி தாழ் நிலை" எனவே குறிப்பிடவேண்டும். தாந்திர உச்சகட்டம் என்பது "பள்ளத்தாக்கு உச்சகட்டம்" என்றே குறிப்பிடவேண்டும். ஏனெனில் சாதாரண் உச்சகட்டம் என்பது மன எழுச்சியினை தூண்டி சக்தியினை வெளியேற்றுவது, தாந்திரீக உச்சகட்டம் என்பது மன எழுச்சியினை குறைத்து அமைதியும் ஆனந்தமும் அடைவது. இது சாதாரண உடலுறவின் மூலம் நிகழ்வதற்கு நேர் எதிரான செயன்முறை. எனினும் இதனை பயிற்சிப்பதற்கு ஆரம்பத்தில் மன எழுச்சியினை ஏற்படுத்துவது அவசியம், மன எழுச்சி இல்லாமல் இந்த செய்முறையினுள் புகுவது இயலாது. ஆகவே இரண்டு வகையான உடலுறவுகளும் ஆரம்பத்தில் ஒரே வகையிலேயே தொடங்கப்பட்டு முடிவு முற்றிலும் எதிரான வகையில் முடிவுறும். 

முதலாவது வகையிற்கு மன எழுச்சி அதிகமாகவும் உச்சியினை அடையும் போது அதிகமாகவும் இருக்க வேண்டும். இரண்டாவது வகையில் மன எழுச்சி என்பது ஆரம்பிப்பதற்கு மட்டுமே பயன்படும், குறிப்பாக ஆணின் பாலுறுப்பு விறைப்பிற்காக மட்டுமே ஆரம்ப மன எழுச்சி பயன்படும். ஆண் குறித்த நிலையினை அடைந்து உடலுறவு கொள்ளக்கூடிய நிலை அடைந்தபின்பு காதலர்கள் இருவரும் அமைதியான முறையில், உடலினை இணைத்து அசைவற்று மிகுந்த அன்புடன் ஆரத்தழுவி அசைவுகள் அற்று இருத்தல் வேண்டும். ஆணுக்கு விறைப்பு நிலை அற்றுப்போகும் நிலை வரும்போது மீண்டும் மன எழுச்சியினை உண்டாக்கி சிறிதளவு அசைவுகளை உண்டாக்கி பின்னர் ஓய்வு நிலைக்கு வந்து தியான நிலையினை அடையவேண்டும். இப்படி விந்தினை வெளியேற்றாமல் நீண்ட நேரம் அமைதியான நிலையினை அடைந்து பின்னர் இயல்பான தூக்க நிலைக்கு செல்வது "பள்ளத்தாக்கு உச்சகட்ட இன்பம்" எனப்படும். இதில் இருவரும் மிக ஆறுதலான அமைதி நிலைக்கு வருவர். சாதாரண உடலுறவில் இருவரும் மிக்க அமைதி அற்றவராக மன எழுச்சி அதிகரித்து சுமைக்குறைப்பை ஏற்படுத்தும் ஒரு செய்கையாகவே முடிவுறும். இது அவர்களுக்கே ஒரு வித பைத்திய நிலைக்கு செல்வதை போன்று காணப்படும். ஆனால் தாந்திரீக உடலுறவு ஆழ்மான, அமைதியான தியான நிலையினை அடைவிக்கும். 

மனிதனுடைய உயிர்காந்த சக்தி பற்றி தெரிந்திருக்கும் என நம்புகறேன், ஆணும் பெண்ணும் எதிர் எதிரான சக்திகள், ஆண் நேர், பெண் மறை, யிங் - யங் என அழைக்கலாம். ஒவ்வொன்றும் மற்றையதை நோக்கு பாயும் தன்மை உடையது. இரண்டும் ஒன்றை ஒன்று சந்திக்கும் போது ஆழ்ந்த அமைதி உண்டாகும். ஒன்று மற்றதற்கு வலிமையினை ஊட்டி உயிர்ப்பிக்கும். இது அவர்கள் இருவரிலும்சக்திவாய்ந்த  புதிய சக்தியினை உண்டாக்கும். இந்த நிலையில் சக்தி இழப்பு இன்று புதிய சக்தி உருவாக்கம் நடைபெறும். சக்திகள் புதிப்பிக்கப்படும். 

தாந்திரீக உடலுறது நீங்கள் நினைக்கும் அளவிற்கு செய்ய முடியும். சாதாரண உடலுறவு சிறிதளவு நேரத்திற்குள் சக்தி இழப்புடன் முடிவுறும், அப்படி நடைபெற்ற பின்னர் அந்த சக்தி மீளுருவாக்கம் நடைபெறும் வரை மீண்டும் ஈடுபட முடியாது. இது சேமிப்பதும் செலவழிப்பதும் ஆக ஒருவித மன ஆவேசமாகவே இருக்கும். இன்னொரு விடயத்தினை கவனித்தீர்கள் என்றால் மிருகங்கள் உடலுறவை, காமத்தினை எப்போது அனுபவிப்பதில்லை. எந்த விலங்கைப்பார்த்தாலும் காமத்தினால் பேரின்பம் அனுபவிப்பதில்லை. அது ஒரு இயந்திரதனமான செய்கையாகத்தான் இருக்கும், உடலின் இயற்கை உணர்வுகள் அவற்றை உத்வேகப்படுத்தி அவற்றை செய்விக்கும். அதன் பின்னர் அவை ஒன்றை ஒன்று பார்க்காது. மெய்மறந்த இன்பம் என்ற ஒன்றினை அவைகள் அனுபவிப்பதில்லை. சாதாரண செய்கையும் இப்படியானதே! 

ஆனால் ஒழுக்கவாதிகளது கருத்து சற்று முரண்பாடானது; காமத்தில் ஈடுபடாதீர்கள், காமத்தினை இன்பமாக்காதீர்கள், அவை விலங்கு உணர்ச்சி" என்று. இது பிழையானது விலங்குகள் எப்போதும் அனுபவிப்பதில்லை, மனிதன் மட்டுமே அனுபவிக்க முடியும். எவ்வளவு ஆழமாக அனுபவிக்கிறீர்களோ அவ்வளவு ஆழமான மனிதத்துவம் உண்டாகும். உடலுறவு தியானத்தன்மை உடையதாகி மெய்மறந்த நிலை உண்டாகும் போது உயர்ந்த நிலையினை அனுபவிப்பீர்கள். ஒரு விடயத்தினை ஞாபகத்தில் கொள்ளுங்கள் தாந்திரா கூறும் உச்ச கட்டம் "பள்ளத்தாக்கு" நிலையுடையது, சாதாரண உச்ச கட்டம் இல்லை. 

மேற்கில் ஆபிரகாம் மாஷ்லோவ் இந்த உச்சகட்ட அனுபவத்தியனை பிரபலப்படுத்தியவர் ஆவார். உச்சகட்டத்தினை நோக்கிய மன எழுச்சி ஏற்பட்டல் அதன் வீழ்ச்சியும் நடைபெறும். அதனால்தான் ஒவ்வொரு உடலுறவிற்கு பின்னரும் ஒருவித தளர்வினை அனுபவிக்கிறான், இது இயற்கையான ஒன்றே. உச்சியினை அடைந்தால் வீழ்வது நியாதி. ஆனால் இந்த விழ்ச்சியினை தாந்திரீக உடலுறவின் பின்னால் பெறமாட்டீர்கள். இதில் வீழ்ச்சி ஏற்படுவதில்லை. அதற்கு மேல் வீழ்வதற்கு இல்லை ஏனெனில் ஏற்கனவே பள்ளத்தாக்கில்தான் இருக்கிறீர்கள். 

தாந்திரீக உடலுறவின் பின்னர் நீங்கள் உங்கள் சக்தியினை எழுச்சிக்குள்ளாக்குவீர்கள் ஆனால் வீழ்ச்சியினை அடைய மாட்டீர்கள். சக்தி நிரம்பிய நிலையினை அடைவீர்கள். அது உங்களை உயிர்ப்புடையவராகவும் பல மணி நேரம் மெய்மறந்து இருக்க கூடிய தியான நிலைக்கும் இட்டுச்செல்லும். ஆனால் இது நீங்கள் எவ்வளவு ஆழமாக ஈடுபடுகிறீர்கள் என்பதனைப் பொறுத்தே அமையும். இந்த அனுபவம் வாய்க்கும் போது விந்தினை வெளிவிடுதல் சக்தி இழப்புத்தான் என்பதனை உணர்வீர்கள். உங்களுக்கு குழந்தை தேவை என்ற நிலையில் மட்டும் வெளிவிட்டு பயன்படுத்தலாம். இந்த தாந்திரீக உடலுறவின் மூலம் மிக ஆழ்ந்த அமைதியைனை அனுபவிக்கலாம். 

இந்த அனுபவத்தின பின்னர் உங்கள் மனது இலகுவாகும், வன்முறை அற்றுப்போகும், கோபம் வராது, மன அழுத்தம் வராது. இத்தகைய மனிதன் யாருக்கும் தீங்கான செயலை செய்யமாட்டான். அவனது குணங்கள் மற்றவருக்கு உதவுவதாகவே இருக்கும். மற்றவருக்கு இன்பம் கொடுக்காவிட்டாலும் துன்பத்தினை தரமாட்டான். 

தாந்திரா மட்டுமே இத்தகைய புதிய மனிதனை உலகிற்கு தரமுடியும், இத்தகைய மனிதன் காலத்தினை கடந்தவனாகவும், அஹங்காரம் அற்றவனாகவும், இருமைகளை கடந்தவனாகவும் வளர்ந்து கொண்டிருப்பவனாகவும் இருப்பான். 

இந்தப்பதிவில் ஒஷோ கூறியிருப்பது தாந்திரீக உடலுறவின் அடிப்படைகளை மட்டுமே இதனை சாதிப்பதற்கு மூச்சின் நிலையும் பயிற்சியும் அவசியம். மற்றும் இந்த வித்தை பற்றி திருமூலர் "பரியங்க யோகம்" என்ற தலைப்பில் கூறியுள்ளார். அது பற்றி நேரம் கிடைக்கும் போது பார்ப்போம்.

வாசகர்கள் மனச் சங்கடம் இன்றி திறந்த மனதுடன் இந்த விடயம் சார்ந்த அறிவினை வளர்த்துக்கொள்ள பின்னூட்டம் இடுவார்கள் என எண்ணுகிறேன்.

6 comments:

 1. நல்ல செய்தி
  சூடான இடுகையில வருதுனா அதிகமான ஹிட்ஸ் வந்திருக்கனும் ஆனால் பாருங்க யாரும் கமெண்ட்ல ஒரு புள்ளிகூட வைப்பதில்லை. நாம இத படிச்சா நாளுபேர் தப்பா நெனைப்பாங்க்களோனு நெனைக்கிறாங்க.

  ReplyDelete
 2. நீங்கள் கூறுவது உண்மைதான்.இந்த தலைப்பிற்கு கீழ் எழுதப்படும் தாந்திரீகபதிவுகள் ஒவ்வொருமுறையும் அதிக பக்கங்கள் படிக்கப்பட்ட பகுதிகளாக வருகிறது யாரும் கமெண்ட் செய்வதில்லை, நீங்கள் கூறுவதுதான் காரணம் என்பதை நாமும் அறிவோம். என்ன செய்வது நாம் கட்டமைக்கப்பட்ட மனதுடனேயே வாழ்கிறோம்.

  அடிப்படையில் தமிழன் என்றவகையில் எமது முன்னோர்களது களவியலைக்கூட இன்றைய நிலையில் பேசுவதற்கு கூச்சப்படுகிறோம்.

  ReplyDelete
 3. ,,,,,,,,,,நல்ல செய்தி நன்றி நண்பா ,,,,,,,,,,,,

  நல்ல செய்தி அளிக்கும் எல்லா நண்பருக்கும்,
  நான் நன்றி கடன் பட்டவன்,


  மேலும் தெடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அருள் சுமனன் அவர்களே,
  பதிவு மிகவும் அருமையாக விரசமற்று தெளிவாக கையாண்டிருப்பது அருமை.மேலும் ஓஷோவைப் பற்றிய எண்ணத்திலும் மாறுதல் ஏற்படுத்தியமைக்கும் நன்றிகள் ஆயிரம்.
  நன்றி
  ரவீந்திரன்
  ஆத்ம யோக சபையின் மாணவன்.

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...