ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 13: மூன்றாவது தியான ஸ்லோகம்


இனி மூன்றாவது ஸ்லோகத்தின் விளக்கத்தினை பார்ப்போம்

த்யாயேத் பத்மாஸநஸ்தாம்  விகஸித
  வதநாம்  பத்ம  பத்ராயதாக்ஷீம் 
ஹேமாபாம்  பீதவஸ்த்ராம் கரகலிதலஸத்தேம 
  பத்மாம்   வராங்கீம்                               |
ஸர்வாலங்கார - யுக்தாம்  ஸததமபய 
  தாம்  பக்தநம்ராம்   பவாநீம் 
ஸ்ரீ வித்யாம்  சாந்தமூர்த்திம் 
 ஸகலஸுரநுதாம்  ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ||

பத அர்த்தம்: 
த்யாயேத் - தியானிக்கின்ற

பத்மாஸநஸ்தாம் - தாமரையில் அமர்ந்திருக்கின்ற அல்லது கால்கள் மடித்து 
பத்மாசனத்தில் அமர்ந்திருக்கின்ற

விகஸித வதநாம் - கவர்ந்திழுக்கும் முகம், விகஸ என்றால் சந்திரன் என்றும் பொருள், தேவியின் முகம் பௌர்ணமி சந்திரன் போன்றது, 

பத்ம- தாமரை 

பத்ராய - இதழ்

தாக்ஷீம் - கண்கள் (தாமரை இதழ் போன்ற கண்கள்

ஹேமாபாம் - தங்க நிறம்  

பீதவஸ்த்ராம் -  தங்க இழையுடைய ஆடை

கரகலிதலஸத்தஹேம - கைகளில் உடைய

ஹேமபத்மாம் - தங்க நிற தாமரை (தங்க நிற தாமரைகளை கைகளில் உடைய) 

வராங்கீம் - அதீத அழகான உடல் அங்கள் உடைய

ஸர்வாலங்கார - எல்லவிதமான அலங்காரங்கள் கொண்ட 

யுக்தாம் - நகைகள் 

ஸததமபயதாம்  - தொடர்ச்சியான அபயத்தை அளித்த 

பக்தநம்ராம் - தன்னை வணங்குகின்ற பக்தர்களின் பேச்சைக்கேட்டவண்ணம்

பவாநீம்- பவன் ஆகிய சிவனின் பத்தினி

ஸ்ரீ வித்யாம் - மந்திர தந்திர சாஸ்திரமான ஸ்ரீ வித்தை வடிவினள்

சாந்தமூர்த்திம் - சலனமற்ற உருவுடைய

ஸகலஸுரநுதாம்- எல்லா தேவ தேவியராலும் வணங்கப்படுகின்ற

ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் - எல்லவித சௌபாக்கியங்களையும் தருபவள்

இதன் முழுமையான பொருள் உருவகம் வருமாறு: தாமரையில் அமர்ந்திருக்கின்றாள். எல்லோரையும் கவர்ந்திர்ளுக்கும் முகம், கண்கள் தாமரை இதழ்கள் போன்று அழகானவையாக இருகின்றது. அவளது உடலில் நிறம் தங்க நிறமாக ஜொலிக்கிறது, உடுத்திருக்கும் உடையின் நிறம் தங்க தங்க இழைகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. கைகளில் தங்கத்தாமரைகளை கொண்டிருக்கிறாள். உடல் செதுக்கிய சிற்பம் போன்று அழகாக இருக்கிறது. உடலை அழகுபடுத்தும் எல்லாவித ஆபரணங்களையும் அணிந்ததிருக்கிறாள். தன்னுடைய பக்தர்களை இடைவிடாமல் காப்பாற்றுகிறாள், அவளுடைய பக்தர்களின் பிரார்த்தனைகளை தேவைகளை கேட்கிறாள், ஸ்ரீ வித்தையின் மந்திர மற்றும் தந்திர முறைகளில் உறைந்துள்ளவள். அமைதியான சலனமற்ற வடிவுடையவள். எல்லா தெய்வங்களாலும் வழிபடப்படுபவள். அதி உயர்ந்த தன்மை உடையவள், எல்லவித சௌபாக்கியங்களையும் தருபவள். *****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு