குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Sunday, April 14, 2013

காம ரகசியம் 10: காமத்தினை/உடலுறவினை சாட்சி பாவம் ஆக்கும் பயிற்சி


காம எண்ணம் மனதில் தோன்றும் போது மனதை அதிலிருந்து விலக்கி பார்வையாளனாக்குங்கள். இதனை சாட்சி பாவம் என்பார்கள். இந்த வார்த்தை ஆன்மீகத்தில் மிக முக்கியமான ஒரு சொல். இதனை சரியாக புரிந்துகொண்டு பயிற்சி செய்தால் மட்டுமே வேறு எந்த சாதனையும் செய்யத்தேவையில்லை. இந்த ஒரு சாவி எல்லா கதவுகளையும் திறக்ககூடியது. 

சாட்சி பாவமாக இருங்கள் என்றால் என்ன? எப்படி பயிற்சிப்பது? காம எண்ணங்கள் உங்களில் உருவாகும் போது பொதுவாக நீங்கள் அதனுடன் உங்களை அடையாளப்படுத்திக்கொள்வீர்கள், அந்த எண்ணத்தின் படி நடக்கத்தொடங்கும் போது பைத்தியக்காரத்தனமான மன எழுச்சிகளை உருவாக்கிக்கொண்டு இறுதியில் ஒருவித மன அழுத்தத்தினை அடைவீர்கள். ஏனெனில் மனதில் பலவித கற்பனைகளுடன் காமத்தினை அனுபவிக்க என்று ஆரம்பிக்க ஒன்றுமே இல்லாதிருக்க காண்பீரகள். 

பலவிதமான எதிர்பார்ப்புடன், ஆவலுடன் பெரிதாக ஏதாவது ஒன்று கிடைக்கும் என்ற எண்ணத்துடன் அணுகும் போது எதுவும் இல்லாமல் இருக்க காண்பீர்கள். அது உங்கள் மனதிற்கு பலத்த ஏமாற்றத்தினையும் விரக்தியினையும் தரும். இப்படியான அனுபவம் ஏற்பட்டவுடன் உங்கள் மனதினால் அந்த தோல்வியினை விரக்தியினை ஏற்றுக்கொள்ளமுடியாமல் உடனே காமத்துக்கெதிரான எண்ணங்களை தோற்றுவித்துக்கொண்டு புலம்பத்தொடங்குவீர்கள். பெரும்பாலானவர்கள் இந்தப்பழம் புளிக்கும் என்ற நிலையில் காமத்தினை கட்டுப்படுத்துவதற்கு ஆன்மீகத்தினை நாட ஆரம்பிக்கின்றனர். இன்றிலிருந்து பிரம்மச்சர்யம் காக்கப்போகிறேன் என்று சபதம் செய்துகொள்கின்றனர். அல்லது காமம் பொல்லாதது துறவியாகவேண்டும் என்று விலகி ஓடத்தொடங்குவர். அத்தகையர் காமத்துக்கு எதிராக அது பாவமான ஒன்றாக பிரச்சாரப்படுத்துகின்றனர். இந்த நிலை ஏற்பட்டவுடன் காமத்தினை வெறுக்கும் மனதினை பெறுகிறீர்கள்.

காமமும் இறைவனது படைப்புகளில் ஒன்று என்றால் எப்படி அது பாவமாகமுடியும். காமத்தினை நான் கொண்டு வரவில்லை, பிறப்பில் இயற்கையாக குறித்த வயது வந்தவுடன் உடலிலும் மனதிலும் தூண்டப்படுகிறது. அது இயற்கையான ஒன்று, அந்த இயற்கை கடவுளால் படைக்கப்பட்டது. ஆகவே காமமும் கடவுளால் படைக்கப்பட்ட புனிதமான பொருளே. 

இத்தகைய மனதினை பெறுவதற்கு "சாட்சி பாவம்" ஒன்றுதான் வழி. இதனை எப்படி பயிற்சிப்பது. காம எண்ணம், எழுச்சி உண்டாகியவுடன் அதனைகண்டு பதட்டப்படாமல் அதனை அமைதியாக உங்கள் மனதாலேயே அவதானிக்க பழகுங்கள். அந்த எண்ணத்துடன் உங்களை தொடர்புபடுத்தாதீர்கள். ஒருக்காலும் உங்கள் மனதில் "ஓ நான் காம எண்ணம் கொண்டவனாகிறேன்" என்று பதறாதீர்கள். அமைதியாகா " என்னில் காம ஆசை எழுந்துள்ளது, இதனை நான் நன் கு அவதானிக்க வேண்டும்" என்று உறுதியாக மனதில் எண்ணுங்கள். அந்த எண்ணத்திற்கு எதிராக வெட்கமான, பாவமான, பயந்த எண்ணங்களை எழுப்ப முற்படாதீர்கள். அமைதியாக ஒரு பார்வையாளனாக இருங்கள். இப்படிச் செய்யும் போது நீங்கள் அதனை வலிந்து அடக்குவதில்லை. அதனால் அது ஒரு அழுத்தமாக மனதில் புதைந்து மீண்டும் உங்களை துன்புறுத்தாது. அப்படி அழுத்தி புதைத்தால் அது என்னவென்பதனை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள முடியாது. இப்படி ஒவ்வொரு முறையும் அழுத்தி புதைப்பதால் தான் எதிரான எண்ணத்தினை மனதில் தோற்றுவிக்கிறது. ஒரு விடயத்தினை சரியாக அமைதியாக புரிந்துகொள்ளாவிட்டால் அது அழுத்தப்பட்டு அதற்கு எதிரான எண்ணத்தினை தோற்றுவிக்கும் என்பதனை ஆழ்மாக புரிந்துகொள்ளுங்கள். ஆகையால் ஒருபோதும் எந்தவொரு மன உணர்ச்சியினையும் வலிந்து அடக்க பழகாதீர்கள், அதனை அதன் பாட்டில் விட்டுவிடுங்கள். அதனைக்கண்டு பயப்படாதீர்கள். உடலுறவில் ஈடுபடும்போது ஒருவித விழிப்புணர்வுடன் என்ன நடக்கின்றது என்பதை புரிந்துகொண்டு ஈடுபடுங்கள். ஒரு விடயத்தினை நன் கு அறிந்திருந்தீர்கள் என்றால் அதனைப் பற்றிய பயம் ஏற்படாது, அதனை கண்டு பயப்படவேண்டிய நிலை ஏற்படாது. அது முழுமையாக தன்னை வெளிப்படுத்த அனுபவியுங்கள். ஆனால் அதில் இருந்து வேறானவன் என்ற பாவத்தினை உறுதியாக கொள்ளுங்கள். 

இப்படியான நிலையில் அந்த இயக்கம் ஒரு உச்சத்தினை அடையும், அதுவரை அதுனுடன் செல்லுங்கள். அது எப்படி நடைபெறுகிறது என்பதனை கூர்ந்து விபரமாக கவனியுங்கள். விழிப்புணர்வினை இழந்து விடாதீர்கள். அந்த உணர்வின் உச்சத்தினை அடைந்தவுடன் உங்கள் மனது அதற்கு எதிரான நிலைப்பாட்டை நினைவுபடுத்தும், அந்த எதிர்ப்பு நிலைப்பாடுவந்தவுடன் உங்கள் கவனத்தினை மீண்டும் செலுத்துங்கள், மீண்டும் என்ன நடைபெறுகிறது என்பதனை கவனியுங்கள். மீண்டும் மனம் அந்த எண்ணத்தின் உச்சத்தினை அடையும், அதன் பின்னர் அந்த அலை கீழே விழத்தொடங்கும். காமம் எண்ணம் என்பது அந்த அலையின் மேல் எழும் பகுதி, அது தவறு பிரம்மச்சார்யம் கைக்கொள்ளவேண்டும் என மனம் சொல்வது அதற்கு எதிரான மனபாங்கும் அந்த அலையின் தாழ்ந்த பகுதியுமாகும். 

இந்த நிலையில் விழிப்புணர்வுடன் இருங்கள், அதற்கு எதிராக செல்லாதீரகள். அதனைப்பற்றி விமர்சிக்காதீர்கள்; அதைப்பற்றி கருத்துக்கூறாதீரகள். அது நல்லது, கெட்டது என்று எதையும் செய்யாதீர்கள். ஒரு விழிப்புணர்வுடன் என்ன நடக்கிறது என்பதனை அவதானியுங்கள். இப்படிச் அவதானிப்பதில் உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்கவேண்டும். எதுவித விளக்கங்களும் கொடுக்ககூடாது. இப்படிச் செய்வதே சாட்சி பாவம் என்பது. 

இப்படி காம எண்ணத்தினையும் காமத்துக்கு எதிரான எண்ணத்தினையும் சாட்சி பாவமாக அவதானித்தால் உங்களுக்கு காமத்தினை பற்றிய ஒரு பெரும் புரிதல் கிடைக்கும். காம எண்ணமும் அதற்கெதிரான பிரம்மச்சார்ய எண்ணமும் ஒரே அலையின் எதிரெதிர் துருவங்கள் என்பதனை நீங்கள் அறிந்துகொள்ளலாம். அவை ஒரே அலையின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஆகும். இரண்டும் ஒன்றே, அவற்றில் ஒன்றை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. ஒரு பகுதியினை நீங்கள் தேர்ந்தெடுத்தால் கட்டாயம் மற்றைய பகுதியினையும் மறைமுகமாக தேர்ந்தெடுக்கின்றீர்கள். ஒன்றில் இருந்து மற்றொன்றை பிரிக்க முடியாது. அவை இரண்டும் ஒன்றே, அவற்றில் ஒன்றை விரும்பினாலும் மற்றையதை அனுபவிக்க வேண்டி வரும். எதுவித தேர்வு செய்யும் உரிமை இல்லை. 

ஆனால் இந்த சாட்சி பாவ நிலையில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. இப்படிச் செய்யும் போது அதிசயம் நிகழ ஆரம்பிக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்காமல் விடும்போது இரண்டும் அற்றுப்போய்விடும். காம எண்ணமும் இருக்காது, பிரம்மச்சார்ய எண்ணமும் இருக்காது. இரண்டும் இல்லாது போய்விடும். இந்த நிலையில் முதன் முதலாக நீங்கள் இந்த விசையில் இருந்து வெளிவந்து தனித்து இருப்பீர்கள். கவனிப்பதில் ஆரம்பமும் முடிவும் ஒன்றே, இது அலைபோன்ற நிலை அல்ல. ஒரு நேர்கோடு போன்றது. அவதானிப்பதே செய்கையாகவும் இலக்காகவும் இருக்கிறது. இந்த நிலையினை அடையும் போது மனதுக்கிடையிலான போராட்டம் இல்லாது போய்விடும். 

இது எப்படி என்பதினை விஞ்ஞானப்பூர்வமாக விளங்கிகொள்வோம். மனதில் தோன்றும் எண்ணம் ஒரு அலைபோன்றது. அலையின் இயக்கம் இயற்பியல்/பௌதீகவியம் கற்றவர்களுக்கு இலகுவாக விளங்கும். அதன் உருவகம் கீழேதரப்பட்டுள்ளது. 
சாட்சி பாவத்தில் காமம் அதற்கு எதிரான் பிரம்மச்சர்யம் இரண்டும் ஒரே நேரத்தில் கவனிக்கப்படுகிறது. எதிரான இரண்டும் ஒரே நேரத்தில் பரிவுறும் போது அந்த எண்ணம் சமனிலைக்கு வரும். இது சாட்சிபாவத்தின் மூலம் சாத்தியமாகிறது. இரண்டு எதிர்துருவங்களும் சம அளவான சக்தியுடன் எதிர் திசைகளில் அசையும்போது அதன் விளைவு பூச்சியமாகும். கீழே தரப்ப்பட்டுள்ள படம் சாட்சிபாவத்தில் மனதில் நடைபெறும் இயக்கத்தினை உருவகப்படுத்தி தரப்பட்டுள்ளது. 

இந்த யுத்தம் ஒரு வகையான யுத்தம் எமது சக்தியினை வீணாக்காமல் சமப்படுத்துவதால் எண்ணங்களை வெல்லும் யுத்த முறை. நாம் பொதுவாக எண்ணத்துடன் கலந்து எமது ஆற்றலை இழந்து விடுவோம், ஆனால் சாட்சிபாவத்தில் நாம் அதிலிருந்து வெளியே வந்து அதனை சமப்படுத்தி வெற்றி காண்கிறோம். முதல் நிலையில் சாதாரண போர்வீரன் போல் யுத்தக்களத்தில் நின்று போர்புரிந்து மரணத்தை தழுவும் போன்றது, இரண்டாவது நிலை போர்த்தளபதி போரில் இருந்து விலகி கட்டுப்பாட்டு அறையில் இருந்துகொண்டு யுத்தத்தினை முழுமையாக கட்டுப்படுத்தி வெற்றி காண்பது போன்றது. 

ஒருவிடயத்தினை ஞாபகத்தில் கொள்ளுங்கள் காமத்தினை மிக ஆழ்மாக அனுபவித்த ஒருவன் மட்டுமே உண்மையான பிரம்மச்சாரியாக முடியும். அதீத அளவு காம ஆசை மட்டுமே பிரம்மச்சர்யமாக மாற்ற முடியும். நீங்கள் காமத்தினை முழுமையாக அனுபவித்து அதன் முழுப்பரிணாமங்களை புரிந்துகொள்ளாதவராக இருந்தால் உங்களால் பிரம்மச்சாரி ஆகமுடியாது. பிரம்மச்சாரி ஆவதற்கு அதிகளவு ஆற்றல் தேவை, அதனை அடக்குபவர்கள் ஒருக்காலும் உயர்ந்த சக்தியினை அடைய முடியாது. 

இதனை செய்வதற்கு ஒருக்காலும் நீங்கள் சண்டை பிடிக்ககூடாது. ஒரு பக்கம் மட்டும் சார்ந்து இருக்ககூடாது. அதிலிருந்து வெளிவந்து சாட்சி பாவமாக இருத்தல் மட்டுமே அதனை வெல்வதற்கு வழி. இது உண்மையில் கடினமானது, ஏனெனில் மனது ஏதையாவது ஒன்றை தேர்தெடுக்கவே விரும்பும். மனம் தேர்ந்தெடுப்பது, தேர்ந்தெடுக்காமல் அது மனமாக இருக்க முடியாது. சாட்சி பாவ நிலையில் மனதிலிருந்து வெளியே வந்து விடுகிறோம். வெறும் உணர்வாக மட்டுமே இருக்கிறோம். 

பொதுவாக இதனை கூறியவுடன் மனது உடனே "ஓ நான் சாட்சி பாவம் நிலையை அடைந்தால் பிரம்மச்சார்யம் வந்து விடும்" என தேர்ந்தெடுத்து விடுவார்கள். இப்படியான நிலையில் இதனை சித்தி பெறமுடியாது. ஏனெனில் அவர்கள் காமத்தினை தொலைப்பதற்கு சாட்சி பாவத்தினை தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனெனில் பிரம்மச்சர்யம் தான் உயர்ந்தது என்று உள்ளூர முடிவு செய்துகொள்கிறார்கள். 

இதனை பயிற்சிப்பதில் எமது ஆழ்மனது மேற்கூறியவாறு அறியாமல் எம்மை திசைதிருப்பும், அப்படி ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டு இருக்கும் வரை காமம் மறையாது. சாட்சி பாவம் என்பது எதுவித தெர்வும் இல்லை. தேர்வற்ற விழிப்புணர்வு. மனதின் இந்த தேர்ந்தெடுக்கும் நிலைதான் மனித மனதின் பெரும் நோய்களில் ஒன்றாகும். தேர்ந்தெடுக்காமல் இருக்கும் போது எதிரெதிரான எண்ணங்கள் இரண்டும் அவையாக சண்டை பிடித்து இறந்து விடும், தேர்ந்து எடுக்கும் போது சாட்சி பாவம் அற்றுப்போய்விடும். 

இதனை பயிற்சிப்பதற்கு பல படி நிலைகளில் மனதினையும் பிராணனையும் ஒழுங்கு படுத்தவேண்டும் என்பது உண்மை, எனினும் வாசகர்கள் இப்படியான உயர்ந்த வித்தைகள் உள்ளது என்பதனை அறிந்துகொள்ளும் நோக்கில் இங்கு பதிவிடுகிறோம். 

இது ஒஷோவின்  "The New Alchemy To Turn You On' என்ற நூலில் இருந்த கட்டுரையின் தழுவல், மேலதிக விளக்கங்களுக்காக எம்மால் சில உதாரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

2 comments:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

குவாண்டம் கோட்பாட்டு விளக்கம் - 02

1920களின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட (ஏற்கனவே இயற்கையில் இருந்த ஒன்று அறியப்பட்ட) நிகழ்வு உலகின் சிந்தனைப்போக்கை பெருமளவில் புரட்டிப்போட...