குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Monday, April 15, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 05:பஞ்சதசி மந்திரம்


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் பதினைந்து பீஜங்களை கொண்ட பஞ்சதசி மந்திரமாகும். பீஜம் என்பது தனியே ஒரு சமஸ்க்ருத எழுத்தினை மட்டும் கொண்டதல்ல. உதாரணமாக ஸ என்பது ஒரு சமஸ்க்ருத எழுத்தினைக்கொண்ட பீஜம், ஹ்ரீம் என்பது பல எழுத்துக்களை கொண்ட பீஜம். சமஸ்க்ருதத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் உண்டு. உதரணமாக முதலாவது எழுத்தான் "அ" வினை எடுத்துக்கொண்டால் அது ஓம் என்ற பிரணவத்தினை தோற்றுவிப்பது, அது ஒருமைப்படுத்தலையும், அழிவற்ற தன்மையினையும் தரும். பீஜங்க்களின் அர்த்தம் அது பாவிக்கப்படும் இடத்தினை சார்ந்து பொருள் கொள்ளப்படும். பஞ்சதச என்றால் பதினைந்து என்று பொருள். இந்த மந்திரம் பதினைந்து எழுத்துக்களை கொண்டுள்ளது, அதனால் பஞ்சதசி எனப்படுகிறது. பஞ்சதசி மந்திரம் பீஜங்களை முன்று பகுதிகளாக கொண்டுள்ளது. ஒவ்வொரு வரியும் கூடம் எனப்படும், இந்த மூன்று  கூடங்களும் முறையே வாக்ப  கூடம், காமராஜ கூடம், சக்தி கூடம் எனப்படும். வாக்ப கூடம் லலிதாம்பிகையின் முகத்தினையும், காமராஜ கூடம் கழுத்தி தொடக்கம் இடை வரையிலான பகுதியையும், இடைக்கு கீழ்பகுதி சக்தி கூடத்தினையும் குறிக்கும்.  இந்த மூன்று கூடங்களும்  லலிதாம்பிகையின் முழுவடிவத்தினால் ஆக்கப்படிருக்கின்றது. இந்தக்காரணத்தினால்தான் பஞ்சதசி மிக சக்தி வாய்ந்த மந்திரமாக கருதப்படுகிறது.  இந்த முன்று கூடங்களையும் முக்கோணமாக ஒழுங்குபடுத்த வரும் கீழ் நோக்கிய கோணம் தேவியின் யோனியினை குறிக்கும். இதுவே  பிரபஞ்சத்தின் அனைத்திற்கும் மூலம். இதனால் இந்த மந்திரம் மிக இரகசியமானதாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. வாகப கூடம் முக்கோணத்தின் வலது புறம், காமராஜ கூடம் மேற்புறம், சக்தி கூடம் முக்கோணத்தின் இடது புறம் காணப்படும்.

வாக்ப கூடம் ஐந்து பீஜங்களை கொண்டுள்ளது; 
 க - ஏ - ஈ - ல - ஹ்ரீம்

காமராஜ கூடம் ஆறு பீஜங்களை கொண்டுள்ளது;
ஹ - ஸ - க - ஹ - ல -  ஹ்ரீம்
சக்தி கூடம் நான்கு பீஜங்களை கொண்டுள்ளது;
ஸ - க - ல - ஹ்ரீம்
 
இந்த பதினைந்து பீஜங்களும் பஞ்சதசி எனப்படும். இந்த மந்திரம் எந்த நூலிலும் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. கீழ்வரும் சமஸ்க்ருத ஸ்லோகம் மூலம் பரிபாஷையாக கூறப்பட்டுள்ளது. அந்த ஸ்லோகம் வருமாறு

காமோயோனி; கமலா வஜ்ரபானிர் குஹஹஸ மாதரிஷ்வ அப்ரம் இந்த்ரா/
புனர் குஹ ஸகலா மாயாய க புருசேச விஸ்வமாதாதி வித்யா//
 
இந்த ஸ்லோகத்தில் பஞ்சதசியின் பதினைந்து பீஜங்களும் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மந்திரத்தின் இரகசியத்தன்மை புலனாகிறது. இந்த ஸ்லோகத்தில் உள்ள பதினைந்து பீஜங்களும் வரும் முறை வருமாறு;
காமோ (க) யோனி; (ஏ) கமலா (ஈ) வஜ்ரபானிர் (ல) குஹ (ஹ்ரீம்)(ஹ)(ஸ) மாதரிஷ்வ (க) அப்ரம் (ஹ) இந்த்ரா (ல)/புனர் (மீண்டும் வருதலை குறிக்கும்)  குஹ (ஹ்ரீம்) ஸகல (ஸ , க, ல) மாயாய (ஹ்ரீம்) க () புருசேச விஸ்வமாதாதி வித்யா.

முதலாவது கூடம் ஐந்து பீஜாட்சரங்களை கொண்டுள்ளது -  
 க - ஏ - ஈ - ல - ஹ்ரீம். மூன்று கூடங்களும் ஹ்ரீம் பீஜத்துடன் முடிவுறுகின்றன. இந்த ஹ்ரீம் பீஜம் ஹ்ரில்லேகா எனப்படும். இந்த ஹ்ரில்லேகா பீஜம் பல முக்கியத்துவங்கள் உடையது, மாயா பீஜம் எனவும் அழைக்கப்படும். வாக்ப கூடம் அக்னி கண்டம் எனவும் அழைக்கப்படும். இது லலிதாம்பிகையின் ஞான சக்தியினை குறிக்கும். க என்பது பிரம்மா, படைத்தலை செய்பவர், ஏ என்பது சரஸ்வதி ஞானத்தின் அதிபதி, ஈ என்பது லக்ஷ்மி, ல இந்திரன், ஹ்ரீம் என்பது சிவ சக்தி ஐக்கியம். க என்ற பீஜம் காம பீஜ மந்திரமான க்லீம் இற்கு மூலமானது. அத்துடன் இந்த க பீஜ மந்திர சக்தி சாதகனுக்கு அமைதியினையும் செல்வத்தினையும் தரும் வல்லமை உள்ளது. அடுத்த பீஜமான "ஏ" என்பது சாதகனுடைய துரதிஷ்டங்களை விலக்கும். ல என்ற பீஜம் சாதகனுக்கு வெற்றியினை தரும். ஆக முதல் நான்கு பீஜங்களும் சாதகனுக்கு அமைதி, செல்வம், துரதிஷ்டங்களை விரட்டல், புனிதத்துவம், மற்றும் இந்திரனைப்போன்ற வல்லமையினை தரும். இதன் பொருள் சாதகன் தான் எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றியினை பெறுவான் என்பதாகும். (இந்திரன் அனைத்து தேவர்களதும் தலைவன், எல்லாக்காரியங்களிலும் வெற்றி பெறுபவன்).

ஹ்ரீம் என்ற பீஜம்   மொத்தம் பன்னிரெண்டு எழுத்துக்களால் ஆனது. ஹ+ர்+ஈ+ம் ஆகிய நான்கும் பிந்து வும் சேர்ந்து ஹ்ரீம் பீஜம் உருவாகின்றது. இந்த பிந்து என்பது கடைசி எழுத்தான ம் இற்கு மேல் காணப்படுவது. இந்த பிந்துவில் மேலும் எட்டு பீஜங்கள் அடங்கி இருக்கும். அவையாவன் அர்த்தசந்திர, ரோதினி, நாத, நாதாந்த, சக்தி, வ்யாபிக, சமனா, உன்மானி இந்த எட்டையும் சேர்த்து பிந்து நாத என்று அழைக்கப்படும். இந்த நாத ஆங்கில V எழுத்துக்கள் ஒன்றின் மேல் ஒன்று அமைந்தவாறு தோற்றம் [பெறும், (இந்த ஒவ்வொரு V எழுத்தும் இரண்டு கோடுகள் உள்ளவாறு மொத்தம் நான்கு கோடுகளில்  நாத தோற்றம் பெறும்). இந்த V இன் நான்கு முடிவுகளிலும் ஒவ்வொரு புள்ளிகளும் அதற்கு மேல் ஒவ்வொன்றாக மொத்தம் எட்டுப்புள்ளிகளும் சேர்ந்து பிந்துவினை உருவாக்கும். இந்த எட்டும் மற்றைய நான்கு பீஜங்களும்(ஹ+ர்+ஈ+ம்) சேர்ந்து ஹ்ரீம் பீஜம் உருவாகின்றது. இந்த பிந்து உச்சரிப்பில் முக்கியத்துவம் உடையது. ஒவ்வொரு பீஜத்திற்கும் அதனை உச்சரிப்பதற்கான கால அளவு உள்ளது. இந்த முதலாவது வாக்ப கூடத்தின் உச்சரிப்பிற்கு பதினோரு மாத்திரை அளவு இருக்கவேண்டும் என்பது விதி (மாத்திரை என்பது கண்ணிமைக்கும் அளவினைக் குறிக்கும், ஒரு செக்கனை விட குறைவான காலம்). பீஜங்களை உச்சரிப்பதற்கு விதிகள் உள்ளன. வாக்ப கூடத்தினை உச்சரிக்கும் போது மூலாதார சக்கரத்திலிருந்து அனாகத சக்கரம் வரை அந்த மந்திர சக்தியினை அக்னி சொருபமாக உருவகித்து உச்சரிக்க வேண்டும்.

அடுத்த  பதிவில் பஞ்சதசி மந்திரத்தின் மற்றைய இரு கூடங்களின் விளக்கம் பற்றி பார்ப்போம்.*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

குவாண்டம் கோட்பாட்டு விளக்கம் - 02

1920களின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட (ஏற்கனவே இயற்கையில் இருந்த ஒன்று அறியப்பட்ட) நிகழ்வு உலகின் சிந்தனைப்போக்கை பெருமளவில் புரட்டிப்போட...