ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 05: ஸ்ரீ வித்தை

  ஸ்ரீ வித்தை என்றால் அனுகூலமான/புனிதமான அறிவு என்று பொருள். லலிதாம்பிகையுடன் தொடர்புடைய அனைத்துமே புனிதமானதும் அனுகூலமானதே. அவளைப்பற்றிய ஞானம் குருவிடமிருந்து சீடனுக்கு தீட்சை மூலம் வழங்கப்படும். குரு முதலில் சீடனின் தகுதிக்கு தக்கவாறு பஞ்சதசி அல்லது பாலா மந்திர தீட்சை வழங்குவார். பொதுவாக லலிதையின் சிறு குழந்தை வடிவான "பாலாவே" முதல் தீட்சையின் போது வழங்கப்படும். மாணவனின் முன்னேற்றத்தின் அடிப்படையில் பஞ்சதசி பின்னர் ஷோடசி மந்திர தீட்சைகள் வழங்கப்படும்.  லலிதாம்பிகையின் அதியுயர் மந்திரம் "மஹா ஷோடசி" எனப்படும். இந்த மந்திரம் சாதகனுக்கு முக்தியினை வழங்கும்.   குருவிற்கும் சீடனுக்குமான தொடர்பு சீடன் முழுமையாக வளர்ந்து பக்குவம் பெறும் வரை தொடரும். இந்த மந்திரங்கள் தீட்சையின் பின்னர் குறித்த அளவு ஜெபம் செய்து யாக தர்ப்பணாதிகள் செய்து சித்தி பெற்ற பின்னர் சாதகன் தேவியுடன் தொடர்பு  கொள்ளும் ஆற்றலினை பெறுகிறான். இந்த மந்திர ஜெபம் தவிர்ந்து ஸ்ரீ சக்கரத்தினை பூஜை செய்யும் முறையும் குருவினால் கற்றுத்தரப்படும். அதன் பின்னர் சீடன் குறித்தளவு மூல மந்திர ஜெபத்தினை (பஞ்சதசி அல்லது ஷோடசி ) ஸ்ரீ சக்கர பூஜையுடன் தினசரி செய்து வர வேண்டும். அதன் பின்னர் தேவியை  வணங்க வேண்டும். ஸ்ரீ வித்தையில் குரு சிஷ்ய பரம்பரை மிக முக்கியமான ஒன்றாகும்.

அடுத்த பதிவில் வித்தைக்கு ஆதாரமான பஞ்சதசி மந்திரம் பற்றி பார்ப்போம்.

*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு