ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 08: பூர்வ பாகம்பூர்வ பாகம் அகஸ்தியர் ஹயக்ரீவர் சம்பாஷணையுடன் தொடங்குகிறது. அகத்தியர் முற்காலத்திய முனிவர்களுள் சிறந்தவரும், குட்டையான உயரம் உடையவருமாவார். சாகக்கலை மூலம் இன்றும் உயிருடன் இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. அகஸ்திய என்றால் மலைகளை சமப்படுத்தியவர் என்று பொருள். கதைகளின் படி விந்திய மலை தனது வளர்ச்சியில் ஆணவம் கொண்டபோது தனது ஆற்றலால் சமப்படுத்தியமையால் அகத்தியர் எனப்பட்டார்.   அவர் குடத்தில் உதித்திவர். பன்னிரண்டு ஆதி  ஸ்ரீ வித்யா உபாசகர்களில் ஒருவர். ஹயக்ரீவர் குதிரை முகமுடைய விஷ்ணுவின் அவதாரம். உயர்ந்த சாஸ்திரங்களுக்கும் ஞானத்திற்கு அதிபதி.

 ப்ருகுதாரண்ய உபநிடதத்தில் (II. V) குதிரை முகமுடைய ஞானி ஒருவர் பற்றிய குறிப்பு வருகிறது. அதர்வண வேதத்தில் தத்யாக் என்ற முனிவர் இந்திரனுக்கு மது வித்தையினை உபதேசித்தார். அதன் பின்னர் இந்திரன் முனிவரிடம் அந்த வித்தையினை யாருக்கும் உபதேசிக்க வேண்டாம் என வேண்டிக்கொண்டான். அப்படி கற்பித்தால் அவருடைய தலை வெட்டப்படும் எனவும்  எச்சரித்தான். அசுவினி தேவர்கள் இந்த மதுவித்தையினை கற்றுக்கொள்ள விரும்பினர். அவர்கள் தத்யாக முனிவரை அணுகி இந்த பிரச்னைக்கு தீர்வாக முதலில் முனிவர் குதிரை தலையினை இணைத்து மதுவித்தையினை தமக்கு உபதேசிக்கும் படியும் பின்னர் இந்திரன் கோபம் கொண்டு தலையினை வெட்டிய பின்னர் தமது ஆற்றலால் பழைய தலையினை மீளப்பொருத்துவதாகவதாகவும் கூறினர். (காணக ப்ருகதாரண்ய உபநிடதம் V iii - 16)  மது வித்தையினை அசுவினி  தேவர்களுக்கு உபதேசித்த பின்னர் இந்திரன் குதிரை தலையினை வெட்ட பழைய தலையினை அசுவினி தேவர்கள் தமது ஆற்றலினால் மீளப்பொருத்தினர். அவர்கள் திட்டப்படியே நடைபெற்று அசுவினி தேவர்கள் மது வித்தையினை கற்றுக்கொண்டனர். இந்த உபநிடதத்தின் (V - v - 16) முடிவில் "ப்ர யதிமுவாச" என்ற வார்த்தையுடன் முடிவுறுகிறது. இந்த வார்த்தையில் காம கலா பீஜமான "ஈம்" மறைமுகமாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. காமகலா சஹஸ்ர நாமத்தின் 322வது நாமத்தில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. "ஈம்" என்பது ஸ்ரீ வித்தையின் அதிமுக்கியமான இரகசியமாகும்.  எப்படியாயினும் மதுவித்தை உபதேசித்த ரிஷியும் மகாவிஷ்ணு அவதாரமான ஹயக்ரீவரும் ஒருவர் அல்லர்.  மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஹயக்ரீவரே அகஸ்தியரிற்கு லலிதா சஹஸ்ர நாமத்தினை உபதேசித்தவர்.

ஹயக்ரீவரின் தோற்றம் பற்றி தேவி பாகவதத்தில் (I - 5) கூறப்பட்டுள்ளது. இதுபற்றி முற்பகுதியில் ஏற்கனவே விபரிக்கப்பட்டுள்ளது. ஹயக்ரீவ ரூபத்தில் மஹாவிஷ்ணு தேவியிடம் இருந்து ஸ்ரீ வித்தை தீட்சை பெற்றார். மஹாவிஷ்ணுவின் இந்த ரூபம் உயர்ந்த ஞானத்தினை பெறுவதற்கு உபாசிக்கப்படுவது. ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு ஸ்ரீ வித்யா தீட்சை அளித்து உபாசனையினை கற்பித்தார். அடுத்த பந்தி ஹயக்ரீவர் லலிதா சஹஸ்ர நாமத்தினை அகத்தியருக்கு உபதேசித்த சந்தர்ப்பத்தினை விளக்குகிறது.*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு