ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 07: சோடஷி மந்திரம்
சோடஷி பற்றி 587 நாமாவில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. பொதுவாகவே எல்லா மந்திரங்களும் இரகசியமாகவே கருதப்படுகிறது. அதற்கு சோடஷியும் விலக்கல்ல. சோடஷியினை ஜெபித்தல் முக்தியினை மட்டும் தரும், இதனால் வேறு உலக இன்பங்களை பெறமுடியாது. இது ஒருவரை நேரடியாக பிரம்மத்தினை அடைவிக்கும். பொதுவாக சோடஷி தீட்சை ஒருவருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது. சாதகனின் தகுதி அறிந்து முதலில் பாலா, பின்னர் பஞ்சதசி தீட்சை அளித்து சாதகன் இந்தப்பிறப்பில் தனது கர்மத்தினை தீர்த்து முக்தியினை அடையும் தகுதி இருந்தால் மாத்திரமே குரு ஷோடசியினை வழங்குவார். தீட்சை பெற்ற பின்னர் அதனை குறைந்தது 900,000 தடவை ஜெபம் செய்து முறைப்படி புரச்சரணம் செய்யவேண்டும். அதன் பின்னரே சாதகன் முக்திக்கான வழியில் முன்னேறத்தொடங்க்குவார். சோடஷி தீட்சை கிடைப்பது என்பது ஒருவருடைய கர்ம பலனைப் பொறுத்தே அமையும்.
 
சோடஷி வித்தை பிரம்ம வித்தை எனப்படும், பிரம்மத்தினை அறிவதற்கான ஞானம் என்று பொருள். பிரம்மத்தின் மந்திர வடிவமே சோடஷி மந்திரம். அதனாலேயே மிக்க இரகசியமாக பேணப்பட்டு வந்தது. இந்த இரகசியத்தின் முக்கியமான விடயம் என்னவெனில் இரண்டாவதாக காணப்படும் "ஓம்" இற்கு அடுத்து ஆத்ம பீஜ மந்திரத்தினை இணைப்பதாகும். இதன் மூன்றாவது இரகசியம் பரா, அபரா உள்ள ஒன்பதாவது ஆவரணத்தினை உபாசிக்கும் முறையுடன் தொடர்புடையது. (இவை குறித்த நாமாக்களில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவன் நான்காவது நிலையான தூரியத்தினை அடைய முடியுமாயின் முக்தியான துரியாதீதத்தினை அடையும் தகுதியினை பெறுகிறான். சோடஷி தினமும் ஜெபிப்பவர் எதுவித கஷ்டமும் இன்றி தூரிய நிலையினை அடைவார்.
 
{தூரியமும் துரியாதீதமும்: தூரியம் என்பது உணர்வின் நான்காவது நிலை, மற்றைய மூன்று நிலைகள் விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்பனவாகும். தூரியம் என்பது இந்த மூன்று நிலைகளின் மேலும் காணப்படும் அதனைத்தாண்டிய நிலையாகும். தூரிய நிலையில் உணர்வின் தன்மை ஆனந்ததிற்கு மிகவும் அருகில் உள்ள நிலையாகும். இது வெறுமனே வாய்ப்பேச்சாக அன்றி அனுபவமாக வரும். தூரியாதீதம் என்பது ஒருவருடைய உணர்வு தூரியத்தினை தாண்டிய நிலையாகும். இந்த ஆனந்த உணர்வு நிலையில் பிரம்மத்தினை தானே அதுவாக இருக்கின்றேன் (அஹம் பிரம்மாஸ்மி) என்று உணர்வான். அது கடந்து கைவல்யம் வாய்க்கும் போது இறுதியாக பிரம்மத்துடன் கலந்து ஆன்ம ஒன்றாக மாறும்.}
 
பஞ்சதசி ஒருவருடைய உணர்வு நிலையினை நான்காவதாகிய தூரிய நிலைக்கு இட்டுச்செல்லும். சோடஷி உணர்வினை துரியாதீதத்திற்கு உயர்த்தி பிரம்மத்துடன் கலக்கச் செய்யும். இதற்கு மேற்பட்ட நிலை என்று ஒன்றும் இல்லை. இந்த நிலை ஒரு கணப்பொழுதில் நிகழும் அது நிகழ்ந்த பின்னர் அந்த மனிதர் அதற்கு முன்னதான மனிதனாக இருக்க மாட்டான்.
*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு