ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 01: அறிமுகம்

ஓம் ஸ்ரீ குருப்யோம் நமஹ 
ஸ்ரீ  மாத்ரே நமஹ சஹஸ்ர என்றால் ஆயிரம் என்று  பொருள். லலிதா சஹஸ்ர நாமம் என்றால் லலிதாம்பிகையின் ஆயிரம் திரு நாமங்கள் என்று பொருள். இந்த சஹஸ்ர நாமம் பிரம்மாண்ட புராணத்தில் காணப்படுகிறது. வேத வ்யாசகர் எனப்படும்  மகரிஷி (மகா என்றால் பெரிய, ரிஷி என்றால் முனிவர்) வியாசகரால் எழுதப்பட்ட பதினெண் புராணங்களில் ஒன்று. வியாச என்பதற்கு தொகுப்பாளர் என்ற ஒரு பொருளும் உள்ளது. அவர் பராசர முனிவரதும் சத்யவதி இனுடைய புத்திரர் ஆவார். பீஷ்மரதும் விசித்திர வீர்யனதும் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். வியாசகர் மகா விஷ்ணுவின் அவதாரமாகவும் கருதப்படுகிறார் (ஸ்ரீமத் பாகவதம் I, iii, 20), ரிஷிகளில் முக்கியமானவர்களாக ஏழு பேரினை குறிப்பிடுவர். இவர்களை சப்த ரிஷிகள் என்பர், அவர்களது பெயர்கள் கௌதமர் பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி, காஸ்யபர், வசிஷ்டர், அத்ரி என்போர். இவர்களின் பெயர்களில் அபிப்பிராய பேதம் உண்டு. இந்த சஹஸ்ர நாமம் 183 ஸ்லோகங்களாக பிரம்மாண்ட புராணத்தின் இரண்டாவது பகுதியில் காணப்படுகிறது. இந்த 183 ஸ்லோகங்களும் ஆயிரம் நாமங்களாக மாற்றம் பெறுகின்றது. புராணங்கள் என்பது கேட்பதற்கு இனிமையாகவும் திகைப்பூட்டுவதுமான கதைகளை கொண்ட அதே நேரம் வேதங்களில் கூறப்பட்ட உண்மைகளை உரைப்பனவாகவும் இருக்கும் நூற்களாகும். இந்து தத்துவங்கள் பிரதானமாக நான்கு வேதங்களிலிருந்து உருவானவையாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வேதங்கள் விளங்கி கொள்ள கடினமாக இருக்கும். வேதங்களது சுருக்கம் உபநிடதங்களாக தரப்பட்டுள்ளன. உப நிடதங்கள் பிரம்மன் அல்லது கடவுளை விளக்க முற்படுகின்றன.இத்தகைய விளக்கங்களும் கணிப்புகளும் பிரம்மத்தினை அறிவதற்கான வழியினை தரவில்லை. உப நிடதம் கூறும் பிரம்மம் சாதாரண மனித மூளையினை தாண்டிய  உருவமற்ற தெய்வ சக்தி. உப நிடதங்கள்  தன்னை அறிவதற்கான தத்துவங்களை கூறுகின்றன. தன்னை அறிதல் என்பது ஆன்மிகம் தொடர்பான கேள்விகளின் தர்க்கரீதியான ஒரு முடிவு.இது  பிரம்மத்தினை அறியும் இறுதிப்படியாகும். தற்போதைய நவீன காலத்தில் தன்னையறிதல் கடவுளை அறிதல் அல்லது கிருஷ்ண உணர்வு எனப்படுகிறது.


இந்த சஹஸ்ர நாமம் வேத வியாசகரால்  பிரம்மாண்ட புராணத்தில் எழுதப்பட்டாலும் உண்மையில் எட்டு வாக் தேவிகளால் உருவாக்கப்பட்டவை. (வாக் என்றால் பேச்சு, குரல் அல்லது ஒலி  எனப்படும்). மேலான தேவதையும் , அன்புடன் "தலைமை தாய்" என அழைக்கப்படும்  லலிதாம்பிகையின் பிரசன்னத்தில் இந்த சஹஸ்ர நாமம் தொகுக்கப்பட்டு பாராயணம் செய்யப்பட்டது. இதை தொகுத்த எட்டு வாக் தேவிகளதும் பெயர்கள்: வசினி, காமேஸ்வரி (சிவனின் மனைவியான காமேஸ்வரி அல்ல), மோதினி, விமலா, அருணா, ஜயினி, ஸர்வேஸ்வரி, கௌலினி ஆகும். இந்த வாக் தேவிகள் லலிதாம்பினை வசிக்கும் ஸ்ரீ சக்கரத்தில் ஏழாவது ஆவரணத்தில்  வசிக்கும் தேவதைகள் ஆவர்கள். (பார்க்க நாமம் 996). ஸ்ரீ சக்கரம் ஒன்பது ஆவரணங்கள் உடையது, நவாவரண பூஜையினால் பூஜிக்கப்படுவது. லலிதா தேவி இந்த எட்டு தேவதைகளையும் தனது பக்தர்களுக்கு வாக்கு சக்தியினை அளிப்பதற்கான சக்தியினை கொடுத்துள்ளாள். லலிதாம்பிகை ஒருமுறை இந்த எட்டு தேவதைகளையும் தனிப்பட அழைத்து தன்னைப்பற்றிய ஸ்லோகங்களை இயற்றுமாறும் அதனை படித்தால் தான் மகிழும் நிலை ஏற்படக்கூடியவாறு அமையுமாறும் இருக்கவேண்டும் என ஆணையிட்டாள். அவளுடைய ஆணைப்படி அவளது அரச அவையில் வாக்தேவிகளால் எல்லா தேவ தேவிகளும் இருக்குமாறு பாராயணம் செய்யப்பட்ட தோத்திரமே இந்த சஹஸ்ர நாமம்.

அடுத்த பகுதியில் இந்த நூலின் அமைப்பு பற்றி விளங்கப்படுத்தப்படும். 


*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Comments

  1. நல்ல முன்னுரை. நன்றிகள்.

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு