அனைவரும் பயன்பெறக்கூடிய திரிபலா காயகற்ப முறைகள்

 இந்தப்பதிவில் ஆயுர்வேத நூற்களில் காணப்படும் நான்கு வகையான காயகற்ப முறைகளை கூறுகிறோம்.  இவை ஒருவர் நூறாண்டு காலம் வாழ்வதற்கான கற்பமுறைகள். மேலும் ஒரு விடயத்தினை நினைவில் கொள்ள வேண்டுகிறோம். காயகற்பம் உண்டு விட்டு வாழ்க்கையினை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொண்டிருந்தால் நூறாண்டு காலம் வாழலாம் என்று நினைக்கும் நபர்  நீங்கள் இல்லை என எண்ணுகிறோம். சித்தர்களது நோய் அணுகா விதியும், பிரணாயாமம், தியான மனச்சாதனையும் உடைய சாதகர் ஒருவரே சித்தர் நூற்களில் கூறப்படும் காயகல்பத்தின் நூறாண்டு வாழ்க்கை எனும் முழுமையான பலனை அனுபவிக்க முடியும். மற்றவர்கள் வாழும் வரை ஆரோக்கியமாக வாழலாம். ஏனெனில் காயகற்பம் என்பது சாதகன் தனது சாதனையினை பிறவிப் பெரும் பயனை அடைவதற்கு பயன்படுத்த பட்ட ஒன்று. இங்கு  கூறப்படும் நான்கு முறைகளில் முதல் இரண்டு முறைகள்  அனைவராலும் பயன்படுத்தக்கூடியது.  

திரிபலா கற்ப முறை - 01
முதல் தடவை உணவருந்தி நன்கு சமிபாடடைந்தவுடன், அடுத்த சாப்பட்டிற்கு ஒருமணி நேரம் முன்னதாக ஒரு கடுக்காயின் அளவு கடுக்காய் பொடி  வெந்நீருடன் அருந்தவும். பின்னர் சாப்பாட்டிற்கு பதினைந்து நிமிடத்திற்கு முன்னர் இரண்டு பழங்கள்  அளவுள்ள தான்றிக்காய் பொடி  அருந்தவும்,  உணவின் பின்னர் நான்கு பழ அளவுள்ள நெல்லிக்காய் பொடி நெய்யுடன் அருந்தவும். இந்த முறை சரக சம்ஹிதையில் உள்ளதன் படி. இங்கு ஒரு கடுக்காயின் அளவு என்ன? இரண்டு தான்றிக்கயின் அளவு என்ன? நான்கு நெல்லிக்காயின் அளவு என்ன என்று சந்தேகம் வரலாம். அதற்கு இலகுவாக உங்கள் பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல் முன்றையும் சேர்த்தால் அள்ளக்கூடிய அளவில் 1: 2: 4 என அருந்தலாம். இந்த மூன்று  பொடிகளும் எல்லா சித்த ஆயுள்வேத மருத்துவ கடைகளிலும் கிடைக்கும். நாள் ஒன்றுக்கு இருவேளை. 

இப்படி தினமும் அருந்துபவர்களுக்கு நூறாண்டு ஆயுள் நிச்சயம் என சரஹ சம்ஹிதை குறிப்பிடுகிறது.  

திரிபலா கற்ப முறை - 02
திரிபலா பொடியினை எடுத்து நன்கு நீர்விட்டு  பிசைந்து படை போலாக்கி கொண்டு இரும்பு சண்டியின் உள்புறத்தில் தடவி 24  மணி நேரம் சாதாரண அறை வெப்பநிலையில் காய வைத்து (வெயிலில் இல்லை) சுரண்டி எடுத்துக்கொள்ளவும். இது இலங்கை, இந்தியபோன்ற நாடுகளில்தான் சாத்தியம். பின்னர் நன்கு போடி செய்து தினமும் 5 கிராம் அளவு தேனில் கலந்து நீருடன் அருந்தி வர நோயற்ற வாழ்வும் நூறாண்டு ஆயுளும் உண்டாகும்.

திரிபலா கற்ப முறை - 03
திரிபலா சூரணம், அதிமதுரம், மூங்கில், திப்பிலி, சக்கரை சம அளவு கூட்டி தேனும் நெய்யும் இட்டு தினமும் உணவிற்கு பின்னர் 10 கிராம் அளவு இருவேளை உண்டு வரநோயற்று ஆயுள் கூடும். 

திரிபலா கற்ப முறை - 04
இது குறித்த அளவு தங்கம், வெள்ளி, அய பஸ்பங்கள் ஏதாவது ஒன்றுடன் திரிபலா, வசம்பு, திப்பிலி, வாய்விடங்கம், கல்லுப்பு போன்ற சரக்குகள் சேர்த்து செய்யும் கற்பம். 

எளிய முறை திரிபலா கற்ப முறை - 05:
தினசரி 5 கிராம் அளவு திரிபலா சூரணம் இரு வேளை உணவின் பின்னர் உண்பது.

இவற்றுள் எளிய முறைகளான் 01, 02, 05 இல் உங்களுக்கு வசதியான ஒன்றினை பின்பற்றலாம். 

Comments

  1. கற்ப முறை 3 ல் " மூங்கில்" ‍என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
    நீங்கள் மூங்கில் அரிசியை குறிப்பிடுகின்றீர்களா? அல்லது வேறு ஏதேனும் குறிப்பிடுகின்றீர்களா?

    ReplyDelete
  2. அது மூங்கிலின் மேல் சீவிய பட்டையின் பொடியினை குறிப்பிடுகிறது,

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு