சித்தர்/ரிஷி மரபில் மாணவனாக இருக்க வேண்டிய தகுதிகள்

இன்று யோகம் செய்ய வேண்டும் என்றால், இறை சாதனை செய்யவேண்டும் என்றால் உலகத்திற்கு புறம்பாக சென்று ஏதாவது ஒரு மிஷனில் சேர்ந்து சாமியாராகவேண்டும் என்ற எண்ணம் எமது சமூகத்தில் பரவலாக காணப்படுகிறது. இதன் படி பெற்றோருக்கு தன் பிள்ளை சாமியாராக போய்விடுவானோ என்று பயம். இப்படியாக இறை சாதனையினையும், வாழ்க்கையினையும் குழப்பிக்கொண்டு பலன் எதுவும் கிடைக்காமல் பிரச்சனைதான் அதிகரித்த நிலையாக வாழ்க்கை மாறி விடுகிறது.

ஆனால் பழங்காலத்தில் வேதகால ரிஷிகளும் சரி, சித்தர்களும் சரி இல்லறத்தினை நல்லறமாக்கியே இறை சாதனை புரிந்து வந்துள்ளனர். துறவி என்பதே பௌத்த மதத்திற்கு பின்னர் புகுந்த ஒன்றே ஒழிய ரிஷி மரபில் தற்போதைய அர்த்தத்தில் துறவு என்ற ஒன்று இருந்ததில்லை. இதன் பாதகங்களை ஆராய்ந்தால் அது பல பதிவுகள் எழுத வேண்டுமாதலால் அது பற்றி இங்கு ஆராயாமல் ரிஷி மரபில், சித்தர் மரபில் சாதனை புரிபவன் கொண்டிருக்க வேண்டிய பண்புகள் பற்றி எமது குருநாதர் கைப்பட எழுதி வைத்த குறிப்பினை இங்கு தருகிறோம். இது இந்த வழியில் முன்னேற விரும்புபவர்களுக்கு ஒரு ஒளி விளக்காக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

கண்ணைய யோகியார் தமது மாணவர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளுக்கு அனுப்பிய பாடக்குறிப்புகளில் இருந்து;

சித்தர் மரபில் மாணவனாக இருக்க வேண்டியவரின் பண்புகளை தன் கைப்பட எழுதி வைத்த குறிப்பு;

என் மாணவன்
 •  நான் இன்ன சாதி என்று நினையாதவன்
 • மனைவி மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன்
 • ஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்
 • கோப தாபம் உடையவன் போல் கருதப்பட்டும் அவைகளை அடக்கியவன்
 • பண்டிகை, விரதம், நோன்பு என்ற பெயரில் பணத்தைச் செலவழிக்காதவன். 
 • எதைச் செய்தாலும் அதை ஏன் செய்கிறோமென்று யோசித்து செய்பவன்
 • தனக்கு இன்பம் தரும் கரியங்களில் மட்டும் ஈடுபடாமல் தனக்கு நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவன்
 • மாமன், மைத்துனன், தங்கை, அண்ணன் என்ற உறவுகளுக்கு உதவி செய்வதற்காகத் தன் இறை சாதனையினை விட்டுக்கொடுக்காதவன்
 • வாழ்க்கையில் மற்றைய எல்லா காரியங்களை விடச் சாதனை மிக முக்கியமானது எனக் கருதி எக்காரணத்தாலும் சாதனையினைத் தவற விடாதவன்
 • கண்ட புத்தகங்களைப் படித்து மனதைக் குழப்பிக்கொள்ளாதவன்
 • எத்தொழிலைச் செய்தாலும் தன் செயல்களின் மறைவில் ஓர் சக்தி இருக்கிறது என்பதனை உணர முயற்சி செய்த வண்ணமிருப்பவன்
 • சமயச் சழக்கெனும் சேற்றிலிருந்து துணிகரமாக மீள முயற்சிப்பவன்
 • ரிஷி மரபின் உண்மைகளைத் தெரிந்து அதன் வழி நடப்பவன்
அவனே என் மாணவன். அவனுக்குத்தான் என்னில் பொதிந்து கிடக்கும் ஆன்மீக ரத்தினங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

-    யோகி கண்ணையா -

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு