ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 03: காட்சி

இந்தப்பகுதி எம்மை இந்த சஹஸ்ர நாமம் முதன்முதலாக உருவான காட்சிக்கு இட்டுச் செல்லும். எல்லா தேவ தேவியர்களும் லலிதாம்பிகையின் அரச அவையில் வீற்றிருக்கின்றனர்.  சப்த ரிஷிகள், மற்றைய ரிஷிகள், பதினெண் சித்த புருஷர்கள் அவையில் சட்டத்திற்கமைய  அவரவர் ஆசனத்தில் வீற்றிருக்கின்றனர்.  தங்கத்தினாலும் விலை மதிப்பற்ற இரத்தின கற்களாலும் ஆக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சிம்மாசனம் காணப்படுகிறது. திடீரென தெய்வீக மணம் கமழத்தொடங்குகிறது. முழு அரச அவையிலும்  சிவப்பு நிற ஒளி பரவத்தொடங்குகிறது. லலிதாம்பிகை தந்து சேவகிகளுடன் நுழைகிறாள். அமர்ந்திருக்கும் அனைவரும் எழுந்து மரியாதை செலுத்துகின்றனர். அவளது தோற்றம் தியான ஸ்லோகத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவளின் முன்னர் எட்டு வாக்தேவிகளும் பிரசன்னமாகி இருக்கின்றனர், அவர்களிடன் தேவி: நீங்கள் எண்மரும் எனது ஆசியுடன் வாக் சித்தி பெற்றுள்ளீர்கள், நான் உங்களுக்கு எனது பக்தர்களுக்கு வாக்கு சித்தியினை அளிக்கும் பொறுப்பினை கொடுத்திருக்கிறேன். நீங்கள் எனது ஸ்ரீ சக்கரத்தின் இரகசியங்களை அறிந்தவர்கள். நீங்கள் பலகாலமாக பக்தியுடன் எனது நாமாக்களை உச்சரித்து வருகிறீர்கள், ஆகவே அவற்றை தொகுத்து 1000 நாமங்களாக்க கட்டளை இட்டிருந்தேன். அவற்றை எனது பக்தர்கள் கூறும்போது நான் மிக்க திருப்தி அடைவேன். இந்த ஸ்லோகங்கள் எனது நாமங்களின் தொகுப்பாக அமைய வேண்டும்" எனக்  கட்டளை இட்டாள். தேவி இந்த நாமாவளியினை பற்றி மூன்று விடயங்களை விதந்துரைத்திருந்தாள். முதலாவது 1000 நாமங்களை கொண்டிருக்க வேண்டும், இரண்டாவது, ஒவ்வொரு ஸ்லோகமும் தனது பெயரினை கொண்டிருக்க வேண்டும், மூன்றாவது, அந்த நாமங்களை பக்தன் ஜெபிக்கும் போது தேவி சந்தோஷப்பட வேண்டும். இந்த மூன்று கட்டளைகளையும் மனதில் கொண்டு வாக்தேவிகள் அத்தகைய ஸ்லோகங்களை இயற்றி படிப்பதற்கு தயாராக இருந்தனர். லலிதாம்பிகை ஆகட்டும் என தலையசைத்தவுடன் வாக்தேவிகள் இந்த பிரபஞ்சத்திற்கு தெரியப்படுத்த படிக்கத்தொடங்கினார். லலிதை மிக்கமகிழ்ச்சியுடன் தலையினை நன்கு ஆட்டிய வண்ணம், தொடர்ச்சியான  புன்சிரிப்புடன் ஆமோதித்த வண்ணம் கேட்டுக்கொண்டிருந்தாள். இடையிடையே வாக்தேவிகளுக்கு "நன்றாக இருக்கிறது" "அபாரம்" எனப்பாராட்டினாள். 

அடுத்த பகுதியில் லலிதையின் முல யந்திரமான ஸ்ரீ சக்கரம் பற்றி பார்ப்போம்.
*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு