சூழலியல் விஞ்ஞானத்தில் மிருக நடத்தையியல் பயின்றவன் என்ற அளவிலும், இலங்கையின் வடபகுதி யானைகள் பற்றிய ஆய்வில் பங்கு பற்றியவன் என்ற வகையில் யானைகள் பற்றி தனித்த ஆர்வம் உடையவன்.
எனது விலங்கு நடத்தையியல் ஆசிரியர்களான காலஞ்
சென்ற யானை பற்றிய ஆய்வாளர் பேராசிரியர் சந்தியாப்பிள்ளை மற்றும் கலாநிதி விஜயமோகன் அவர்களுடன் யானை பற்றிய களஆய்வுகளையும் எமது பண்டைய கஜசாஸ்திரம் பற்றிய ஆய்வுகள் மேற் கொண்டவன் என்ற அளவில் யானைகள் பற்றி சில தகவகளைப் பகிரலாம் என்று நினைக்கிறேன்.
யானை மிகவும் புத்திசாலியான முலையூட்டி; அதன் மூளை விருத்தி மனிதன், குரங்கு, டொல்பின் என்ற வரிசையில் புத்திக் கூர்மையில் மனிதனுக்கு நெருக்கமானது! கற்றல் ஆற்றல் உள்ளது; ஆகவே தனது வழித் தடங்கள், உணவு உள்ள இடங்களை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளும். இது தான் மனிதனுக்குப் பெரும் சவாலான விஷயம். மனிதனைப் போலவே தானும் கற்று சிந்தித்து செயலாற்றக் கூடியது.
பூமியில் இருக்கும் விலங்குகளில் மிகப் பெரியது; சாதாரணமாக கூட்டமாக உள்ள யானைகளில் Home rage எனப்படும் அதன் வதிவிட எல்லை 35 - 45 சதுர கிலோமீற்றர். ஒரு நாளில் இவ்வளவு தூரம் நடக்கும் ஆற்றல் உள்ளது. தனியன்களது வதிவிட எல்லை 50 சதுர கிலோமீற்றர்.
ஒரு யானை காட்டில் வசிப்பதற்கு குறைந்தது 01 சதுர கிலோமீற்றர் எல்லை தேவைப்படும். ஒரு இடத்தில் 2000 யானைகள் இருந்தால் 2000 சதுர கிலோமீற்றர் பரப்பு நிலம் யானைகளுக்குத் தேவைப்படும்.
இந்த அடிப்படையில் இன்று நடக்கும் பிரச்சனை அவற்றின் வாழ்விடங்களான காடுகள் குறைய அவை உணவிற்காக நாட்டிற்குள் படையெடுக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை கூடக் கூட பிரச்சனை அதிகமாகும்.
இலங்கையில் கடந்த நான்கு வருடங்களில் குறிப்பாக வன்னியில் குட்டி யானை கொல்லுதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்ளக ஆய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
படத்தில் இருப்பவர் எனது முன்னைய பணிக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் உடவளவை நீர்த்தேக்கத்தில் சந்திக்கும் குட்டி யானை நண்பர்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.