மேதா என்பது அறிவு அல்ல, அறிவைப் பெறுவதற்கு எம்மிடம் இருக்கவேண்டிய திறன். நாம் பெறவேண்டிய அறிவுகள் இரு வகையானது.
1) பராவித்யா - எம்மை அறிவதன் மூலம் இறைவனையும் பற்றிய முழுமையான அறிவு
2) அபராவித்யா - எல்லா விதமான உலக அறிவுகளும்.
இந்த இரண்டிலும் சிறந்து விளங்க எமக்கு மேதா சக்தி இருக்க வேண்டும். இன்று நாம் பல்கலைக்கழகங்களில் கற்கும் கல்வி எல்லாம் அபராவித்யாக்களே!
இப்படி வித்தைகளை அறிந்துக் கொள்ள எம்மில் (எமது மூளையில்) சிலவித பிராண ஓட்டங்கள் - நாடிகள் உருவாக வேண்டும். இதை இன்றைய மூளை அறிவியல் Neural network என்று சொல்லும். இவற்றை நாம் மனதால் எம்மில் உருவாக்க வேண்டும்.
இப்படி மூளையில் நாடிகளை - பிராண ஓட்டங்களை உருவாக்கும் செயற்பாட்டினை மனனம் என்று பண்டைய கல்வி முறையில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
குறித்த ஒலியமைப்புச் சொற்கள் இது மூளையில் குறித்த அறிவினைப் பெற தகுந்த நாடிகளை - Neural network உருவாக்கக் கூடிய பாடல்களை ஒரு ஒழுங்கில் எழுதி வைத்தார்கள். இப்படியான பாடல் ஒழுங்குகளை சந்தஸ் அல்லது சந்தம் என்றும் இதற்கான விதிகளை யாப்பு என்றும் கூறி வைத்தார்கள்.
இப்படி குறித்த சந்தஸில் உள்ள மந்திரங்களையும், பாடல்களையும் மீண்டும் மீண்டும் நாம் மனனம் செய்யும் போது மூளை குறித்த அறிவைப் பெறும் தகுதியை அடைகிறது.
இப்படி மேதா சக்தியை அடைவதற்கு வேதங்களில் காணப்படும் மந்திரத் தொகுப்பு மேதா சூக்தம் எனப்படுகிறது. சூக்தம் என்றால் நன்றாகச் சொல்லப்பட்டது என்று அர்த்தம். மேதா சூக்தம் என்றால் மேதாவைப் பற்றிய நன்றாகச் சொல்லப்பட்ட தொகுப்பு என்று அர்த்தம். இவற்றில் எமக்குக் கிடைப்பது
1) மஹாநாராயண உபநிஷத மேதா சூக்தம்
2) ரிக்வேத மேதா சூக்தம்
இந்த இரண்டு சூக்தங்கள் மேதா சக்தியை எப்படிப் பெறுவது என்பது பற்றிய விளக்கங்களைத் தருகிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.