சமப்படுத்தும் இயல் சமையல்; அதாவது சமப்படுத்தும் கலை சமையல்; நாம் உணவு சமைக்கிறோம் என்று கூறுகிறோம். உணவில் போடும் பதார்த்தங்களை அதன் குணங்களுக்கு ஏற்ற வகையில் சமப்படுத்தி உண்ண வேண்டும் என்ற அறிவு தான் சமையல்.
இன்று சமையற் கலை என்பது வாய்க்கு ருசியாக உண்பது என்பது; கண்கள் காட்டும் விளம்பரம் மனதைத் தூண்ட மனம் அதுவே நல்ல உணவு என்று நம்பும் இயந்திரங்களால் தயாரிக்கப்படும் உணவை நல்ல உணவு என்று எண்ணுகிறோம்.
ஆனால் எமது உடல் ஆக்கப்பட்டுள்ள பொருட்களும், அந்த உடலுக்கு உணவாகக் கொடுக்க வேண்டிய பொருட்களும் நாம் வாழும் இடம், காலநிலை, எமது உடலின் ஆரோக்கியம் அறிந்து அதற்கு சமப்பட உண்ண வேண்டும் என்பதே சமையற் கலை.
இதற்கு முற்காலத்தில் தினசரி உணவை சமைத்து புசிக்கும் முறையை நான்கு விதமாகக் கூறியுள்ளார்கள்.
சித்த பாகம் - யோகிகளுக்கும் சாதகர்களுக்குமுரிய தமது யோக சாதனை கெடாத உணவு முறை
வீமபாகம் - பஞ்ச பாண்டவர்களில் வீமன் இயற்றிய பொதுவான சைவ, அசைவ உணவு முறைகள்
நளபாகம் - பொதுவான சைவ அசைவ உணவு முறைகள்
தேவபாகம் - தெய்வங்களுக்கு நைவேத்தியம் செய்யும் முறைகள்
இவற்றில் குருநாதர் கூறிய ஒரு சித்த பாக உணவு உதாரணத்தைக் கூறி இந்தக் கட்டுரையை முடிப்போம் .
பொதுவாக வெங்காயம் யோக சாதகர்களுக்கு ஒவ்வாத தாமஸ-ராஜச உணவு; தியானம் செய்யும் அனேகர் வெங்காயம் உண்ணக் கூடாது என்று கூறுவதைக் கேட்டிருப்பார்கள். ஆனால் இந்த தாமஸத்தை முறிக்கும் ஒரு இரகசியம் சித்த பாகத்தில் இருக்கிறது. அதுவேறொன்றும் இல்லை - பசுத்தயிர்/மோர்; பசுத்தயிரில் சேர்த்துச் சாப்பிடப்படும் வெங்காயம் தமோ ராஜஸ குணத்தை உண்டு பண்ணாது. பசுத்தயிர் (எருமைத் தயிர் அல்ல!) வெங்காயத்தின் குணத்தை முறிக்கும்!
இப்படி சித்த பாகம் அறிந்த யோகி தனது இக்கட்டான காலத்தில் பொதுவாகப் புசிக்கக் கூடாது என்று விலக்கப்பட்ட உணவுகளை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புசித்து அதன் குணத்தால் தனக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக இப்படியான அறிவினை பெற்றிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.