தமிழ் - சமஸ்க்ருதம் இரண்டு மொழிகளிலுமே ஒரு சொல்லைப் பயன்படுத்தும் போது அது தரும் பலன், கருத்து, அர்த்தம் இவற்றை அது கட்டாயம் குறித்துக்காட்டும்.
தகுந்த காரணம் இல்லாமல் எந்தச்சொல்லும் பயன்படுத்தப்படுவதில்லை.
ஆகவே சொற்களுக்கு பொருள் காண நான்கு வகை அர்த்தங்கள் பயன்படுத்தப்படும்.
1) வேர்ச்சொல்
2) பொதுப்பயன்பாட்டு அர்த்தம்
3) விஷேட அர்த்தம்
4) சம்பிரதாய அர்த்தம்
இதன் படி மேதா என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம்.
1. வேர்ச் சொல்: மேதா என்றால் முழுமை என்பது சமஸ்க்ருத அடிச் சொல்லின் விளக்கம், ஒன்றைப்பற்றிய முழுமையான அறிவு என்று பொருள்; ஒரு விஷயத்தில் மேதை என்றால் அந்த விஷயத்தில் முழுமையான அறிவு உடையவர் என்று அர்த்தம்.
2. பொதுப் பயன்பாட்டு அர்த்தம்:
ஒரு விஷயத்தை மறக்காமல் இருக்கும் ஞாபசக்தியுடையவனை மேதை என்று கூறுவர். அவன் பெரிய மேதாவி என்று கூறுவோமல்லாவா!
3. விஷேட அர்த்தம்:
இந்தச் சொல் மிக நுணுக்கமாக ஆயுர் வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் சொல்லிற்கான பொருள் இங்கு விஷேட அர்த்தம் என்று சொல்லப்படும். இந்த விளக்கப் பிரகாரம்தான் வரும் பதிவுகள் காணப்படும்.
அதுபோல் மஹா நாராயண உபநிஷத்தில் வரும் மேதா சூக்தத்தின் பொருள் காணும் போது அதன் ஆழ்ந்த பொருள் அறிய விஷேட அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும்.
4. சம்பிரதாய அர்த்தம்:
அறிவு அனுபவத்தின் மூலம் ஒவ்வொரு தலை முறையிலும் குருபாரம்பரியமாக சேகரிக்கப்படும். இந்த அறிவு அந்த சம்பிரதாயத்திற்குள் கவனமாக இருக்கும். அனேகமாக தகுதி அற்றவர்களுக்கு உபதேசிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் சம்பிரதாயத்திற்குள் தீக்ஷை பெற்றவர்களுக்கு உபதேசிக்கப்படுவது.
மேதா சூக்தத்திற்கு சம்பிரதாய அர்த்தமும் இருக்கும்.
இந்தப் பதிவுத் தொடர் வாசகர்கள் எந்தளவு ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மேதா சக்தி பற்றிய ஆயுர்வேத, மேதா சூக்த விஷேட அர்த்த அடிப்படையில் விளக்கலாம் என்று எண்ணியுள்ளோம்.
வெறுமனே Like போட்டு விட்டு கடந்து விடுபவர்களுக்காக எழுத முடியாது, ஆர்வமுள்ளவர்கள் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி Comment இட்டால் அது தரும் தூண்டலில் அடுத்த பதிவு வரும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.