நான் நூல்களைப் பற்றி நிறையப் பதிவு போடுவதால் நான் நூலறிவு நிரம்பப் பெற்றவன் என்ற நினைப்பில் என்னிடம் அந்தப் புத்தகம் இருக்கிறதா, இந்தப் புத்தகம் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு ஒரு பகிரங்க மடல்;
நான் அடிப்படையில் பிரயோக அறிவை எல்லாத் துறைகளிலும் தேடுபவன்; அதைத் துரிதமாகப் பெற ஏற்கனவே தொகுக்கப்பட்டுள்ள அறிவைப் படித்தறிந்து கொள்ள வேண்டும், அல்லது நேரம் வீணாகிவிடும் என்பதற்காக நூல்களை துணை நாடுகிறேன்.
வாழ்க்கையினை செம்மைப்படுத்தாத, பிரச்சனைகளைத் தீர்க்க உதவாத எதுவும் தேவையற்ற அறிவு தான்! அவை வீணான குப்பைகள்!
மனதிற்கு வேலை கொடுக்காவிட்டால் அது ஒரு குரங்காக அல்லது பேயாக மாறி விட்டால் ஆபத்து என்பதால் அதற்கு ஒரு நல்ல பழக்க வழக்கத்தை ஏற்படுத்தி ஒழுங்கிற்குள் வைக்க வேண்டும் என்ற பயிற்சிக்காக நூல் படிப்பதை முதல் தெரிவாக வைத்திருக்கிறேன்.
இதுதவிர இந்த நூலில் அப்படிச் சொல்லியிருக்கிறது, அந்த நூலில் அப்படிச் சொல்லியிருக்கிறது என்று உரையாடும் வகை அறிவாளி நான் அல்ல!
எனது தனிப்பட்ட அனுபவத்தினை அறிவாக மாற்றி அழகு சேர்க்கும், உறுதிபடுத்தும் அறிவினைப் பெறுவதே நான் நூற்கள் படிப்பதன் நோக்கம்.
படிக்கும் விஷயங்களில் எனது புரிதலை அனைவருக்குமாக பகிர்ந்து கொள்கிறேன்.
ஆகவே என்னை ஒரு நூலகராக எண்ணிக் கொண்டு அந்த நூல் இருக்கிறதா? இந்த நூல் இருக்கிறதா என்று கேட்பதை நீங்கள் தாராளமாகக் கேட்கலாம், தவறில்லை, ஆனால் பதிலளிப்பது எனது சுதந்திரம் என்பதை அறிந்திருப்பது அவசியம் என்பதற்கே இந்தப்பதிவு!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.