மலையகத்தின் முக்கியமான குளவி/தேனிப் பாதிப்பு பற்றி தனது அவதானங்களை தம்பி Thilojan VM பதிவிட்டுள்ளார்.
பொதுவாக தேனி கொட்டி இறப்பது என்பதற்குரிய நிபந்தனைகளைப் பற்றிய அறிவியல் காரணத்தை இத்துடன் சேர்த்துப் பதிவிடலாம் என்று எண்ணுகிறேன்.
ஒரு தேனியின் விஷம் எப்போது மரணத்தை ஏற்படுத்தும் என்றால் மனிதனின் ஒவ்வொரு கிலோ கிராம் நிறையிற்கு 2.8 மில்லி கிராம் தேனிக் கொடுக்கின் விஷம் ஏறியிருக்கும் சந்தர்ப்பத்தில்.
ஒரு மனிதனின் நிறை 80 கிலோ என்றால் அவன் தேனி கொட்டிச் சாவதற்கு 80 x 2.8 = 224 மில்லி கிராம் தேனி விஷம் அவனது உடலில் ஏறினால் அவன் இறப்பான்.
சராசரியாக ஒரு தேனியின் கொடுக்கில் இருக்கும் விஷம் 0.059 மில்லி கிராம்,
ஆகவே 80 கிலோ உள்ள ஒருவன் தேனி கொட்டி இறக்க வேண்டுமானால் அவனைக் கொட்ட வேண்டிய தேனிக்களின் எண்ணிக்கை 224/0.059 = 3796 தேனிக்கள்,
ஒரு தேன் அடையில் சராசரியாக இருக்கும் தேனிக்களின் அளவு 75000
ஆகவே ஒரு தேன் அடை கொல்லக் கூடிய 80 கிலோ நிறை உடைய மனிதர்களின் எண்ணிக்கை 19.
மேலும் தேனிகள் சுவாரசியமான நடத்தை உடையவை. தனது பின்கொடுக்கை உடலில் செலுத்தி apitoxin என்ற விஷத்தை செலுத்தும் இது, உடலில் கொடுக்கினை செலுத்தி விட்டு உடைத்துக் கொள்ளும். இது 10 நிமிடங்களுக்கு விஷத்தை செலுத்தும் ஆற்றல் இருக்கிறது. அனேகமான தேனிக்கள் (தேன் சேர்ப்பவை) தற்கொலைப் படைதான், கொடுக்கை எவ்வளவு ஆழமாக உடலில் செலுத்திவிடுவதில் உத்வேகமாக இருந்து அவற்றை வெளியே எடுக்கும். அவை உடையும்போது இறந்து விடும்! சிலது மென்மையான தோலுள்ளவர்களில் பிழைத்துக்கொள்ளும். அவற்றின் கொடுக்கின் அமைப்பு உடலிற்குள் நீண்ட நேரம் இருந்து விஷத்தைக் கக்கும்படி அமைந்துள்ளது. தேன் சேர்க்கும் honey bee க்களின் நடத்தை!
ஆகவே தோட்டங்களில் தேனிக்களை முகாமைத்துவம் செய்வது கவனமாகக் கையாளப்பட வேண்டிய அதிமுக்கிய பிரச்சனை!
இதைவிட குளவிகள் ஆபத்தானவை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.