நேற்றுக் காலை 03:30 இற்கு எழுந்து எமது கையால் சக்கரைப் பூசணிச் சமையல்! பின்னர் பண்ணைக்கு விஜயம்; கறியின் சுவை பற்றி மூவர் Review தருவார்கள்! {Nishānthan Ganeshan Thava Sajitharan & Jenojan Kanthasamy}
பூசணியை சுவையாகச் சமைப்பதில் நுட்பம் இருக்கிறது! அது சமையல் இரகசியம் அம்மாவுடன் போட்டி போடுவதற்காக இன்னும் அதை தனிப்பட்ட இரகசியமாகவே வைத்திருக்கிறேன்.
பூசணி தாவரங்களில் மிகப்பெரிய காயைத் தரும் தாவரம். இதனால் காய்களில் உயிர் சக்தி (பிராணன்) நிறைந்ததாக கருதப்பட்டது. இதனால் சடங்குகளில் உயிர் பலிக்குப் பதிலாக பாவிக்கப்படுகிறது.
சித்தாயுர் வேதத்தில் பூசணியின் குணத்தை அதன் சுவை, வீரியம், விபாகம் என்ற அடிப்படையில் முத்தோஷங்களிலும், எப்படி தாதுக்களிலும் வேலை செய்யும் என்ற விளக்கத்தை கீழே தருகிறோம்.
இது இயற்கை விவசாயத்தில் விளைந்த சக்கரைப் பூசணி
பூசணிக்காயின் குணம் பற்றி பதார்த்த குணம் கூறுவது!
இயற்கை விவசாயத்தில் விளைந்த பூசணி என்றால் நீங்கள் சித்த ஆயுர் வேதத்தில் கூறப்பட்ட பலன்களை எதிர்பார்க்கலாம். ஏனெனில் அந்த காலத்தில் உரமும், பீடை கொல்லிகளும் தெளிக்கவில்லை!
பெரும்பூசனிக் காய்க்குப் பித்தமோடு காய்ச்ச
லருஞ்சார நீர்க்கட் டருமே - மருந்திடுதற்
பித்தசுர மஸ்திசுரம் பேற்வறட்சி மேகமும் போம்
மெத்த வனிலமூறும் விள்
அனலழலை நீக்கு மதிபித்தம் போக்குங்
கனலெனவே வன்பசியைக் காட்டும் - புனலாகு
மிக்கவைய முண்டாக்கு மென் கொடியே யெப்போதுஞ்ச்
சக்கரப் பறங்கிக்காய் தான்
மென் கொடியாளே!
(எமது அனேக சாஸ்திரங்கள், சிவனார் தனது மனைவியான பார்வதிக்கு உபதேசித்ததாகவே எழுதப்பட்டுள்ளது}
பூசணிக்காய் பித்தத்தைத் தணிக்கும், உட்காய்ச்சல், உடல் சூடு இருந்தால், மூத்திர எரிச்சல் இருந்தால் நீக்கும். உடலில் விஷங்கள் இருந்தால் அவற்றை நீக்கும். பித்தம் அதிகரிப்பதால் வரும் காய்ச்சல், எலும்பு தாது வலுவிழப்பதால் வரும் காய்ச்சல், உடல் வரட்சி என்பவை நீங்கும்!
உடல் சூட்டைக் குறைக்க பூசணி நல்ல மரக்கறி!
அதைச் சுவையாக சமைத்து - பக்குவமாக்கி உண்பது நோய் தீரும் மருந்து!
இறுதியாக அறிவியல் பிரியர்களுக்கு,
health benefits of pumpkin என்று Google செய்யுங்கள்; தேவையான தகவல் கிடைக்கும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.