இணைக்கப்பட்டுள்ள படத்திலுள்ள பாடலை ஒரு தடவை படித்து விட்டு பதிவினை வாசிக்கவும்!
இந்த வைத்திய காவிய நூல் எப்படி உருவாகியதென்றால் மைந்தனே புலத்தியா (அகத்தியரின் சீடர்)
எல்லாவற்றிற்கும் மூலமான கணபதியைப் பாதம் பணிந்து,
நோய்க்குக் காரணமான மனதின் தமோ, சத்துவ ரஜோ குணங்கள் எப்படியெல்லாம் உடலைத் தாக்குகிறது என்பதை ஆராய்ந்து;
இதற்கு முன்னர் தொகுத்த அனுபவங்கள் எல்லாம் எழுதப்பட்டிருக்கும் வாகட நூற்களை எல்லாம் தொகுத்து,
சிவனார் தன் வாயால் கூறிய ஆகம விதிகளின் படி பூமியில் அடர்ந்த நோய்கள் எவையென்பதையும் அவை போகும் வழிகளான நல் மருந்துகளும் இந்த நூலிற் சொல்வேன்!
பாடல் சொல்லும் செய்தி;
1) வைத்தியன் தனக்கு மேலொரு சக்தி மூலமாக இருந்து நடாத்துகிறது என்ற எண்ணமுள்ளவனாக, அதன் பாதத்திற்கு பணிந்தவனாக இருக்க வேண்டும்.
2) நோய்க்குக் காரணம் மனதிலும், மனம் கொண்டிருக்கும் தமோ, ரஜோ, சத்துவம் என்ற முக்குணத்திலும் இருக்கும் என்பது அறிதல் வேண்டும்.
3) இதற்கு முன்னர் தொகுத்த வாகட நூற்களைக் தொகுத்துக் கற்க வேண்டும்.
4) இப்படித் தொகுத்து ஆராய்வதற்கு சிவனார் ஆகமத்தில் கூறிய 36 தத்துவங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
5) இதன் மூலம் இந்தப்பூமியில் மனிதனுக்கு ஏற்படக் கூடிய நோய்கள் எல்லாம் என்னவென்று தெரிந்து அவற்றிற்குரிய மருந்துகளைத் தெரிந்துகொள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.