நாம் என்ன நினைக்கிறோம்,
நான் இந்தப் பெண்ணை, பையனை, நண்பனை, எதிரியை என பலரைக் காண்கிறேன் என்று!
ஆனால் அது உண்மையா?
இல்லை, இல்லை நான் என்னையே இந்தப் பெண்ணாக, பையனாக, நண்பனாக, எதிரியாகக் காண்கிறேன்!
அது எப்படி (சாத்தியம்) ?
நீங்கள் - அனுபவிப்பவர் (experiencer) இல்லாமல் எப்படி இந்த உலகத்தின் இருப்பு சாத்தியமாகிறது?
நீங்கள் இருப்பதற்கு முன்னர் இது எங்கிருந்தது? நீங்கள் மறைந்த பின்னர் எங்கிருக்கப் போகிறது?
உண்மையில் நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்பதோ? எதை அனுபவிக்கிறீர்கள் என்பதோ ஒரு பொருட்டே இல்லை!
நீங்கள் காண்பதெல்லாம், அனுபவிப்பதெல்லாம் உங்கள் எண்ணங்களில் இருக்கிறது. நீங்கள் உங்களையே பார்க்கிறீர்கள். உங்களைத் (உங்கள் எண்ணங்களைத்) தவிர வேறு எதுவும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட உலகில் இருப்பதில்லை.
உண்மையை உணர்வது என்பது இந்த உலகை நாம் எமது எண்ணங்களால் அனுபவிக்கிறோம் என்பதாகும். அது வேறெங்கும் இருப்பதல்ல!
எனவே நீங்களே இந்த உலகத்தைப் (எண்ணங்களால்) படைக்கிறோம் என்பது உண்மையாகிறது, நீங்களே (எண்ணங்களால்) அதைக் காக்கிறீர்கள்! நீங்களே அதை (எண்ணங்களால்) கரைக்கிறீர்கள்!
ஆகவே உங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கிறதா?
ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி
(Dr. N. Nishtala Prahlada Sastry - former Nuclear scientist of TIFR)
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.