இன்று காண்பவர்கள் எல்லாரையும், பேஸ்புக்கில் எழுதுபவர்கள் எல்லாரும், அறிவுரை கூறுபவர்கள் எல்லோரையும் "குரு" என்று விளிப்பது ஒரு fashion!
இது முற்காலத்தில் எல்லோருக்கும் கடவுளின் பெயரான சுப்பிரமணியன், பரமசிவன் என்று பெயர் வைப்பது அந்த உயர்ந்த தத்துவத்தை நாளாந்தம் நினைவில் வைத்திருக்க ஏற்படுத்திய ஏற்பாடு என்ற நிலை போய் கொலையும், களவும் செய்யும் சுப்பிரமணியனும், வில்லன் பரமசிவமும் அதன் தத்துவங்களாக மாறிப் போனது போன்ற முட்டாள் தனம் இது.
என்.டி ராமராவ் கிருஷ்ணன் வேடம் போட்டார் என்பது மறந்து போய் என். டி ராமராவ் தான் கிருஷ்ணன் என்று நம்பும் மடையர் கூட்டம் போன்றது.
குரு என்ற தத்துவம் தந்திர சாஸ்திரத்தில் எப்படிப் பொருள் கொள்ளப்பட்டது என்பதை உபாச சிரேஸ்டர் அருட்சக்தி நாகராஜ ஐயா அவர்கள் தனது ஸ்ரீ வித்யா உபாசக தர்மம் என்ற நூலில் விளக்கியுள்ளார்.
ஆச்சார்யன் = யார் தனது நடத்தையாலும், பண்பாலும், செயலாலும் வழிகாட்டுகிறாரோ அவர் ஆச்சார்யன்.
பட்டாரகர் = யார் உலக பந்தங்களில் இருந்து எம்மை விடுவித்து, எம்மைத் துன்பங்களிலிருந்து ரட்சித்து கவருபவர்.
தேசிகர் = சீடனின் உபாசனா தெய்வத்தின் ரூபத்தில் கருணையைப் பொழிந்து வணங்கத்தக்க தகுதியுள்ளவர்.
மேற்குறித்த மூன்று வடிவங்களின் சேர்கையே குரு என்ற தத்துவம். யார் ஒருவரிடம் எமது ஆணவம், அகங்காரம் கரைந்து பரிபூரண சரணாகதி ஏற்படுகிறதோ, ஆன்ம முன்னேற்றத்தைத் தருகிறாரோ, அதனூடாக தன்னை உணர வைத்து பிரபஞ்ச உணர்வினை அடையச் செய்விக்கிறாரோ அவரே குரு எனப்படுவார்.
இப்படியில்லாமல் தகவல் களஞ்சியங்கள், அறிவாளிகள் எல்லோரையும் குரு என்று அழைப்பது அதன் உண்மையான பொருளிற்கு மாறானது. எம்மில் குழப்பத்தை தந்து உண்மை ஆன்ம முன்னேற்றத்தை தடுத்து விடும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.