குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 17, 2021

திருப்புகழ் கூறும் அருணகிரி நாதரின் சிவயோகம் - 01

 திருப்புகழ் கூறும் அருணகிரி நாதரின் சிவயோகம்

**************************************************************
தினகரன் சைவமஞ்சரியில் ஹம்ஸ யோகம் என்ற கட்டுரைத் தொடர் வருகிறது! இதைப் பார்த்த தம்பி விமலாதித்தன் அண்ணா அருணகிரி நாதர் திருப்புகழில் /சோதியுணர் கின்ற வாழ்வு சிவ மென்ற
ஸோகமது தந்து ...... எனையாள்வாய்// என்ற வரிகளில் ஸோகம் என்ற ஹம்ஸ யோகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் என்ற குறிப்பினைத் தந்தார்!
அந்த வரிகளை வைத்துக்கொண்டு கூகுளின் துணைகொண்டு பாடலை வலைவிரித்து தேடியாயிற்று!
பாடல் வருமாறு:
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து ...... தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து ...... பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று ...... தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப ...... தறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம லைந்து ...... திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று ...... தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து ...... எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற ...... பெருமாளே.
இந்தப்பாடல் அருமையான பாடல்! ஒரு பெண்ணி இன்ப பித்துக் கொண்ட போகி எப்படி யோகியாவான் என்ற process இனைச் சொல்லும் பாடல்!
யோகம் செய்ய எந்தத் தகுதியும் இல்லை என்று அகத்தில் நம்பிக்கையே இல்லாத ஒருவன் முருகன் அருளால் யோகியாக முடியும் என்று உரைக்கும் பாடல்!
முதல் ஆறுவரிகளிலும் தன்னிடமிருக்கும் பலவீனங்களைக் குறிப்பிடுகிறார், அதற்குப்பிறகு முருகனின் அருளால் வாசி யோக சித்தி, குண்டலினி யோகசித்தி, சிவயோக சித்தி, ஹம்ஸ யோக சித்தி ஆகியவற்றை தான் அடைந்த நிலையை மறைப்பாகப் பாடி வைத்திருக்கிறார்.
1. வம்பு செய்வது போன்று அடர்ந்து நெருங்கி வேலொத்த கண்களை உடைய பெண்களின் கவர்ச்சியில் இருந்து இன்னும் நான் விடுபடவில்லை
2. நல்ல மலர்கள் கொண்டு மாலையாக்கி பணிந்து பக்தி செய்யும் சரியை நிலையை இதுவரை கடைப்பிடித்ததில்லை
3. இந்தப் பிரபஞ்சத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை இயக்கும் ஆறுமுகத்தின் தத்துவம் என்னவென்றும் புரிந்தவன் நான் இல்லை
4. உனது ஆடும் மயில் என்பது மந்திர ரூபம் கலந்த வாசியின் இரகசியம் என்பதும் எனக்குப் புரியவில்லை
5. நாதமும், விந்துவும் இந்த உடலிற்குள் இருக்க அதை (வாசியால்) சேர்த்துக் கட்டி உயர் நிலை பெறத்தெரியாமல் அலைந்துகொண்டு இருக்கிறேன்.
6. நாகம் என்ற குண்டலினி எழுந்து சகஸ்ராரத்தைத் தாக்கி அதன் மணியாகிய அம்ருதத்தைப் பெற்று அந்த நிலையில் நின்றல்லவா உன்னைத் தொழவேண்டும், அதையும் நான் விருப்புடன் செய்யவில்லை!
7. சிவ வாழ்வு என்பது நாகம் என்ற குண்டலியை எழுப்பி சோதியை உணர்ந்து அதுவே நான் என்ற "ஸோகம்" என்ற அனுபவம் வாய்த்த நிலையை எனக்குத் தா
சூரபத்மனை வென்ற பழமுதிர் ச்சோலையில் உறையும் பெருமாளே!
இந்தப்பாடல் முருகனின் மயில் என்ற வாசியோகமும், அதனால் வாய்க்கும் நாதமணிகின்ற நாத நிலை எனப்படும் குண்டலினி யோகமும், சோதியை உணர்கின்ற சிவயோகமும், தானே அதுவென்று உணர்கிற ஸோகம் சாதனை எனப்படும் ஹம்ஸ யோகம் பற்றிப் பேசுகிறது!
ஓம் சரஹணபவ ௐ

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...