தனக்கு மேல் எதுவும்
இல்லாத அனைத்து ஞானத்தையும் தந்து இறைவனை அடைவிக்கும் வழி என்பது சர்வ ஞான உத்தர
ஆகமம் என்பதன் பொருள்! இது சிவபெருமான் முருகருக்கு உபதேசித்த நூலாக
கருதப்படுகிறது. இதன் மொழிபெயர்ப்பை இலங்கை சைவ நெறிக்கழகத்தினர் தமது தளத்தில்
தொகுத்து பகிர்ந்திருந்தார்கள்!
சர்வ ஞானோத்தர ஆகமத்தின் யோக
பாதம் படிக்கப்படிக்க இன்பமாக இருந்தது. அந்த அனுபவத்தை இங்கு பகிரலாம் என்பதே
இந்தப்பதிவு!
முதல் சுலோகம் எவருக்கு யோக
மார்க்கம் என்பது பற்றிய தகுதி முருகருக்கு உபதேசிக்கப்படுகிறது;
ஏகாகின்னஹ –
பற்றுக்களில் இருந்து விலகி ஏகாக்கிர சித்தம் உடையவன்
சாந்தஹ – தனக்கும்
மற்றவர்களுக்கும் எந்த ஆபத்தினையும் விளைவிக்காத மனமுடையவன்
வீரக்கினஹ – புலன்களையும்,
மனதினையும் அடக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வீர பாவம் உடையவன்.
யுக்தாஹார –
யோகத்திற்குத் தகுந்த அளவான உணவு உண்பவனும்
யுக்த சேஸ்தஸ்ய கர்மஸு
– தனது தினசரி கடமைகளை ஒழுங்காகச் செய்துகொண்டிருப்பவனும்
அளவாகத் தூங்குபவனும்,
விழிப்புணர்வுடன் இருப்பவனுமாக மேலே கூறப்பட்ட அனைத்துப் பண்புகளையுமுடைய சாதகன்
எனது யோக உபதேசத்தைக் கேட்கத் தகுந்தவர்கள் என்று சிவபெருமான் முருகனுக்கு
கூறுகிறார்.
இத்தகைய பண்புடையவன் மாத்திரமே தியானம் என்றால் என்ன என்பதை அறியவும், தியானத்தின் பலனைப் பெறவும், தியானத்தைப் பயிற்சிக்கவும், யோக சாதனை செய்யவும் தகுதியானவன். ஆத்மா தியானத்தை செய்பவன், தியானம் செய்யப்படுவது மனதால், தியானிக்கப்படும் பொருள் பரமசிவம், இத்தகைய தியானத்தால் அடையப்படுவது பரமசிவத்தின் சிவப்பண்புகள்; இதுவே சிவத்தியானத்தின் பலனும் ஆகும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.