ஆதியும் அந்தமும் இல்லா
அகத்தில் உறையும் ஈசன் எங்கள் குருநாதன்!
பிறப்பென்றும்
இறப்பென்றும் வலையில் சிக்காதென் குருநாதன்!
அன்பு கொண்டு
நினைக்கும் அனைவருக்கும் அருளும் எங்கும் நிறை குருநாதன்!
அகம் எனும் மனம்
செம்மையானால் மாத்திரமே யோகம் சித்தி என்றான் எங்கள் குருநாதன்!
ஸ்ரீ லலிதையின் ஆயிரம்
பிரபாவம் மானிடர்க்கு தந்தான் எங்கள் குருநாதன்!
வாசி மயில் ஏறி
சிவயோகம் கூட்டி பேரோளி நிலை அறிவிக்கும் எங்கள் குருநாதன்!
தமிழ் என்னும்
அமிழ்தின் ஆற்றலை வாதமாய், மருத்துவமாய், யோகமாய் வகுத்த கருணை நிறை கும்பமுனி
எங்கள் குருநாதன்!
அகத்தில் ஈசனை
இருத்தும் சிவயோகம் பயிற்றுவித்தான் எங்கள் குருநாதன்!
சித்தர்க்கெல்லாம்
தலைமை முனி எங்கள் குருநாதன்!
பெருஞ்சித்தன் சிவத்தின் அருள் பரிபூரணன் யோக சித்தி அருள் கருணைக் கடல் எங்கள் குரு நாதன்!
எழுதியவர்: ஸ்ரீ ஸக்தி
சுமனன், மார்கழி ஆயில்யம், சார்வாரி (02-Jan-2021)
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.