சுக்குக்கு மிஞ்சிய
மருந்துமில்லை;
சுப்பிரமணியருக்கு
மிஞ்சிய தெய்வமுமில்லை
தமிழ் என்றால் அழகு
அழகு என்றால் முருகு
தமிழில் முருக இலக்கியம் என்பது
சங்ககாலம் தொட்டு திருமுருகாற்றுப்படையில் ஆரம்பித்து தற்காலம் வரை நீண்ட
பாரம்பரியம் கொண்டது!
இதை ஆன்றோர்கள் அனைவரும் பக்தி இலக்கியமாகத்தான் கூறி வந்திருக்கிறார்கள்.
நாம் தமிழில் யோக இலக்கியம், மருத்துவ இலக்கியம் என்ற மரபுகள் இருக்கிறது என்பதையும், அவற்றை தமிழறிஞர்கள் கவனிக்கிறார்கள் இல்லை என்பதையும் அடிக்கடி கூறிவருகிறோம்!
ஆகவே இந்த யோக ஞான மரபின்படி முருக இலக்கியங்களைப் பற்றிய உரையாடல் களம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற நீண்டநாள் கனவை இந்த தைப்பூசத்தில் ஆரம்பிக்க திருவருள் கூடியுள்ளது.
எதிர்வரும் தைப்பூசத்திலிருந்து முருக இலக்கியங்களில் உள்ள யோக ஞானப்பாடல்களை ஆர்வமுள்ளவர்களுடன் கூடி zoom வழியே கற்கலாம் என்று அன்பர்கள் ஆர்வம் கொண்டுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியை திருப்புகழில் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டுவரும் ஆராய்ச்சி மாணவன், எமது சங்கத்தின் செயலாளர் திரு. விமலாதித்தன் அவர்கள் ஒருங்கிணைப்புச் செய்கிறார்.
தொடர்ந்து ஒவ்வொரு மாதம் பௌர்ணமி தினத்திலும், ஒரு சஷ்டித் திதியிலும் இரண்டு நிகழ்வுகளைத் தொடராக நடத்தலாம் என்று உத்தேசம்!
ஆகவே முருக இலக்கியத்தின் யோக
ஞானக் கருத்துக்களை கற்க விரும்பும் அனைவரும் இணைந்துகொள்க!
அழைப்பு கீழே;
Topic: சுப்பிரமணிய யோக
ஞானத்திறவுகோல் - 01
Time: Jan 28, 2021
07:45 PM Mumbai, Kolkata, New Delhi
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82715139558...
Meeting ID: 827 1513
9558
Passcode: 603262
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.