இன்று சித்த மருத்துவ தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!
சித்த மருத்துவத்தை
ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று எண்ணும் அன்பர்களுக்கு எனது கருத்தை பதிவிட
எண்ணுகிறேன்.
மூல நூற்கள்
தொடர்பானது;
1) சித்த மருத்துவத்தை
ஆய்விற்கு உட்படுத்தும் அளவிற்கு சித்த மருத்துவர்களுக்கு தமிழ்மொழிப் புலமை
இருக்கிறதா?
2) பாடல்கள் புரிய
தமிழ்மொழி அறிவிருந்தாலும் அவற்றில் மறைப்பாகக் கூறிய பரிபாஷை புரியும் ஆற்றல்
இருக்கிறதா?
3) ஒவ்வொரு பட்டதாரி
சித்த மருத்துவரும் மூல நூற்களை முயற்சியுடன் கற்றுக்கொண்டிருக்கிறார்களா? உத்தமராயன்
எழுதிய சித்த மருத்துவாங்கச் சுருக்கத்திற்கு மேலே என்ன புரிதலை கடந்த நாற்பது
ஆண்டுகளில் புதிதாக உருவாக்கியிருக்கிறோம்?
பாவனையில் இருக்கும்
மருந்துகள் பற்றி,
1) கைமுறையாக பல நூறு
ஆண்டுகள் பாவித்த முறைகளை அவற்றை பாவிக்கக் கூறிய நிபந்தனைகள் (பத்தியம்,
அனுபானம், துணை மருந்து) இவை எல்லா நிபந்தனைகளையும் கடைப்பிடித்து மருந்துகளை
ஆய்வுக்குட்படுத்துகிறோமா?
2) சித்த மருத்துவத்தை
சித்த மருத்துவ தத்துவ அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்த சித்த மருத்துவத்தின் மூல
தத்துவத்தை அறிவியல் ரீதியில் புரிந்திருக்கிறோமா?
3) திரிபலாவை western
medicine பாவிப்பதைப் போல் வெறுமனே இரண்டு மாத்திரை தினசரி காலை மாலை என்று
பாவிக்கச் சொல்லிவிட்டு அது ஈரலைப் பாதிக்கிறது, வயிற்றைக் குழப்புகிறது என்று
ஆய்வு முடிவு எழுதுகிறோமா? அல்லது மருந்து உண்ணும் விதியை முழுமையாக
கடைப்பிடிக்கச் சொல்லி அதன் விளைவை அறிவியல் ரீதியாக ஆராய்கிறோமா?
இவை அடிப்படையாக சித்த
மருத்துவத்தை முன்னேற்ற வேண்டும் என்று எண்ணும் பட்டதாரி சித்த மருத்துவர்கள்
சிந்திக்க வேண்டிய கேள்விகள்!
கேள்விகள்
சிந்தனைக்காக, சிந்தனை ஆய்வுகளைத் தூண்டும்! ஆய்வுகள் புது அறிவைத் தரும்! புது
அறிவு புரிதலை மேம்படுத்தும்! புரிதல் மேம்பட்டால் அது மனிதனுக்குப் பயனாகும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.