சைவர்களது சமய நூல் எது என்று மருத்துவர் திரு லம்போதரன் ஐயா அவர்கள் பதிவிட்டிருந்தார்!
இதைப்படித்த போது எனக்குத் தோன்றிய கருத்தினை இங்கு பதிவிட எண்ணுகிறேன்
சைவர்கள் அல்லது பாரதீய ரிஷி கலாச்சாரம் - ஞானத்தையும், அக அனுபவத்தையும் முதன்மையாகக் கொண்ட கலாச்சாரம் - எப்போதும் எதையும் பற்றிக்கொண்டிருக்கும் அடிமைப்படுத்தும் மார்க்கத்தைப் போதிக்கவில்லை!
அதனால் எப்போதும் ஒரு நூல்தான்
இறுதியான முடிவு என்று தம்மைச் சுருக்கிக்கொள்ளவில்லை!
மேலும் பிரக்ருதி இந்த
இயற்கையை, பரமசிவத்தை நோக்கி பரிணாமத்தில் உந்திக்கொண்டிருக்கிறது என்பதையும்,
அந்த உந்தலில் ஒவ்வொரு ஆன்மாவும் ஒவ்வொரு நிலையில் இருக்கிறது என்பதை நன்கு
அறிந்து வைத்திருந்தார்கள்!
உண்மையை அக உணர்வால் உணர வெளிப்பட்ட
திருஷ்டிகள் - பார்வைகள் - வேதங்கள்! வேதங்கள் ரிஷிகளின் நேரடி அக அனுபவம்!
இந்த அனுபவம் மற்றவர்களுக்கு,
ஒவ்வொரு ஆன்மாவிற்கும் வாய்க்க என்ன வழி? ஆகவேதான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் வெவ்வேறு
உத்திகள் தேவைப்படும் என்பதை அறிந்து அவற்றை ஏற்படுத்தினார்கள்.
இப்படி சிவத்தை நோக்கிப் போகும்
வழியைக் கூறுபவை ஆகமங்கள் என்றும்! சிவத்தை நோக்கிச் செல்லுவதற்கான உத்திகள்
தந்திரங்கள் - சக்தி மார்க்கம் என்றும் வகுக்கப்பட்டது!
ஆகவே சைவர்கள் - சிவத்தை நோக்கிச்
செல்லும் process & techniques ஐப்பற்றியே அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்!
அவரவர் பரிபக்குவத்திற்கேற்ப ஏதோ
ஒரு ஆகமமோ, அல்லது ஒரு ஆகமத்தில் சரியா, கிரியா, யோக, ஞான பாதமோ வழிகாட்டும்!
இப்போது சைவத்தில் தீக்ஷா மார்க்கமும், யோக மார்க்கமும் மறைந்துவிட்டதால் யதார்த்த
சைவம் அனுபவத்தில் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்பது எனது சிற்றறிவிற்கு
தோன்றிய எண்ணங்கள்!
சைவம் பயிற்சிக்குரிய வாழ்வியல்
முறையாக வர வேண்டும்! ஒவ்வொரு சாதகனின் அகப்பக்குவம் அறிந்து அதற்குத் தகுந்த
சரியை, கிரியை, யோகம், ஞானம் போதிக்கப்பட்டு அதற்குரிய ஆகமங்களை அவனுக்குரிய
customised நூலாக வழிகாட்டப்பட வேண்டும்! அப்போது யதார்த்த வழிகாட்டலாக இருக்கும்!
இது தற்போது சர்வ ஞானோத்தர ஆகமம் படிக்கும் போது மனதில் தோன்றிய சிந்தனை! பகிர்வது சிந்தனைக்காக விவாதத்திற்கு அல்ல!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.