ஊனில் உயிர்ப்பை
யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி
நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து
வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.
இது திருஞானசம்பந்தப் பெருமானாரின் பஞ்சாக்கர திருப்பதிகத்தின் மூன்றாவது பாடல்!
அஞ்செழுத்து -
பஞ்சாட்சரம் எப்படி யோக சாதனைக்கு உதவும் என்பதை விளக்கியுள்ளார்;
1) ஊனில் உயிர்ப்பை ஒடுக்கும் - ஸ்தூல பஞ்சாட்சர ஜெபம் உடலில் உள்ள பிராணனின் ஓட்டத்தை சீராக்கும். ஊன் என்றால் உடல், உயிர்ப்பு என்றால் இயக்கும் பிராணன். இவை இரண்டும் சீராக இயங்கினால் உடல் ஆரோக்கியம், வீணாகினால் நோய், துன்பம்! ஒடுங்கினால் யோகம். ஆக அஞ்செழுத்து மந்திரம் ஊன்வழி பிராணனை வீணாக்காமல் ஒடுக்கி வாசியாக்கி, சிவத்தை நோக்கிச் செலுத்தும் வல்லமை உள்ளது.
மேலே பிராணன் உடலில் ஒடுங்கத் தொடங்கினால் என்ன நிகழும் என்பது இரண்டாவது வரி.
2) ஒண் சுடர்
ஞானவிளக்கினை ஏற்றி - ஒண் என்றால் மிகுதியான என்று பொருள், பிராணனை ஒடுக்கும் யோகி
கண்களை மூடினால் அவன் அகக்கண்களால் ஒளிவெள்ளம் காண்பான், இதை சிவயோகத்தில் சிவஜோதி
என்று கூறுவர். ஆக சாதகன் திருவைந்தெழுத்தால் பிராணன் வீணாகுவதை ஒடுக்கினால் அவன்
தனது புருவமத்தியில் மிகுந்த ஒளியுடன் கூடிய விளக்கினை ஏற்றுவான்! இது
திருவைந்தெழுத்துத் தரும் இரண்டாவது சித்தி; புருவமத்தியில் ஒளி காணுதல்.
இப்படி புருவமத்தியில்
ஒளி கண்டால்,
3) நன்புலத் தேனை
வழிதிறந் தேத்து வார் - நன் புலத்து என்னை வழி திறந்து ஏத்துவார் என்று கொண்டால்,
புலன்கள் வழி செல்லாமல் சிவத்தை நோக்கிச் செல்லும் வழியை திறந்து மேலே ஏற்றுவார்களுக்கு
இடர் எதுவும் வராமல் காப்பது திருவைந்தெழுத்து என்கிறார்.
இதன் யோக விளக்கம்
திருவைந்தெழுத்தை சாதகம் செய்யும் ஒருவன் முதலில் பிராணன் வீணாகும் நிலையிலிருந்து
மீண்டு உடலில் பிராணன் ஒடுங்கி ஆதாரங்கள் சுத்தியாகி, புருவமத்தியில் ஒளிகாணும்
நிலையைப் பெறுவான். இப்படி சாதனை செய்யும் போது புலன் வழி செல்லாமல் சிவத்தில்
சிந்தை இருத்தி யோகம் செய்வது அவசியம்,
புலன் வழி சென்றால் யோகம் கெட்டு இடர் வரும், அத்தகைய புலன் அடக்கத்தையும் தந்து
ஒருவனின் யோக சாதனையைக் காப்பது திருவைந்தெழுத்து ஜெபமே!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.