திருவைந்தெழுத்து
என்பது அனைவருக்கும் வெளிப்படை; இது ஒவ்வொரு சாதகரின் பரிபக்குவத்திற்கு ஏற்ப
ஸ்தூல, சூக்ஷ்ம, அதிசூக்ஷ்ம என்று சாதகம் செய்ய வேண்டிவரும்! இது அவரவர் குரு
உபதேச நெறி நிற்றல் நலம்!
இங்கு திருஞானசம்பந்தப்பெருமான் தனது பஞ்சாக்கரத் திருப்பதிகத்தில் திருவைந்தெழுத்தின் மகிமை பற்றிக் கூறியதை அனுபவித்தவற்றைப் பகிர்வது நோக்கம்!
ஒவ்வொரு பாடலும் பஞ்சாட்சர ஜெபத்தின் சித்தி தரும் பலனைக் கூறுகிறது.
முதல் பாடல்:
துஞ்சலும் துஞ்சலி லாத
போழ்தினும்
நெஞ்சகம் நைந்து
நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த
வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ
ழுத்துமே
இந்தப்பாடலில் திருஞானசம்பந்தர்
தான் விழித்திருக்கும் போதும், உறங்கும் போதும் நெஞ்செல்லாம் திருவைந்தெழுத்தை
நிரப்பி சாதனை செய்து வருகின்றேன், இந்தத் திருவைந்தெழுத்தின் மகிமை என்னவென்றால்
அற்ப ஆயுள் கொண்ட மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவிடாமல் கூற்றுவனை உதைத்த பரமாகிய
சிவத்தின் ஆற்றலை எனக்குள் தருவது! ஆகவே இந்த திருவைந்தெழுத்தை செபிக்கும்
எனக்கும் அந்த அருட்சக்தி கிடைக்கிறது என்கிறார்!
ஆகவே பஞ்சாட்சர ஜெப சித்தி ஆயுள்
வளர்ச்சி, அற்பாயுள் நீங்குதல், சிவனருள் பெறுதல் என்பதைக் கூறுகிறார்.
இரண்டாவது பாடல்
மந்திர நான்மறை யாகி
வானவர்
சிந்தையுள் நின்றவர்
தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை
வேதியர்க்
கந்தியுள் மந்திரம்
அஞ்செ ழுத்துமே.
எல்லாவிதமான மந்திரங்களாக விரிந்ததும்
பஞ்சாட்சரம் தான்! நான்கு வேதங்களாக ரிஷிகள் திருஷ்டித்ததும் பஞ்சாட்சரத்தின்
விரிவுதான்! எமக்கு கண்களுக்குத் தெரியாமல் பாதிக்கும் நுண்ணிய அபௌதீக சக்திகளை
தேவர்கள் என்கிறோம், இவர்கள் இயங்குவதற்குரிய அறிவும் அவர்களுக்குள் பஞ்சாட்சர மந்திரத்தின்
ஆற்றல் இருப்பதால்தான்! அக்னியை தினசரி போற்றி அந்தியில் செய்யும்
சந்தியாவந்தனத்திற்குள் இருக்கும் மந்திரமும் பஞ்சாட்சரம்தான்.
இந்தப்பாடல் முழு அறிவும்
பஞ்சாட்சரத்தின் விரிவு என்பதைக் கூறி நிற்கிறது. இதில் இறுதி வரியில்
பாவிக்கப்பட்டிருக்கும் அந்தியுள் என்ற சொல் மிக அருமையான சொற்பிரயோகம்!
சந்தியாவந்தனத்திற்குள் ஒவ்வொரு வேதியனும் தேடும் அந்த புத்தியைத் தூண்டும் பேரொளி
இந்த சிவம்தான் என்பதை நுண்மையாகக் கூறியிருக்கிறார்.
ஆகவே திருவைந்தெழுத்து மந்திர சாதனை எல்லா மந்திரங்களுக்கும் மூலமானது, வேதங்களின் தோற்றுவாய் சப்தமாகவும், அனைத்திற்குள்ளும் அறிவைத் தூண்டுவது, செந்தழல் யாகம் வளர்த்து சந்தியாவந்தனம் செய்வது இந்த சிவத்தினை அடைவதற்கு என்ற பொருளை இந்தப்பாடல் சுட்டி நிற்கிறது!
ஒரு சாதகன் திருவைந்தெழுத்தை முறையான உபதேசத்துடன் சாதகம் செய்துவருவானேயானால் அவனிற்கு எல்லா மந்திரங்களின் சித்திகளும், வேதங்களின் அறிவும், நுண்ணிய தேவர்களின் அருளும் கிட்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.